8/07/2010

அகதிகள் போர்வையில் வெளிநாடுகளுக்கு புலிகள் ஊடுறுவல்- கோத்தபாய _

 
 
  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே அகதிகள் என்ற போர்வையில் பல நாடுகளுக்கும் பயணிப்பதாகவும் இவர்கள் விடயத்தில் குறித்த நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

காலியில் நடைபெற்ற கடல் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

சர்வதேச ரீதியில் ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகளிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த கோத்தபாய ராஜபக்ஷ இந்த விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இன்றியமையாதது எனவும் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் தற்போது உறங்கு நிலையிலிருக்கும் புலிகளிற்கு உயிர் கொடுப்பதற்கு இவ்வாறு புதிதாக நுழைபவர்கள் முயலக் கூடும் எனவும் அவர் எச்சரித்தார். __

0 commentaires :

Post a Comment