8/27/2010

41 இலட்சம் மாணவர்; 9700 அரச பாடசாலைகள்: இலவச பாடப் புத்தகங்களை அச்சிட ரூ. 300 கோடி ஒதுக்கீடு

அடுத்த வருடத்துக்கான பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்காக அரசாங்கம் 300 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.
9700 அரசாங்க பாடசாலைகள், மற்றும் அரசின் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் 75, பிரிவெனாக்கள் 722 ஆகியவற்றில் கல்வி பயிலும் சுமார் 41 இலட்சம் மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
364 வகையான பாடசாலை புத்தகங்கள் அடுத்த வருடத்தில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அவற்றை பகிர்ந்தளிக்கும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் நேற்று முன் தினம் (25) ஆரம்பமாகின.
2011ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் இவ்வருடம் டிசம்பர் 6ஆம் திகதிக்கு முன் பகிர்ந்தளிக்கப்பட்டுவிடும்.
இதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சின் வெளியீடுகளுக்கு பொறுப்பான திணைக்களம் செய்துள்ளதாக அதன் செயலாளர் நாயகம் டபிள்யூ. எம். என். கே. புஷ்பகுமார கூறினார்.
கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பிரசுரங்களை எவரும் கொள்வனவு செய்வதற்கு ஏற்ற வகையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் உள்ளிட்ட பிரதான ரயில் நிலையங்கள் பலவற்றில் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட வுள்ளன.

0 commentaires :

Post a Comment