8/04/2010

வட பிரதேச வளர்ச்சியின் ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அச்சுவேலியில் நான்கு ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம் பிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள் ளன. ஒவ்வொரு தொழிற்சாலையும் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிறுவப்படவுள்ளது. இத் தொழிற்சாலைகளில் நாலாயிரம் பேர் வரையில் வேலைவாய்ப்புப் பெறுவர்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் கூட்டாக ஆட்சி செய்த காலத்தில் அச்சுவேலியில் ஒரு தொழிற்பேட்டை ஆரம்பிக்கப் பட்டது. அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத காரணத்தால் அத்தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக மூடுவிழா கண்டன.
இப்போது மீண்டும் அச்சுவேலி தொழிற்பேட்டை ஆகின் றது. பல தொழிற்சாலைகள் அங்கு இடம்பெறவுள்ளன. இதன் மூலம் இப்பிரதேசத்தில் பலர் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
அச்சுவேலி மாத்திரமல்ல. வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் பல தொழிற்சாலை களும் தொழிற் பயிற்சி நிலையங்களும் அமையவுள் ளன. இது ஒரு புத்தெழுச்சியின் ஆரம்பம் எனலாம்.
அபிவிருத்தியைப் பொறுத்த வரையில் வட மாகாணம் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. இதனால் புதிய தொழில் வாய்ப்புகள் அங்கு ஏற்படவில்லை.
மூன்று தொழிற்சாலைகளே பிரதான தொழில் வாய்ப்பு மையங்களாக விளங்கின. காங்கேசன் துறை சிமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் என்பனவே அவை. புலிகளின் செயற்பாடு காரணமாக இத் தொழிற் சாலைகள் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டு அவற் றில் தொழில் புரிந்தவர்கள் தொழிலிழந்தனர்.
வட பிரதேச மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோரும் தமிழ்க் கட்சிகள் இத் தொழிற்சாலைகள் செயற்பட முடியாமற் போனதால் தொழிலிழந்தவர்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புலிகளின் செயற்பாடுகளுக்கு மெளன அங்கீகாரம் அளித்துப் பேசாதிருந்தனர்.
இக் கட்சிகள் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக வட பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும் அப்பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றியோ பிரதேச மக்களின் தொழில் வாய்ப்புகள் பற்றியோ எவ் வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. வட பிரதேசம் நீண்ட காலமாக அபிவிருத்தி இல்லாதிருந்ததற்கு இத் தலைவர்களே பொறுப்பாளிகள்.
சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து வடபகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பிரதேச அபிவிருத்தி தங்களுக்குரிய விடயமல்ல என்ற அடிப்படையிலேயே செயற்பட்டிருக்கின்றனர். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக இவர்கள் கூறிய போதிலும் இனப் பிரச்சினையின் தீர்வைச் சிக் கலாக்கியதுதான் மிச்சம். இவர்களுடைய பிரதிநிதித் துவத்தின் கீழ் இனப் பிரச்சினைக்குத் தீர்வும் இல்லை. பிரதேச அபிவிருத்தியும் இல்லை.
இன்றைய அரசாங்கம் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் வடபிரதேசத்தில் பல அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. வடக்கின் வளர் ச்சி ஆரம்பிக்கின்றதென்பது இதன் அர்த்தம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போதாவது வடக்கின் அபிவிருத்தியில் அக்கறை செலுத்தி அரசாங்கத்தின் முயற்சிக்குக் கைகொடுக்க வேண்டும்.

0 commentaires :

Post a Comment