8/29/2010

கிழக்கு மாகாணத்தில் போலி மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . - முதலமைச்சர் சி. சந்திரகாந்தன்.

கிழக்கு மாகாணத்தில் விற்பனை மற்றும் தயாரிக்கப்படுகின்ற அனைத்துப் பொருட்களும் தரமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சம்பந்தப்பட்ட சகல திணைக்களத்தலைவர்கள் அதிhரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். இன்று செங்கலடி கூட்டுறவுச் சங்கத்தின் கிளைகளில் ஒன்றான சித்தாண்டி கூட்டுறவுக் கிளைக்கு திடீரென விஜயம் செய்த முதலமைச்சர் அங்கு விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான பொருட்கள் காலாவதியானவை எனக் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர், செங்கலடி கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர், அப்பிரதேச்த்தின் தவிசாளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை உடனடியாக அழைத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளும்படி பணித்தார். இதன் பின்னர் சகல பொருட்களும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் பரீட்சிக்கப்பட்டு, கடைக்கும் சீல் வைக்கப்பட்டு குறித்தகிளையின் முகாமையாளரான க. சத்தியசீலன் எதிர்வருகின்ற திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார். இதனையடுத்தே முதல்வர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் போலி மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்தோடு கிழக்கு மாகாணத்திற்குள்ளான திணைக்களகங்களாக இருந்தால் அதிகூடிய தண்டணை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டடார். இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பரசாந்தன் அவர்களமு; பங்கேற்றிருந்தார்.
img_5209

0 commentaires :

Post a Comment