8/22/2010

உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறாமல் சிங்களத் தலைவர்களே தீர்வுக்குத் தடை என்று சொல்லிக்கொண்டிருப்பது மக்களை ஏமாற் றும் செயல்.

இலங்கையில் நீண்ட காலமாகத் தீர்வின்றியிருக்கும் ஒரேயொரு பிரச்சினையாகத் தேசிய இனப் பிரச்சினையே உள்ளது. அரச கரும மொழிச் சட்டம், மொழிவாரித் தரப்படுத்தல், கறுப்பு ஜுலை இனசங்காரம் போன்ற சுதந்திரத்துக்குப் பிந்திய சில நிகழ் வுகளால் இனப் பிரச்சினை தீவிர பரிமாணத்தைப் பெற்ற போதிலும் பிரச்சினையின் தோற்றம் சுதந்திரத்துக்கு முந்தியது. சுதந்திரத்துக்கு முன்னரே இனப் பிரச்சினை தோன்றியதால் தான் ஐம்பதுக்கு ஐம்பது என்ற சமபிரதிநிதித்துவக் கோரிக்கை எழுந்தது.
இந்திய வம்சாவளியினரின் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப் பட்டமை தேசிய இனப் பிரச்சினைக்குச் சற்றும் குறைவற்ற முக்கிய பிரச்சினையாகும். இப் பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்பட்டு விட்டது. ஆனால் இனப்பிரச்சினை இன்னும் தீர்வின்றி இழுபறி நிலையிலேயே இருக்கின்றது.
சிங்கள இனவாதத் தலைமைகளே இனப்பிரச்சினை தீராமலிருப்பதற்குக் காரணம் என்று தமிழ்த் தலைவர்கள் கூறுவது பல கேள்விகளை எழுப்புகின்றது. காலத்துக்குக் காலம் பதவிக்கு வந்த அரசாங்கங்க ளையே தமிழ்த் தலைவர்கள் சிங்கள இனவாதத் தலைமைகள் என்று கூறுகின்றார்களா? இந்திய வம்சாவளியினர் வாக்குரிமையையும் பிர சாவுரிமையையும் பெறுவதற்கு இத் தலைமைகள் ஏன் தடையாக இருக்கவில்லை? இந்திய வம்சாவளி மக்களின் தலைவர்கள் பின்பற் றிய அணுகுமுறைக்கும் இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் பின்பற்றிய அணுகுமுறைக்கும் இடையிலான வேறுபாடு தான் இனப்பிரச்சினை தீராமலிருப்பதற்குக் காரணமா?
இனப் பிரச்சினையின் தீர்வுக்கு மிக அண்மை வரை நாம் சென்றிருக் கின்றோம். பண்டா - செல்வா ஒப்பந்தம், ஐக்கிய முன்னணி அரசா ங்கத்தின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு, பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் என்பனவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம். முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் முக்கிய மான சரத்துகளை அதில் உள்ளடக்கலாம் என்று அன்றைய அரசாங் கம் விடுத்த அழைப்பைத் தமிழரசுக் கட்சி நிராகரித்துவிட்டது.
தீர்வுக்கு அண்மையில் சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தலை வர்களின் தூர நோக்கற்ற முடிவுகளால் இழந்திருக்கின்றோம். இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறாமல் சிங்களத் தலைவர்களே தீர்வுக்குத் தடை என்று சொல்லிக்கொண்டிருப்பது மக்களை ஏமாற் றும் செயல்.
இப்போதும் தலைவர்கள் மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவதாக இல்லை. இன்றைய நிலையில் இறுதி அரசியல் தீர்வை உடனடியாகப் பெறுவது சாத்தியமில்லை. உடனடியாக எந்தத் தீர்வு சாத்தியமோ அதை ஏற்றுக்கொண்டு இறுதித் தீர்வுக்கான முயற்சியை முன்னெடு ப்பது தான் சரியான அணுகுமுறை. இதுதான் தயார்த்தம் என்ற உண் மையை எடுத்துக் கூறாமல் வடக்கும் கிழக்கும் இணைந்த இறுதித் தீர்வைத் தவிர வேறெதையும் ஏற்கப் போவதில்லை என்று கூறுவது மக்களுக்கு உண்மையை மறைத்து அவர்களைத் தவறாக வழிநடத் தும் செயல். உடனடியாக இறுதித் தீர்வைப் பெறுவதற்கான சாத்தியம் இருக்கின்றதென அவர்களை நம்ப வைக்கும் செயல். இதனால் தலைவர்கள் நன்மையடையலாம். மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை.
வீணான நம்பிக்கைகளை மக்களிடம் தோற்றுவிக்கும் வகையில் செயற் படுவது அவர்களைப் படுகுழியில் தள்ளுவதற்குச் சமன். தலை வர்கள் மக்களுக்கு உண்மையைக் கூறி அதற்கேற்ற விதத்தில் செய ற்படும் போது தான் விமோசனப் பாதை விரியும்.

0 commentaires :

Post a Comment