8/06/2010

வந்தாறுமூலை கணேசா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா.

IMG_2401.JPG
IMG_2406.JPG
மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலை கணேசா வித்தியாலய பாடசாலை அதிபர் மோகன் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
 முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் எந்த ஒரு மாணவனாயினும் பாராட்டி கௌரவிக்கப்படுகின்றபோது தனது நிலையில் இருந்து முன்னேறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகவே உள்ளது. இவற்றை கருத்திற்கொண்டுதான் பாடசாலைகள் தோறும் வருடந்தோறும் பரிசளிப்பு விழாக்கள் இடம்பெறுகின்றது. குறித்த ஒரு மாணவன் பல்வேறு துறைசார்ந்த ரீதியில் தனது ஆக்கப்பாட்டினை வெளிப்படுத்துவதனூடாக தனது திறமையினை அவன் வெளிக்கொணர்கின்றான் இதன்போது அவன் ஒரு கல்வியாளனாகின்றான். இதேபோன்று பாடசாலைகள் கல்வி பயில்கின்ற அனைத்து மாணவர்களும் ஏதோ ஒரு துறையில் திறமையானவர்களாக இருக்க வழிவகுக்கின்றது.
மாணவர்களின் கல்வி தொடர்பில் மாணவர்கள் மாத்திரமின்றி பெற்றோர் பாடசாலை ஆசிரியர்கள் அதிபர்கள் அனைவருமே மாணவர்களுக்கு போதியளவு விளக்கங்களை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா வலயக்கல்வி பணிப்பாளர் சுபாச்சக்கரவர்த்தி கோட்ட கல்வி அதிகாரி சுகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 commentaires :

Post a Comment