8/19/2010

களுவாஞ்சிக்குடியில் இன்று நடந்த டெங்கு விழிப்பு பேரணி _


 
 
  மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் இன்று காலை பாரிய டெங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் வீதி பேரணியும் இடம்பெற்றன.

களுதாவளை கல்வி அபிவிருத்திச்சபை, சுகாதார திணைக்களம், கல்விதிணைக்களம், விளையாட்டுக்கழகங்கள் என்பவற்றுடன் இணைந்து இப்பாரிய டெங்கு ஒழிப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்திருந்தது.

களுதாவளை பிரதான வீதியில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட ஊர்வலம் சுமார் இரு மணிநேரம் பல்வேறு வீதிகளூடாகச் சென்று களுதாவளை மஹாவித்தியாலயத்தை அடைந்தது.

ஏராளமான மாணவர்கள், பொது சகாதார பரிசோதகர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்

0 commentaires :

Post a Comment