ப. சிதம்பரம்
இந்திய வெளியுறவுத் துறையின் முக்கிய அதிகாரியொருவர் விரைவில் இலங்கை செல்லவுள்ளாரென மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
சென்னையில், முதலமைச்சர் மு. கருணாநிதியைச் சந்தித்ததன் பின் அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழர் பகுதியில் மேற்கொள்ளப் பட்டுவரும் பணிகளை அய்வு செய்யவும்; இடம்பெயர்ந்தோருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணிகளைப் பார்வையிடவும் இந்த அதிகாரி கண்டறிவாரென சிதம்பரம் கூறினார்.
பலாலி விமான நிலையம், காங்கேசன் துறைமுகம் இவைகளை மேம்படுத்த இந்திய அரசு உதவி செய்துள்ளது. இந்த பணியும் எந்த அளவு நடந்துள்ளது என்பதைக் கண்டறிவார்.
கேள்வி:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து சுடப்படு கிறார்களே?
பதில்:- இந்த ஆண்டு ஒரு நிகழ்வுதான் நடந்துள்ளது. அது வருந்தத்தக்க விசயம். இந்தியா- இலங்கை ஒப்பந்தப்படி கடலில் மீனவர்களை சுடக்கூடாது.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் கைது செய்யலாம் சுடக்கூடாது என்பதை மீண் டும் வலியுறுத்தி உள்ளோம்
0 commentaires :
Post a Comment