பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் வெள்ளத்தால் சுமார் பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு நீரால் சூழப்பட்ட பகுதிகளை சென்று அடைவதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கின்ற சுமார் 30 லட்சம் பேர் வசிக்கும் பெஷாவர் பகுதி மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. 800 பேர் பலி கைபர் பாஹ்துன்க்வா பிராந்தியத்தின் தகவல் தொடர்பு அமைச்சரான மியான் இஃப்திகார் ஹுசைன் சுமார் 800 பேர் பலியாகியுள்ளதாக கூறியுள்ளார். இன்னும் பல இடங்களை சென்று சேர முடியாமல் இருப்பதாலும், மேலும் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாலும், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. பாகிஸ்தானில் செயல்படும் ஐ.நாவின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தலைவரான மனுவல் பெஸ்லர், தன்னால் பாதிப்புகளை முழுமையாக கூறமுடியாத நிலையில் இருப்பதாகவும், ஏனென்றால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் தன்னுடைய அலுவலகங்களையே சென்று சேர முடியாத நிலை இருப்பதாக அவர் கூறுகிறார். பாகிஸ்தான் அரசு தேசிய அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் சுமார் 12 இன்ச் மழை பெய்யும் என பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பாகிஸ்தான் இது வரையில் உத்தியோகப்பூர்வமாக சர்வதேச உதவியை கோரவில்லை, ஆனால் கொடையாளிகள் உதவிசெய்யுமாறு அது கேட்டுள்ளதாக தெரிய வருகிறது. |
8/01/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment