8/17/2010

ரஷ்ய ஜனாதிபதி தலைமையில் மாநாடு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் ஜனாதிபதிகள் பங்கேற்பு

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ் தான் ஜனாதிபதிகளை உள்ளடக்கிய மாநாடொன்றை நடத்த ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மெத்விடிவ் தீர்மானித்துள்ளார். இந்த மாநாடு ரஷ்யாவை அண்மித்துள்ள சொகி என்ற இடத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக இம்மாநாடு விசேட கவன மெடுக்கும்.
அண்மையில் வெளிநாட்டுப் பய ணங்களை மேற்கொண்டிருந்த பாகிஸ் தான் ஜனாதிபதிக்கு உள்நாட்டில் கடுமை யான எதிர்ப்புக் கிளம்பியது. வெள்ளத்தால் நாட்டு மக்கள் பலியாகிக் கொண்டிருக்கை யில் சர்தாரியும், குடும்பமும் உல்லாசப் பயணங்களிலீடுபட்டுள்ளதாக மக்கள் விமர்சித்தனர். இதையடுத்து அவர் பய ணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும் பினார். புதன்கிழமை மாநாட்டில் பங் கேற்கும் போது இவ்வாறான எதிர்ப்புகள் ஏற்படலாம்.

0 commentaires :

Post a Comment