தமிழ் கடசிகளின் அரங்கம் 5வது தடவையாகவும் இன்று (14.08.2010) மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான
சி. சந்திரகாந்தன் தலைமையில் கூடியது.
கடந்த தமிழ் கட்சிகளின் இரங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அமைப்புக்கு
அவர்கள் உத்தியோகபூர்வமான பதிலளிக்காமையினையிட்டு இவ் அரங்கம் அரங்கம் தனது கவலையை வெளிப்படுத்துவதுடன்
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றது என்பதை நினைவூட்டுகிறது.
அவர்கள் உத்தியோகபூர்வமான பதிலளிக்காமையினையிட்டு இவ் அரங்கம் அரங்கம் தனது கவலையை வெளிப்படுத்துவதுடன்
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றது என்பதை நினைவூட்டுகிறது.
இன்றைய தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய உடனடித் தேவைகள் குறித்து ஆராயப்பட்டதுடன்
அவை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று சாத்தியமான வழியில் விரைவாகத் தீரடவைப் பெற்றுக் கொடுப்பது எனவும் தீர்மானிக்கப் பட்டது.
அவை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று சாத்தியமான வழியில் விரைவாகத் தீரடவைப் பெற்றுக் கொடுப்பது எனவும் தீர்மானிக்கப் பட்டது.
அவைகளாவன….
1. அர்த்தமுள்ள மீள் குடியேற்றம்.
2. உட்கட்டமைப்புடன் கூடிய மீள் கட்டுமானம்.
3. உயர் பாதுகாப்பு வலயங்கள். மீள் குடியேற்றங்கள்.
4. மக்களின் வாழ்விடங்களில் அமைக்கப்படும் இராணுவக் குடியேற்றங்கள்.
5. முழுமையான சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்தல்.
6. ஆயுதப் போராட்டத்தினால் உடமைகளை உறவுகளை அங்கங்களை இழந்த மக்களுக்கு நட்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுத்தல்.
7. வடகிழக்கு உட்பட தமிழ் பேசும் பகுதிகளில் இனப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தல்.
8. யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்துதல்.
9. மீள் குடியேற்றத்தினை வெளிப்படையாகச் செய்வதுடன் அதை மக்கள் பிரதிநிதிகள் சர்வதேச உள்ள+ர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளல்.
10. இனப்பிரசிசினை தீர்வுக்கு மாகாண சபைகளுக்கென பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அரசியல் அமைப்பிலுள்ள 13 வது அரசியல் அதிகாரங்களை
முழுமையாக அமுல் படுத்துதல் ஆரோக்கியமான முன் முயற்சியாக அமையும்.
முழுமையாக அமுல் படுத்துதல் ஆரோக்கியமான முன் முயற்சியாக அமையும்.
11. அடுத்து வரும் கட்டங்களில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் முஸ்லிம் மலையக கட்சிகளை இணைப்பது குறித்து ஆராயப்படும்.
12. தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகள் இறுதி யுத்த நடவடிக்கையின்போது சரணடைநடத கைது செய்யப்பட்ட போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன்
அவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தல்.
அவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தல்.
0 commentaires :
Post a Comment