இனப்பிரச்சினையின் தீர்வுக்காகத் தமிழ்த் தலைவர்கள் நடத்திய போராட்டம் உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதை போல ஆகிவிட்டது. இப்போராட்டத்தின் விளைவாகத் தமிழ் மக்கள் துயரச் சுமைகளைச் சுமப்பவர்கள் ஆகிவிட்டனர். இந்தப் போர ட்டம் பற்றி மீளாய்வு செய்ய வேண்டிய காலம் இப்போது வந்து விட்டது.
மக்கள் கூட்டமொன்று முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான போராட்டம் அதன் ஆரம்ப கட்டத்தில் மக்கள் எவ் வாறான வாழ்க்கையை வாழ்ந்தார்களோ அதற்குக் கீழான நிலைக்கு அவர்களைத் தள்ளுவதாக அமையக் கூடாது. மக்களின் வாழ்க்கை யில் படிப்படியான வளர்ச்சியை ஏற்படுத்துவதாக அல்லது அத்த கைய வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகளைத் தோற்றுவிப்பதாக அமை யும் பட்சத்திலேயே அது ஆக்கபூர்வமான போராட்டமாக இருக்கும்.
இனப்பிரச்சினையின் தீர்வுக்கான போராட்டம் தமிழரசுக் கட்சியினா லேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. இப்போரா ட்டம் பிந்திய காலங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுத்ததில் தமிழரசுக் கட்சியின் பங்களிப்பு பிரதானமானதாக இருந்தது. இந்த வகையில், தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரை ஒரே தலைமைப் பாரம்பரியமே இருந்து வருகின்றது எனக் கூறலாம்.
தமிழரசுக் கட்சியின் சமஷ்டிப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் தமிழ் மக்களின் வாழ்க்கைக்கும் இன்று தமிழ் மக்களின் வாழ்க் கைக்கும் இடையிலான வேறுபாட்டிலிருந்து போராட்டம் சரியான பாதையில் சென்றுள்ளதா இல்லையா என்பதை விளங்கிக் கொள்ள முடியும். தமிழ் மக்கள் இடம்பெயரவும் புலம்பெயரவும் நேர்ந்ததும் அகதி வாழ்க்கை வாழ நேர்ந்ததும் ஆயிரக்கணக்கான அகால மரணங்கள் சம்பவித்ததும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகள் அழிந்ததும் பிந்திய கால நிகழ்வுகள். இதுதான் இன உரிமைப் போராட்டம் தமிழ் மக்களுக்குத் தந்த வாழ்க்கை. எல்லாவ ற்றுக்கும் மேலாகப் பிரச்சினைக்கான தீர்விலிருந்து வெகுதூரம் பின் னுக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.
இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பது இதுவரையிலான போராட்டம் பற் றிய மீளாய்வில் பிரதானமானது.
சமகால யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு அதற்கேற்றவாறு கோரிக் கைகளை முன்வைக்காததே பின்னடைவுக்கான காரணம். தமிழ் மக் களுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதற்குத் தனிநாட்டுக் கொள்கை முக்கிய காரணம். தனிநாடு சாத்தியமில்லை என்பதைத் தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்ளாதிருந்தது மக்களின் துரதிஷ்டம் ஆகி விட்டது. அதேபோல, அரசியல் தீர்வு ஆலோசனைகள் முன்வைக்கப் பட்ட வேளைகளில் கூடுதலான அதிகாரங்களை வலியுறுத்தி அவ் வாலோசனைகளை நிராகரித்ததும் பின்னடைவுக்கு ஒரு காரணம்.
தனிநாட்டுக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்ட தீர்வுகளைக் கூடுதலான அதிகாரங்களை வலியுறுத்தி நிராகரித்ததும் தமிழ் மக்களின் துயரங் களுக்கும் இன உரிமைப் போராட்டத்தின் பின்னடைவுக்கும் கார ணம் என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். தவறைத் திருத்திக் கொண்டு சரியான கொள்கையையும் அணுகுமுறையையும் ஏற்பதற் குத் தமிழ்த் தலைவர்கள் தயங்குவது தமிழினத்தை அழிவை நோக் கித் தள்ளுவதாகிவிடும்.
ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு தான் சரியான கொள்கை. எந்தத் தீர்வு உடனடியாகச் சாத்தியமோ அந்தத் தீர்வை ஏற்றுக்கொண்டு படிப்படியாகக் கூடுதலான அதிகாரங்களைப் பெற்று இறுதித்தீர்வை அடைவது தான் சரியான அணுகுமுறை.
editor.tkn@lakehouse.lk
0 commentaires :
Post a Comment