அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு மத்திய வீதி 12 கோடி ரூபாய் செலவில் கார்ப்பட் வீதி ஆக்கப்படுகின்றது. இப்பாரிய திட்டத்தை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, மின்சார நீர்ப்பாசன அமைச்சர் ஏ.உதுமாலெவ்வை இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான சோ.புஸ்பராஜா, எம்.அமீர் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ந.ஜீவராசா, காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஸ்ணன் ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment