ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறி அரசாங்க பாராளுமன்றக் குழுவில் இணைந்திரு க்கும் பிரபா கணேசன் தனது இந்த முடிவுக்கான காரணத்தை விளக்கி வெளியிட்ட அறிக்கையில் சொல் லப்பட்டுள்ள விடயங்கள் நிதானமான சிந்தனைக்கு உரியவை. பாராளுமன்ற உறுப்பினர் கூறிய காரணங்க ளுள் பின்வரும் இரண்டு முக்கியமானவை.
எதிர்ப்பு அரசியல் மூலம் சிறுபான்மையினரின் உரிமை களை வென்றெடுப்பது சாத்தியமில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதன் மூலம் தமிழ் மக் களுக்குக் கிடைக்கப்போவது எதுவுமில்லை.
தமிழ் மக்களின் அரசியலில் மிகக் கூடுதலான காலம் எதி ர்ப்பு அரசியலிலேயே கழிந்துவிட்டது. இனப் பிரச் சினை கூர்மையடைந்த அண்மைக் காலத்திலும் அவ் வாறே. இடையில் இரண்டு வருடங்களைத் தவிர, கட ந்த பதினாறு வருட காலத்தில் எதிர்ப்பு அரசியலிலேயே தமிழ்த் தலைவர்கள் ஈடுபட்டார்கள். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதையும் அவர்கள் பெற்றுக் கொடுக்கவி ல்லை.
மக்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களைத் தவிர்க்க வும் அவர்களால் முடியவில்லை. இக் காலப் பகுதியில் இணக்க அரசியலில் இத் தலைவர்கள் ஈடுபட்டிருப்பார் களேயானால் பல உரிமைகளைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடிந்திருக்கும். அதற்கான சந்தர்ப்ப ங்கள் கிடைத்தன. எதிர்ப்பு அரசியல் காரணமாக அவ ற்றைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்துவிட்டார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்களின் நண்பன் என்ற ஒரு மாயை திட்டமிட்டு வளர்க்கப்பட்டுவிட்டது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினால் தமிழ் மக்கள் இதுவரை எந்த நன்மையையும் அடையவில்லை. தமிழ் மக்களை திருப்திப்படுத்துவதற்காக இடது கையால் கொடுப்பதும் பின்னர் வலது கையால் பறிப்பதுமான நடைமுறை யையே ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்றி வந்திருக்கின் றது.
தமிழரசுக் கட்சியுடன் 1965ம் ஆண்டு செய்துகொ ண்ட மாவட்ட சபை ஒப்பந்தத்தையும் இந்திய- இல ங்கை ஒப்பந்தத்தின் கீழ் அமைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையையும் உதாரணமாக கூறலாம். இதை விட, தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய திட் டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாறாகப் பதிவாகியுள்ளது.
பண்டா- செல்வா ஒப்பந்தத்தையும் பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தையும் உதாரணமாக கூறலாம். இதுவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் இனப் பிர ச்சினையின் தீர்வுக்கான ஆலோசனையை முன்வைக் காத ஒரேயொரு தேசியக் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி உள்ளதென்பதையும் இங்கு குறிப்பிடுதல் வேண் டும்.
ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதனால் தமிழ் மக்களு க்குக் கிடைக்கப்போவது எதுவுமில்லை என்று பாராளு மன்ற உறுப்பினர் பிரபா கணேசன் கூறியதையே பாரா ளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனும் கூறினார். இப்போது அவர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவு ஏற்படுத்த முயற்சிப்பது அவரது சொந்த நலன் சார்ந்ததாக இருக்கலாம்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் சிறுபான்மையின மக்களு க்கு எவ்வித நன்மையும் இல்லை என்பதைப் பிரபா கணேசனின் அறிக்கை தெளிவுபடுத்துகின்றது. இதே போன்ற காரணங்களையே நுவரெலியா மாவட்டப் பாரா ளுமன்ற உறுப்பினர் திகாம்பரமும் கூறியிருந்தார்.
சிறுபான்மையின மக்களின் விமோசனம் நிதானமாகச் சிந் தித்துச் சரியான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பதி லேயே தங்கியுள்ளது.
0 commentaires :
Post a Comment