8/08/2010

நல்லிணக்க ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு 11 இல் ஆரம்பம்

  கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் முதலாவது அமர்வு எதிர்வரும் 11 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பு 07, ஹோட்டன் பிளேஸில் 24 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட் டுள்ளது.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்ட சகல பிரஜைகளும் இதற்கு ஒத்துழைக் குமாறும், பொது இலக்கை அடை வதற்காக உதவிகளையும் தகவல்களையும் தந்துதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி குழு 2002 பெப்ரவரி 21 ஆம் திகதிக்கும் 2009 மே மாதம் 19 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்தும்
ஆணைக்குழு கீழ் வரும் தினங்களில் முன்வைப்புக்களைக் கேட்பதற்குத் திட்டமிட்டுள்ளது.
 
11 ஓகஸ்ட் 2010 மு.ப 9.30
மு.ப 11.30
12 ஓகஸ்ட் 2010 மு.ப 9.30
மு.ப 11.30
13 ஓகஸ்ட் 2010 மு.ப. 9.30
மு.ப 11.30
17 ஓகஸ்ட் 2010 மு.ப. 9.30
மு.ப. 11.30
பி.ப 2.00
18 ஓகஸ்ட் 2010 பி.ப 2.00
பி.ப 3.00
23 ஓகஸ்ட் 2010 மு.ப 9.30
மு.ப 11.30
25 ஓகஸ்ட் 2010 மு.ப 2.00
மு.ப 3.30
14ம், 15ம் திகதிகளில் வவுனியாவில் பொது அமர்வுகள் நடைபெறவுள்ளன.
பொது மக்களுள் எவரேனும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க விரும்பினால் அவ்வாறு செய்வதற்கான திகதியையும் நேரத்தையும் பெற்றுக் கொள்வதற்காக தொலைபேசி இலக்கம் 0112673408               0112673408        ஊடாக ஆணைக்குழுவிடம் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது மேற்குறிப்பிட்டுள்ள விலாசத்திலுள்ள ஆணைக்குழுவுக்கு எழுத வேண்டும்.
வரையறுக்கப்பட்ட ஆசன வசதிகளே உள்ளபடியால் பொது மக்கள் நேரகாலத் துடன் சமுகமளிக்கும்படி அறிவுறுத்தப் படுகின்றனர்.

0 commentaires :

Post a Comment