8/11/2010

கிழக்கில் குளங்களை புனரமைக்க ஜப்பான் 4000 மில்லியன் ரூபா உதவி

 

4076912189_def6941681_mகிழக்கு மாகாணத்தில் தூர்ந்துபோயுள்ள சிறிய, நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களையும் கால்வாய்களையும் புனரமைப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் 4000 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு முன் வந்துள்ள தாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை தெரி வித்தார்.
பொதுநிர்வாக அமைச்சின் 40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பண’ நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை கூறினார்.

0 commentaires :

Post a Comment