சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட 4000 மதுபான போத்தல்கள் மட்டக்களப்பு நகரில் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியான இம்மதுபான போத்தல்கள் தங்கொடுவையில் தயாரிக்கப்பட்டவை என மட்டக்களப்பு மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாகரன் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்கள் நேற்று மாலை பிரதி மதுவரி ஆணையாளர் ஏ. போதரகம முன்னிலையில் அழிக்கப்பட்டன. பாவனைக்குதவாத மதுபான போத்தல்களை விற்பனை செய்வதற்காக எடுத்து வந்த நபருக்கு 25 லட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது. ___
0 commentaires :
Post a Comment