மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேந்திரன், எஸ். யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தின் தலைவர் கே. ஜெய ராஜா ஆகியோரை எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பில் கடந்த புதன் கிழமை கிழக்கு மாகாண வேலை யற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை யின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயகக் குடியரசு அரசுக்கு எதிராக வேலைவாய்ப்பு வழங்கக்கோரி பதாகைகளை ஏந்திய வாறு பொலிஸ் அனுமதி பெறாமல் வீதியில் ஊர்வலம் சென்றதாகவும் ஊர்வலத்தைக் கலைப்பதற்கு நீதி மன்ற உத்தரவைப் பெற நேரம் போதவில்லை என்றும் காத்தான் குடி பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment