அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் சிறப்பானவை. வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் மக்களை மீளக்குடியமர்த்த எடுத்த துரித நடவடிக்கையானது பாராட்டுக்குரியது என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார். பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட மத குருமார் நேற்று முன்தினம் (22) அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோதே பேராயர் மேற்கண்டவாறு கூறினார். யாழ். ஆயர் தோமஸ் செளந்தர நாயகம் மேற்படி செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கும் அனைத்து அமைச்சுக்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். நிலக்கண்ணிவெடி அகற்றல் மிகவும் கவனமாக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கை என்பதால் மீள் குடியேற்றம் எளிதான செயற்பாடு அல்ல என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் கலந்துகொள்ள திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை இதே கருத்தை கூறினார். ஜீவனோபாய மார்க்கங்களுக்கு உதவுவது பற்றியும் அவர் கூறினார்.
மீன்பிடி கைத்தொழிலுக்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள், குடிநீர் ஆகியவற்றை விநியோகிக்க உலக உணவு அமைப்பின் கீழ் நிதி உதவி அவசியப்படுவதாகவும் கத்தோலிக்க குருமார் இங்கு சுட்டிக்காட்டினர்.
பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டிருந்த பெரும்பாலான இடங்கள் இப்போது அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் இடங்களுக்கு மாற்aடாக வேறு இடங்களை பெற்றுக்கொடுக்க அல்லது நஷ்டஈடு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படு வதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின்போது பிரதமர் தி.மு. ஜயரட்ன, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, மீன்பிடி கைத்தொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோர் உடனிருந்தனர்.
0 commentaires :
Post a Comment