8/27/2010

வெகுஜன போராட்டம் நடாத்தப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எச்சரிக்கை.


sahajamமர்மமான முறையில் காணாமல் போயுள்ள தமது கட்சியினர் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அவர் மூன்று தினங்களுக்குள் விடுதலை செய்யாத  பட்சத்தில் அவரை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் வெகுஜன போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மத்திய செயற்குழு சார்பாக அக்கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜாவினால் விடுக்கப்பட்டுள்ள் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கடந்த சனிக்கிழமை இரவு முதல் குறித்த உறுப்பினர் காணாமல் போன சம்பவமானது சமாதானத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதுடன் மனிதாபிமானம் அற்ற ஜனநாயக விரோத செயலாகவும் இது அமைகின்றது. அத்துடன் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காணாமல்  போயுள்ள மாநகர சபை உறுப்பினரை கடத்தியவர்கள் உடனடியாக விடுதலை செய்து மட்டக்களப்பு மாநகரின் சுமுகமான சூழ்நிலையினை பாதுகாக்க வேண்டும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment