சுடர் ஒளி,
இல 85, ஜெயந்தமல்லிமாராய்ச்சி மாவத்தை,
கொழும்பு-14,
த.பெ. இல 2129.
21.08.2010 (சனிக்கிழமை) அன்று முதற்பக்கத்தில் வெளியாகிய செய்தி தொடர்பான மறுப்பறிக்கை (பழைய பிள்ளையானாக மாறுவேன் என்கிறார் சந்திகாந்தன்)
குறித்த தினத்தில் தங்களது பத்திரிகையின் முன் பக்கத்தில் பிரசுரமாகியிருக்கும் பழைய பிள்ளையானாக மாறுவேன் என்கிறார் சந்திகாந்தன் எனும் தலைப்பிலான செய்தியானது எவ்விதமான அடிப்படை ஆதாரங்களும் அற்ற நிலையில் பிரசுரிக்கப்பட்டிருப்பதனை தங்களின் கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகின்றேன். குறித்த தினத்தில் முதலமைச்சர் சந்திரகாந்தன் தனது பணிநிமிர்த்தம் ஆரையம்பதி கிராமத்தில் நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் மக்களுடனான சந்திப்பில் கலந்து கோண்டிருந்தார். இக் கலந்துரையாடலில் முதலமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம சேவை உத்தியேகாஸ்தர்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். இந் நிகழ்வில் குறித்த காணி எல்லைப்பிரச்சினை விடயம் தொடர்பாக ஆராயப்பட்ட போதும், முதலமைச்சர் தங்களது பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த சொற்பதங்களையோ, வசனங்களையோ பயன்படுத்தவில்லை மாறாக இது இரு கிராமங்களைத்தாண்டி இரு சமூகம் சார்ந்த பிரச்சினை என்பதனால் ஒரு பொறுப்பு மிக்க முதலமைச்சர் என்ற வகையில் நிதானமாகவும் பக்கச்சார்பில்லாமலும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். இவ்வாறான உயர் நோக்கங்களோடு நடைபெற்ற கலந்துரையாடலில் முதலமைச்சர் அவர்களின் தனிப்பட்ட கௌரவத்திற்கும் பதவிக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தாங்கள் செய்தி பிரசுரித்திருந்தானது வேதனைக்குரிய விடயம் ஆகும். அத்தோடு ஊடக சுதந்திரத்தை மீறும் செயலாகும் என்பதனையும் தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
அடையாளம் தெரியாத ஓரிரு நபர்கள் ஒன்றுசேர்ந்து ஓர் காகித தலைப்பில் அவதூறுசெய்தி ஒன்றை அனுப்புமிடத்து அதன் நியாயங்களையும் உண்மைத்தன்மையையும் ஆராயாமல் ஒரு பொறுப்பு மிக்க ஊடகமான தாங்கள் எவ்வாறு பிரசுரிக்க முடியும். முதலமைச்சர் தொடர்பான இவ்வாறான செய்திகள்
இடம்பெறுமிடத்து, முதலமைச்சரின் ஊடகச் செயலாளரையோ அல்லது முதலமைச்சர் சார்ந்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்
பேச்சாளரையோ தொடர்பு கொண்டு இதன் உறுதிப்பாடு குறித்தும் உண்மைத் தன்மை குறித்தும் உறுதிப்படுத்தியிருத்தல் வேண்டும். அது மட்டும் அல்லாமல் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்ற சமயம் தங்களது பத்திரிகை சார்பாக எந்தவொரு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருக்கவில்லை. முதலமைச்சருக்கு அவகீர்த்தி ஏற்படுத்த வேண்டும் என்ற தோரணையில் கூலிக்கு செயற்படுகின்ற சில இணையத்தளங்களில் வெளி வந்த செய்தியினை முற்றிலும் ஒத்ததாகவே தங்களின் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியும் அமைந்திருந்ததை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே மேற்குறித்த செய்தி தொடர்பில் தங்கள் பத்திரிகை உத்தியோக பூர்வமாக மன்னிப்புக் கோருவதுடன், குறித்த செய்தியினை வாபஸ்பெற வேண்டும் அதுவே ஊடகதர்மமாகும். இவ்வாறு மேற்கொள்ளாதவிடத்து தமது ஊடகத்திற்கெதிராக சட்டநடவடிக்கை குறித்து ஆராயப்படும் என்பதையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகின்றேன்.
ஆ. தேவராஜ்
கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சரின்
ஊடகச் செயலாளர்.
0 commentaires :
Post a Comment