பொன்சேகாவுக்கு எதிராக 21 குற்றச்சாட்டுகள்
ஹைகோப் ஆயுத ஊழல் சம்பந்தமாக சரத்பொன்சேகா மீது 21 குற்றங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே பொன்சேகாவிடம் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
வழக்கின் முதலாவது பிரதிவாதியான சரத்பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ன பிரசன்னமாகாத நிலையிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்ப ட்டுள்ளது.
இதேவேளை இந்த வழக்கின் பிரதிவாதியான ஹைகோப் நிறுவனத்தின் பணிப்பாளரான வெலிங்டன் டேகொட் நேற்று மேல்நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.
இதேவேளை இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையை நீதிபதி சுனில் ராஜபக்ஷ எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். ஏற்கனவே இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த தமிbழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு படையினருக்கு அரசாங்கம் உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா ஆங்கில நாளிதளுக்குத் தெரிவித்ததாக கூறப்பட்ட தகவலுக்கு எதிரான வழக்கிலும் சரத் பொன்சேகாவுக்கு கடந்த 29 ஆம் திகதி குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டு ள்ளது தெரிந்ததே.
0 commentaires :
Post a Comment