கொலம்பிய ஜனாதிபதி ஜியான் மானுவல் சண்டோ, வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் ஆகியோரிடையே முக்கிய சந்திப்பொன்று நிகழ்ந்தது. கொலம்பியாவின் கரிபியன் கரையோர நகரத்தில் சென்ற செவ்வாய்க்கிழமை இச்சந்திப்பு இடம்பெற்றது. இரு தலைவர்களும் சிநேகபூர்வமாகவும், திறந்த மனதுடனும் பேச்சுக்களிலீடுபட்டனர். வர்த்தக, பொருளாதார உறவுகள், பாதுகாப்பு, கலாசாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் இரு நாடுகளும் மிக நெருக்கமாக நடந்து கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஐந்து செயற்பாட்டுக் குழுக்களை அமைத்து மேற்சொன்ன விடயங்களில் முன்னேற்றம் காண உழைப்பதெனவும் இரு தலைவர்களும் இணக்கம் கண்டனர்.
உலக நிதி நெருக்கடியாலும், இவ்விரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு நிலவாமையாலும் கடந்த 2009ம் ஆண்டு 07 மிலலியன் டொலர் முதல் 700 மில்லியன் டொலர் வரை நஷ்டமேற்பட்டது. கொலம்பியா, வெனிசூலாவிடையே நீண்ட காலமாக பகை வளர்ந்து வந்தது.
கொம்பியாவின் பார்க் போராளிகளை வெனிசூலா வளர்ப்பதாக கொலம்பியா குற்றம் சாட்டியமையால் அடிக்கடி இந்நாடுகளிடையே மோதலும், முறுகலும் ஏற்பட்டன. ஒகஸ்ட் 07ல் கொலம்பியாவின் புதிய ஜனாதிபதியாக மானுவல் சண்டோ பதவியேற்ற பின்னர் புதிய உறவுகள் மலர ஆரம்பித்துள்ளன.
தென் அமெரிக்க நாடுகளின் செயலாளர் கிரிச்னர் வெனிசூலாவுக்கு விஜயம் செய்து கொலம்பியாவுடன் உறவுகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தையும் நியாயத்தையும் விளக்கியிருந்தார். இதை அடுத்து கொலம்பியா மீதான தனது பார்வையை சாவெஸ் மாற்றிக் கொண்டார். இரு தலைவர்களும் சந்தித்த பின்னர் பத்திரிகையாளர் மாநாட்டையும் நடத்தினர். உறவுகளைப் பேணுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
0 commentaires :
Post a Comment