8/01/2010

வாகரை தோணிதாட்டமடு பிரதேசத்தில் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரவியம்

வாகரை தோணிதாட்டமடு பிரதேசத்தில் மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரவியம் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதையும் மக்களின் பாதுகாப்புபு தொடர்பாக பாதுகாப்பு உத்தியோகர்த்தர்களுடன் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம்.
 வாகரை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தோணிதாண்ட மடு பிரதேசத்தில்  56 குடும்பங்களை சேர்ந்த 102பேர் மீளக்குடியமர்த்தப்பட்டனர். கடந்தகால யுத்த சூழலால் கதிரவெளி புச்சாக்கேணி  போன்ற பிரதேச இடைத்தங்கல் முகாம்களில்  தங்க வைக்கப்பட்டிருந்த இம்மக்களை கடந்த 26.07.2010 அன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண மீள்குடியேற்ற அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்  தலைமையில் இடம்பெற்ற வாகரை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இம்மக்கள் கடந்த வியாளன் (29.07.2010) அன்று மீளக்குடியமர்த்துவது என ஏற்பட்ட தீர்மானத்துக்கமைவாக அன்றய தினமே மக்கள் மீளக்குடியமர்தப்பட்டனர். மக்கள் மீளக்குடியமர்த்துவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பாகவும் பாதுகாப்பு படையினரிடமு; வாகரை பிரதேச செயலாளரிடமும் மாகாண சபை உறுப்பினர் திரவியம் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
11
12

0 commentaires :

Post a Comment