8/09/2010
| 0 commentaires |
‘தமிழ் மக்களிடமிருந்து விரைவில் ஐக்கிய தேசிய கட்சி அந்நியப்படும் - பிரபா கணேசன்
கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் இருந்து ஐ. தே. க. அந்நியப்பட்டுப் போகும் என்று ஜனநாயக மக்கள் முன்னிணியின் தேசிய அமைச்சாளர் பிரபா கணேசன் எம். பி. தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது அவர்கள் தமது கட்சியுடன் நிச்சயம் அணிதிரள்வார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் பிரபா கணேசன் எம்.பி. தினகரனுக்குக் கூறினார்.
‘வெட்டினால் ஐக்கிய தேசிய கட்சியின் ரத்தம் ஓடுவது தெரியும் என்று கூறும் தமிழர்கள் கொழும்பில் இன்னமும் இருக்கிறார்கள்.
அவர்கள் எமது தனித்துவக் கட்சியை ஆதரிக்கும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம்’ என்றும் பிரபா கணேசன் குறிப்பிட்டார்.
‘நாட்டில் இன்று மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தமிழ் மக்களுக்கும் சமமாகச் செல்ல வேண்டும். அதனைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்க்கும் பழைமையை இன்னமும் கைக்கொண்டால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை’ என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ள தனிக் கட்சிகளுக்கு இனி அந்தக் கட்சியில் உரிய கெளரவம் கிடைக்காது என்று தெரிவித்த பிரபா கணேசன், அவ்வாறான தனித்துவக் கட்சிகள்தான் அரசாங்கத்தில் இணைந்து வருவதாகவும் மேலும் பல எதிர்க் கட்சி உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கம் பெரும்பான்மைப் பலத்துடன் இருப்பதால் அதற்கு ஆதரவளித்துத் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைப் பெற முடியும் என்று சுட்டிக்காட்டிய அவர், அதற்காக அரசாங்கத்தின் உள்ளிருந்து குரல் எழுப்ப வேண்டுமென்றும் வெளியில் இருந்து கூக்குரல் இடுவதால் ஆகப் போவது எதுவுமில்லை என்றும் சொன் னார்.
0 commentaires :
Post a Comment