8/11/2010

கற்றுக் கொண்ட பாடங்களும், நல்லிணக்கமும்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முதலாவது பொது அமர்வு இன்று

கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முதலாவது பொது அமர்வு இன்று (11) காலை 9.30 இற்கு ஆரம்பமாகிறது.
கொழும்பு ஏழு, ஹோட்டன் பிளேஸ் இலக்கம் 24ல் அமைந்துள்ள மூலோபாய கற்கைகளுக்கும் சர்வதேச உறவுகளுக்குமான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் விசாரணை ஆரம்பமாகிறது.
ஆரம்ப விசாரணையின் போது வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும், முன்னாள் சமாதான செயலகத்தின் பணிப்பாளரும், பிரித்தானியாவுக்கான முன்னாள் தூதுவருமான பர்னாட் குணதிலக மற்றும் கலாநிதி நல்லநாயகம் ஆகியோர் சாட்சியமளிப்பார்கள், என்று மேற்குறிப்பிட்ட ஆணைக்குழுவின் இணைப்புச் செயலாளர் ஜீ.ஏ.
குணவர்தன ‘தினகரனு’க்குத் தெரிவித்தார். இன்றைய ஆரம்ப நிகழ்வில் விசாரணை ஆரம்பமாகுவதற்கு முன்னதாகக் குத்து விளக்கு ஏற்பட்டதன் பின்னர், ஆணைக் குழுவின் அதிகாரங்கள் பகிரங்கப்படுத் தப்படும். அதனைத் தொடர்ந்து முதலில் பர்னாட் குணதிலக சாட்சியமளிப்பார். அவரையடுத்து கலாநிதி நல்லநாயகம் சாட்சியங்களை வழங்குவாரென்று கூறிய இணைப்புச் செயலாளர், இவர்கள் இருவரும் அழைக்கப்பட்ட சாட்சியாளர்க ளாகத் தகவல்களைப் பெற்றுக் கொடுப் பார்கள் என்று கூறினார்.
இனப்பிரச்சினை ஏற்படுவதற்கான காரணத்தைப் பற்றி இவர்கள் அறிந்தவற்றை ஆணைக்குழு முன் சாட்சியமாக முன்வைப்பார்கள் என்று குணவர்தன தெரிவித்தார்.
நாளைய தினம் (11) இடம்பெறும் விசாரணையின் போது கொட்பிறி குணதிலக மற்றும் இரந்தி விஜேமான்ன ஆகியோர் சாட்சியமளிப்பார்கள். அதனைத் தொடர்ந்து 17ம் 18ம் திகதிகளிலும் 23ம் 25 ம் திகதிகளிலும் விசாரணைகள் நடைபெறும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் வவுனி யாவில் பொது அமர்வு நடைபெறுவ தாகவும் ஆணைக்குழுவின் இணைப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.
கற்றுக் கொண்ட பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, 2002ம் ஆண்டிலி ருந்து இறுதிக்கட்டப் போர் வரை இடம்பெற்ற சம்பவங்களையும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணத்தையும் எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

0 commentaires :

Post a Comment