8/08/2010

கியூபா நாட்டின் அசைக்க முடியாத தலைவர் பிடல் காஷ்ட்ரோ இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பேசுகிறார்

 fidel_castroகியூபா நாட்டின் அசைக்க முடியாத தலைவர் பிடல் காஷ்ட்ரோ இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பேசுகிறார்.  அப்போது ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க இருக்கும் அபாயம் மற்றும் அதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கம்யூனிச நாடு கியூபா.  அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்நாட்டில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் பிடல் காஸ்ட்ரோ.  1959ல் தனக்கு எதிராக நடந்த பெரும் கிளர்ச்சியை முறியடித்து நாட்டின் அதிபர் ஆனார்.   அன்று முதல் 49 ஆண்டு காலம் அசைக்க முடியாத யாரும் கேள்வி கேட்க முடியாத தலைவராக திகழ்ந்து வருகிறார்.
பிடல்காஸ்ட்ரோவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  2006 ஜூலையில்  குடலில் பெரிய அறுவை சிகிச்சை நடந்தது.
இதன் பிறகு அவர் வெளியே வரவில்லை.   தனது தம்பி ராகுல் காஸ்ட்ரோவிடம் அரசு பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருக்கிறார்.
இப்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல் தடவையாக கியூபா நாடாளுமன்றத்துக்கு பிடல் காஸ்ட்ரோ வந்து உரையாற்றவிருக்கிறார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க இருக்கிறது.
வடகொரியா மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.  இதனால் அணு ஆயுதப்போர் ஏற்பட்டு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட இருக்கும் அபாயம் பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று பிடல் காஸ்ட்ரோவிடுத்த வேண்டுகோளை ஏற்று நாடாளுமன்றம் இன்று அவரசமாக கூடுகிறது.
பிடல்காஸ்ட்ரோ அடுத்த வாரம் தனது 84வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment