மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தையை இம்முறை நேரகாலத்துடன் ஆரம்பிக்க மலையகத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் தொழிற்சங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் - பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
இதற்கு முன்பு உடன்படிக்கையைப் புதுப்பித்தபோது அது காலாவதியாகி சில மாதங்கள் கடந்த பின் னரே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. எனவே, இம்முறை அவ்வாறான நிலையைத் தவிர்ப்பதற்காக நேர காலத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஆலோசித்து வருவதாகப் பிரதியமைச்சர் கூறினார்.
முதலாளிமார் சம்மேளனத்துடனான இரண்டு வருட கூட்டு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலாவதியாகிறது. எனினும், உடன்படிக்கை முடிவுற்றுப் புதிய மாதத்திலிருந்து தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்கும் வகையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுமென்று அவர் கூறினார்.
0 commentaires :
Post a Comment