ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநெஜாத் மீது நேற்று கைக்குண்டொன்று வீசப்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
ஹமேதான் என்ற நகருக்கு சென்று கொண்டிருந்த ஜனாதிபதியின் வாகனத் தொடரணியின் மீதே இந்த கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
கைக்குண்டை வீசியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது. எனினும், ஜனாதிபதி மீதான இந்த தாக்குதல் சம்பவத்தை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
இந்நிலையில் சியோனிய சக்திகள் ஜனாதிபதி அஹமதிநெஜாத்தை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை இணையத்தளங்கள் சில எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சியோனிஸ்ட்கள் என்ற பதத்தை இஸ்ரேலை குறிக்கும் வகையிலேயே ஈரான் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment