8/31/2010

கோரளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட மூன்று கிராமங்களில் பாலர் பாடசாலைக் கட்டிடம் முதலமைச்சரால் திறந்து வைப்பு.

முதலமைச்சரால் திறந்து வைப்பு.

img_5504
கோரளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட முறுத்தானை, கோராவெளி, பொன்டுகல் சேனை ஆகிய கிராமங்களில் கிழக்கு மாகாண முதலமைச்சரால் பாலர் பாடசாலைக் கட்டிடங்கள் திறந்து வைப்பு.
ஜி.ரி.இசட்(முதல் இரண்டு கிராமங்கள்), மற்றும் நெக்டெப் ஆகியவற்றின் நிதியுதவியின் மூலம் அமைக்கப்பட்ட பாலர் பாடசாலைக்கட்டிடங்கள் மாணவர்களின் பாவனைக்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
img_5340
»»  (மேலும்)

பணிப்பெண் மீது சித்திரவதை செய்தவர்களை கண்டித்து கொழும்பில் ஆர்பாட்டம் _

சவுதி அரேபியாவிற்கு சென்று பல இன்னல்களை அனுபவித்து உடலில் ஆணி ஏற்றப்பட்ட நிலையில் நாடுதிரும்பிய ஆரியவதிக்கு ஆதரவாகவும், இவ்வாறான கொடூரச் செயலை செய்த சவுதி அரேபிய எஜமானர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கொழும்பிலுள்ள சவூதி தூதுதரவாலயத்துக்கு முன்பாக இன்று நண்பகல் ஆர்ப்பாட்மொன்று இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவரலாயத்துக்கு முன்னால் இன்று நண்பகல் 12 மணிக்கு ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்கவும் கலந்து கொண்டார். பெண்கள் கண்காணிப்பகம், தொழிலாளர் ஒத்துழைப்பு சங்கம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான செயற்பாட்டு வலையமைப்பு, மகளீர் அபிவிருத்தி ஸ்தாபனம், உள்ளிட்ட பல அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிக்கு தண்டனை வழங்கு, எஜமானர்களைக் கைது செய், வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடு போன்ற பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அனர்த்தம் ஏற்படலாம் என்ற காரணத்தினால் அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டடிருந்தனர். __
»»  (மேலும்)

ஈரான் உதவியுடன் உருவாகும் வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்

»»  (மேலும்)

8/30/2010

கடற்படை பயிற்சியில் ஈடுபட சீனா முடிவு அமெரிக்கா, தென்கொரியா கடும் எதிர்ப்பு

சீனாவின் கடற்படை எலோ சீ பகுதியில் இராணுவ பயிற்சியில் ஈடுபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத முதற் பகுதியில் இந்த இராணுவப் பயிற்சிகள் ஆரம்பமாகுமென சீனாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது. பெரும்பாலும் இப் பயிற்சிகள் புதன்கிழமை ஆரம்பமாகி சனிக்கிழமை முடிவடையுமென்றும் இது வருடாந்த பயிற்சி ஒத்திகையென்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரியன் குடாவில் தென்கொரியாவும், அமெரிக்காவும் இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த கொரியன் குடாவை அடுத்தே எலோசீ உள்ளது. இதை சீனா தனக்கு உரிமை கோருவதை தாய்வான் உட்பட தென் கிழக்காசிய நாடுகள் கண்டிக்கின்றன. இதைப் பொதுவான கடற் பிரதேசமாக அறிவிக்க வேண்டுமென்பதே அந்நாடுகளின் விருப்பம்.
இவ்வாறுள்ள நிலையில் சீனா கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவுள்ளமை பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன் வந்தமை, திபத் பிரதேசம் தொடர்பாக அமெரிக்காவின் போக்கு தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா இராணுவ பயிற்சிகளிலீடுபடுகின்றமை என்பவை சீனாவை ஆத்திரம் கொள்ளவைத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையிலே சீனா கடற்படை இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இன்னும் வட கொரியத் தலைவர் சீனா வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜுலை மாதமளவில் அமெரிக்காவும், தென் கொரியாவும் கொரியன் குடாவுக்கு நெருக்கமாகவுள்ள எலோ சீ யில் பயிற்சியிலீடுபட்டபோது சீனா கடுமையாக எதிர்த்தது.
பின்னர் அமெரிக்க, தென் கொரிய படைகள் இங்கிருந்து பின்வாங்கின. தேவையற்ற போரையும், பீதியையும் அமெரிக்கா கொரியன் பிரதேசத்தில் ஏற்படுத்துவதாக சீனா விமர்சித்தது. ஆனால் எலோ சீ யில் நீர்மூழ்கிக் கப்பலுக்கெதிரான ஏவுகணைப் பயிற்சியை செப்டம்பரில் ஆரம்பிக்கப்போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதே காலப் பகுதியிலே சீனாவும் கடற்படைப பயிற்சியில் ஈடுபட எண்ணியுள்ளது. வட கொரியாவை எச்சரிக்கும் நோக்குடன் அமெரிக்கா பயிற்சிகளை ஆரம்பிக்கும் அதேவேளை வட கொரியாவை காப்பாற்றும் நோக்குடன் சீனா பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளது. இவ்வாறான மோதல் போக்கு கொரியன் குடாவில் எழுந்துள்ளது. கொரியன் குடாவில் தென் கொரியாவின் கப்பல் தாக்கியளிக்கப்பட்டது. மார்ச்சில் நடந்த இச் சம்பவத்தையடுத்து அமெரிக்காவும், தென் கொரியாவும் வட கொரியாவை நேரடியாகக் குற்றம் சாட்டின.
சீனா, வட கொரியாவைக் காப்பாற்றும் வகையில் நடந்து கொண்டது அன்றிலிருந்து இப் பகுதியில் போர் மூளும் நிலை யேற்பட்டது. யுரேனியம் செறிவூட்டல் விடயத்தில் வட கொரியாவை வழிக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்காமையால் அமெரிக்கா இவ்விடயத்தில் உஷாரடைந்தது. தற்போது சீனா வந்துள்ள வட கொரியாவின் தலைவர் சீன, வடகொரிய உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்ததுக்கது.


»»  (மேலும்)

நிரூபமாராவ் இன்று வருகை

வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு நேரடி விஜயம்:
இந்திய அபி. பணிகளையும் பார்வையிடுவார்


இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் இன்று இலங்கை வருகிறார். இரு தரப்புச் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்திட்டங்களை நேரில் சென்று பார்வையிடுவாரென வும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் உள்ளிட்ட குழுவினர் வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (31) வவுனியா சென்றடையும் நிரூபமா தலைமையிலான குழுவினர் அங்கே நிறுவப்பட்டிருக்கும் மெனிக்பாம் மற்றும் கதிர்காமர் நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்றில் பங்குபற்றுவர். அதனைத் தொடர்ந்து அவர் நிலக்கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் இந்தியக் குழுவினர் செயலாற்றும் இடங்களை நேரில் சென்று பார்வையிடுவாரெனவும் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.
இதனையடுத்து, நிரூபமாராவ் வடக்கில் ஏனைய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி யின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வார். குறிப்பாக வடக்கில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவிருக்கும் வீடுகள் குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுமெனவும் வெளி விவகார அமைச்சு தெரிவித்தது. இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் மேலும் 12 அரசாங்கப் பிரதிநிதிகள் இலங்கை வருவரென எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதிகள், இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்களை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சந்தித்து உரையாடுவார். எதிர்வரும் 02 ஆம் திகதி அவர் நாடு திரும்புவதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஜி. எல். பீரிஸ் ஆகியோருடன் இருதரப்புச் சந்திப்புக்களை மேற்கொள் வார்ரெனவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன
»»  (மேலும்)

கிளிநொச்சியில் யாழ். பல்கலையின் பொறியியல், விவசாய பீடங்கள் உயர்கல்வி அமைச்சர் எஸ். பி. யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு


யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் நவீன வசதிகளுடன் கிளிநொச்சியில் விரைவில் நிறுவவுள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.
இதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; அடுத்த ஆண்டு முதல் ஆங்கில மொழியை ஒரு போதனா மொழியாகப் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்துவதுடன் இதற்கிணங்க எமது விரிவுரையாளர்களை இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து இங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் பல்கலைக்கழகத்தின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வு நேற்று யாழ். பல்கலைக்கழக கருத்தரங்கு மண்டபத்தில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், முன்னாள் அரச அதிபர் கே. கணேஷ், ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் எம். பி. உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது, பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்களில் நிலவும் விரிவுரையாளர் வெற்றிடங்கள், கட்டிட நெரிசல்கள், உடற்பயிற்சிப் பீடத்தின் குறைபாடுகள் சம்பந்தமாக அமைச்சருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
இதனைச் செவிமடுத்த அமைச்சர்; இக்குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு கட்டிடங்களைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை; போதனாசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கவும் உயர் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்ட அமைச்சர், இதன் மூலம் அவர்களின் திறமைகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக பீடங்களின் பிரிவுகளை ஒரே இடத்தில் நிர்மாணிக்காது காணி வசதிகளைக் கொண்ட பகுதிகளில் அவற்றை பரவலாக அமைக்க முடியுமெனவும் இதற்கென பெறப்படும் அரச காணிகளில் மாணவர்களுக்கான விடுதிகளையும் அமைக்க முடியுமெனவும் பல்கலைக்கழக மகளிர் அபிவிருத்தி நிதியப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் இதன்போது அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்
»»  (மேலும்)

8/29/2010

கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்.

img_5122
img_5070கிழக்கு மாகாண முதலமைச்சர்   சந்திரகாந்தன் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இவ்விஜயத்தின்போது பல்கலைக்கழக பீடாதிபதிகளுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றையும் மேற்கொண்டார்.
»»  (மேலும்)

கிழக்கு மாகாணத்தில் போலி மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . - முதலமைச்சர் சி. சந்திரகாந்தன்.

கிழக்கு மாகாணத்தில் விற்பனை மற்றும் தயாரிக்கப்படுகின்ற அனைத்துப் பொருட்களும் தரமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சம்பந்தப்பட்ட சகல திணைக்களத்தலைவர்கள் அதிhரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். இன்று செங்கலடி கூட்டுறவுச் சங்கத்தின் கிளைகளில் ஒன்றான சித்தாண்டி கூட்டுறவுக் கிளைக்கு திடீரென விஜயம் செய்த முதலமைச்சர் அங்கு விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான பொருட்கள் காலாவதியானவை எனக் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர், செங்கலடி கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர், அப்பிரதேச்த்தின் தவிசாளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை உடனடியாக அழைத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளும்படி பணித்தார். இதன் பின்னர் சகல பொருட்களும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் பரீட்சிக்கப்பட்டு, கடைக்கும் சீல் வைக்கப்பட்டு குறித்தகிளையின் முகாமையாளரான க. சத்தியசீலன் எதிர்வருகின்ற திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார். இதனையடுத்தே முதல்வர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் போலி மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்தோடு கிழக்கு மாகாணத்திற்குள்ளான திணைக்களகங்களாக இருந்தால் அதிகூடிய தண்டணை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டடார். இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பரசாந்தன் அவர்களமு; பங்கேற்றிருந்தார்.
img_5209
»»  (மேலும்)

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரகைணகள் மட்டக்களப்பில் நடைபெறும் _

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் விசாரணைகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைபெறவுள்ளன.

அடுத்த மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள இவ்விசாரணைகள் களுவாஞ்சிக்குடி,மட்டக்களப்பு, செங்கலடி, வாழைச்சேனை இடங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ___
»»  (மேலும்)

தமிழிலக்கிய வளர்ச்சிக்கு சமண பௌத்த அறிஞர்கள் ஆற்றிய பங்களிப்பு*- முருகேசு ரவீந்திரன்


தமிழிலக்கிய வளர்ச்சி சங்க காலத்திலிருந்து நோக்கப்படுகிறது. கி. பி. முதலாம் நூற்றாண்டு சங்க காலம் எனக் கொள்ளப்பட்டு அக்காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் சங்க இலக்கியங்களாக கருதப்படுகின்றன. சங்க காலத்திற்கு பிற்பட்ட காலம் சங்க மருவிய காலமாக நோக்கப்படுகிறது. சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் வியந்து போற்றின.
சங்கப் பாடல்கள் சமய சார்பற்றவையாகக் காணப்பட்டன. திருமுருகாற்றுப்படை மட்டும் முருகனின் அற்புதத்தைக் கூறும் சமயப் பாடலாக விளங்குகிறது. கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ள சில பாடல்கள் பிற்காலத்தில் பெருந்தேவனார் என்பவரால் பாடப்பெற்றவையாகும்.
திருக்குறள் சமய சார்பற்ற நூலாகக் கருதப்படுகிறது. அதனால் தான் அனைத்து சமயத்தவரும் ஏற்றுக் கொள்ளும் இலக்கியமாக அது போற்றப்படுகிறது. சங்கமருவிய காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் அறநெறிக் கருத்துக்களை எடுத்துக் கூறுபவையாகக் காணப்படுகின்றன. சங்கமருவிய கால இலக்கியங்கள் பலவும் சமண பெளத்த அறிஞர்களால் எழுதப்பட்டவை. கீழ்க்கணக்கு நூல்களுள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, ஏராதி, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணையெழுபது என்னும் நூல்களை எழுதியவர்கள் சமண அறிஞர்களேயாவர். அவர்கள் தம் சமயக் கருத்துக்களை தாம் எழுதிய இலக்கியங்களில் புகுத்தியுள்ளனர்.
சங்க காலத்தில் காதலும் போரும் என வாழ்ந்த மக்களுக்கு உலகியலில் மனச்சலிப்பு தோன்றியது. இந்த விரக்தி நிலையிலிருந்து விடுபடும் வகையில் சங்கமருவிய கால இலக்கியங்களின் தோற்றம் காணப்படுகிறது. கள்ளுண்டு களித்து காதலில் ஈடுபட்டு போர் புரிந்து வாழ்ந்த மக்கள் மனமாற்றத்தை வேண்டி நின்றனர். இப்படித்தான் வாழ வேண்டும் என அறக்கருத்துக்களை போதிப்பனவாக சங்கமருவிய காலத்து இலக்கியங்கள் விளங்கின. இதனால் இந்த இலக்கியங்களை எழுதிய சமண பெளத்த அறிஞர்கள் மீது அக்கால மக்கள் பெரும் மதிப்பை கொண்டிருந்தனர்.
சிலப்பதிகார நூலாசிரியராகிய இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர். அவர் படைத்த கோவலனும் அவர்களுக்குத் துணை வந்த கெளந்தி அடிகளும் சமண சமயத்தவராக சித்தரிக்கப்படுகிறார்கள். எனினும் ஏனைய தெய்வ வாழ்த்துப் பாடல்களும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகார காப்பியத்தையொட்டிய கண்ணகி வழிபாடு தமிழகத்திலும் இலங்கையிலும் காணப்படுகிறது. இந்துக்களும் பெளத்தர்களும் கண்ணகியை பெண் தெய்வமாகப் போற்றி வழிபடுகின்றனர். நல்லை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருக்கு முற்பட்ட காலத்தில் வடபகுதியில் பல கண்ணகி அம்மன் ஆலயங்கள் காணப்பட்டன.
சமண சமயத்தைச் சேர்ந்த சீமாட்டிக்கு கோயில் கட்டி வழிபடுவது தவறு என நல்லை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாலவர் வலியுறுத்தினார். வடபகுதியில் காணப்பட்ட பல கண்ணகி அம்மன் ஆலயங்கள் முத்துமாரி அம்மன் ஆலயங்களாக மாற்றம் பெற்றன. சைவ சமயத்தை நிறுவுவதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆற்றிய பங்களிப்பு பிறிதாக நோக்கப்பட வேண்டியதொன்றாகும். ஆனாலும் இன்றளவும் தமிழ் மக்கள் மத்தியில் கண்ணகி வழிபாடு காணப்படுகிறது.
தமிழில் எழுந்த காவியங்கள் பெரும்பாலும் சமண சமயத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கின. சிந்தாமணி, வளையாபதி என்னும் பெருங் காப்பியங்களும், ஐஞ்சிறு காவியங்களும் சமண சார்புடையன. கொங்குவேளிர் ஒருவர் எழுதிய உதயணன் கதையும் சமண சமயத்தைச் சார்ந்ததாகும். இதற்கு பெருங்கதை என்ற பெயர் விளங்குகிறது. இது ஆசிரியப் பாவால் எழுதப்பட்டது.
இதுவும் சீவகன் கதையைப் போன்ற அமைப்பை உடையது. மேரு மந்தர புராணம் என்னும் காவியத்தை வாமனாச்சாரியார் என்பவர் இயற்றினார். இதுவும் சோழர் காலத்து எழுந்த நூலாகும். தமிழில் தோற்றம் பெற்ற புராணங்கள் அனைத்தும் காவியங்கள் எனக் கூறப்படுகின்றன. காவியங்களுக்கு புராணங்கள் எனப் பெயரிடுவது மரபாகிவிட்டது.
தமிழ் இலக்கண நூல்கள் பெரும்பாலும் சமணப் புலவர்களாலேயே எழுதப்பட்டன. நம்பி அகப்பொருள் எழுதிய நாற்கவிராச நம்பியும், யாப்பருங்கல விருத்தியும் காரிகையும் எழுதிய அமிதசாகரரும், நேமி நாதமும் வச்சணந்தி மாலையும் எழுதிய குணவீர பண்டிதரும் நன்னூல் எழுதிய பவனந்தியாரும், உரையாசிரியர்களுள் இளம்பூரணரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்களென்று கூறப்படுகிறது. இவர்கள் தாங்கள் இயற்றிய நூல்களில் கடவுள் வாழ்த்திலேனும் கருத்துரையிலேனும் தம் சமய சார்பைப் புலப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு இலக்கிய இலக்கணங்களை எழுதி சமணர்கள் பெரும் புலவர்களாகவும் பேராசிரியர்களாகவும் தமிழுக்கு தொண்டாற்றியுள்ளனர். பல்லவர் காலத்தில் வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரும் ஆரம்பத்தில் தருமசேனர் என்ற பெயரில் சமண சமய அறிஞராகவே மக்களால் அறியப்பட்டார். அந்த வகையில சமணர்கள் தமிழுக்கு தமிழ் மொழி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியுள்ளனர். சமண பெளத்த இலக்கியங்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் ஒழுக்க நெறியை எடுத்தியம்பும் நூல்கள் தமிழில் காணப்படவில்லை. அந்த வகையில் சங்கமருவிய காலத்தில் எழுதப்பட்ட சமண பெளத்த இலக்கியங்களே மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என ஒரு நெறி முறையை வகுத்தன.
கொல்லாமையை முதன் முதலில் வலியுறுத்திய சமயங்களாக சமண பெளத்த சமயங்களை குறிப்பிடலாம், சமண பெளத்த இலக்கியங்கள் உயிர்க்கொலையை வெறுத்தன. எல்லா உயிர்கள் மீதும் அன்பு கொள்ள வேண்டும் என்ற அறக் கருத்தை போதித்தன. பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிக்கு அபயம் அளித்தவர் புத்தபிரான். அந்த வகையில் பெளத்த இலக்கியங்கள் உயிர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதை அதிகம் வலியுறுத்தின. அவ்வாறே சமண இலக்கியங்களும் கொல்லாமையை வலியுறுத்தின.
அத்தோடு கள்ளுண்டு மகிழ்வது பாவம் என்பதையும் பெளத்த சமண இலக்கியங்கள் சுட்டிக்காட்டின. சமண பெளத்த கருத்துக்கள் அக்காலத்து மக்களை மிகவும் கவர்வதாக அமைந்தது. இந்து சமயத்தில் யாகங்களும் யாகங்களோடு இணைந்த உயிர்ப்பலியும் அதிகளவில் காணப்பட்டது. இதனால் மக்கள் சமண பெளத்த போதனைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டினர். சங்கமருவிய காலத்தில் சமணமும் பெளத்தமும் தளைத்தோங்கின.
தமிழர்களில் பெரும்பாலானவர்கள் சமண பெளத்த சமயத்தை சார்ந்தவர்களாக காணப்பட்டனர். வைதீக சமயங்களான சைவமும் வைணவமும் வீழ்ச்சியுற்று காணப்பட்டன. சங்கமருவிய காலத்துக்குப் பின்னரான பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் தளைத்தோங்குவதற்காக சமண பெளத்த கருத்துக்கள் இந்த சமயங்களால் உள்வாங்கப்பட்டன. முக்கியமாக உயிர்க்கொலையை சைவ, வைணவ சமயங்கள் வெறுத்தன. உயிர்க்கொலை செய்வது பாவமென்று போதித்தன. அவ்வாறே மதுவருந்துவதும் கண்டிக்கத்தக்க செயலாக வைதீக சமயங்களால் கூறப்பட்டது. இது பல்லவர் காலத்தில் நிகழ்ந்த பக்தி இலக்கிய நெறியோடு நோக்கப்பட வேண்டியது.
இங்கே நாம் விவரிக்கும் விடயம் சங்கமருவிய காலத்து இலக்கிய வளர்ச்சியாகும். சங்கமருவிய காலத்து தமிழ் இலக்கிய செழுமைக்கு பெளத்தமும் சமணமும் பெரும் பங்காற்றின. பெளத்த நூல்களுள் தலைசிறந்த நூலாக சாத்தனார் இயற்றிய மணிமேகலை கருதப்படுகிறது. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாக மணிமேகலை போற்றப்படுகிறது. பெளத்த சமய நெறியை உணர்த்தவே இக்காவியம் இயற்றப்பட்டது. இது மணிமேகலையின் துறவை விளக்குவதோடு வாழ்வின் நிலையாமை, உயிர்களிடத்தில் அன்பைச் செலுத்துதல், பற்று அற்று இருத்தல் முதலிய பண்புகளை உணர்த்துகிறது. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் குண்டலகேசியும் பெளத்த சமய சார்பான நூலென்பது குறிப்பிடத்தக்கது.
குணடலகேசி கள்வனொருவனை காதலித்து மணம் செய்து கொண்டாள். அவள் விளையாட்டாக அவன் குறையை சுட்டிக்காட்ட அது வினையாக முடிந்துவிட்டது. அவன் அவளை ஏமாற்றி மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே வைத்து அவளிடம் தான் மலையுச்சியிலிருந்து அவளை தள்ளி கொன்றுவிடப் போவதாகக் கூறுகிறான். அவளோ சாவதற்கு முன் கணவனை மூன்று முறை வலம் வந்து வணங்கப் போவதாக தெரிவிக்கிறாள். அவனும் அதற்குச் சம்மதிக்க வலம் வருவது போல் கணவனை வலம் வந்த குண்டலகேசி அவனை மலையுச்சியிலிருந்து தள்ளி கொன்றுவிடுகிறாள்.
பின்னர் பல இடங்களிலும் அலைந்து திரிந்த குண்டலகேசி பெளத்த மதத்தைத் தழுவுகிறாள். குண்டலகேசி பலரை வாதில் வென்று இறுதியில் நீலகேசியிடம் தோற்றாலென்று குறிப்பிடப்படுகிறது. இலக்கண நூல்களுள் வீரசோழியும் பெளத்த மதத்தைச் சார்ந்த புத்தமித்திரனார் என்பவர் இயற்றியதாகும். கீழ்க்கணக்கு நூல்களில் ஒரு சில பெளத்த சார்புடையன.
சங்கமருவிய காலத்தில் தமிழகத்தில் பெளத்தமும் சமணமும் சிறப்புற்று விளங்கின. தமிழகத்திற்கு மிக அருகில் இருக்கும் இலங்கையின் வடபகுதியிலும் இந்த மதங்களின் செல்வாக்கு அன்றைய காலத்தில் மிக அதிகமாகக் காணப்பட்டது. யாழ்குடா நாட்டில் பல பெளத்த விகாரைகள் சிறப்புற்று விளங்கின. கந்தரோடையில் காணப்படுகின்ற பெளத்த வழிபாட்டுத் தலம் இதற்குச் சான்றாக விளங்குகிறது. அகழ்வாராச்சியின் போது பல புத்தர் சிலைகளும் வடபகுதியில் கண்டெடுக்கப்பட்டன. யாழ்.
குடாநாட்டில் உள்ள மாதகல் துறைமுகத்தினூடாக சங்கமித்தை வெள்ளரச மரக்கிளையை அநுராதபுரத்திற்கு கொண்டு வந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மாதகல் துறைமுகத்திற்கு அருகிலும் பெளத்த விகாரை ஒன்று சிதைவுற்ற நிலையில் காணப்படுகின்றது. தமிழர்கள் அநேகர் பெளத்தர்களாகவும் சமணர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
சங்கமருவிய காலத்திற்கு பிற்பட்ட காலமான பல்லவர் காலத்தில் ஏற்பட்ட வைதீக சமயங்களின் வளர்ச்சி இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழர்கள் மீதும் செல்வாக்கைச் செலுத்தியிருக்கலாம். இதனால் பெளத்தர்களாகவும் சமணர்களாகவும் வாழ்ந்த தமிழர்கள் பலரும் சைவர்களாக மாறியிருக்கலாம். இவ்வாறான ஒரு கருத்து வரலாற்று ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
சமணமும் பெளத்தமும் வளர்ச்சியுற்றிருந்த சங்கமருவிய காலத்தில் நீதி நூல்கள் பல எழுத்தப்பட்டன. இந்த நீதி நூல்களுள் ஒரே புலவன் எழுதிய பல பாடல்களை காணக்கூடியதாக இருக்கிறது. பல புவலர்கள் பாடித் தொகுத்த பாடல்களும் உள்ளன. இக்காலத்தில் கட்டுரை எழுதும் போது ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து பின்னர் விளக்கம் தருவது போல சமண பெளத்த இலக்கியங்கள் காணப்பட்டன. சங்கமருவிய காலத்தில் தோற்றம் பெற்ற திருக்குறள் குறிப்பிட்ட தலைப்புக்கேற்ற செய்திகளை அடிக்கித் தொகுத்து கட்டுரை வடிவில் அமைந்துள்ளது. ஏனைய நூல்களும் இவ்வாறே அமைந்துள்ளன.
திருக்குறள் ஓர் ஆசிரியரால் பாடப்பட்டது. நாலாடியார் பல ஆசிரியர்கள் பாடிய தொகுப்பு நூலாகும். தனிப்பட்ட ஆசிரியர்கள் எழுதிய நூலாயினும் பண்டைக் கருத்துக்களை தொகுத்து அமையும் போக்கை பெரிதும் தழுவியுள்ளன. பழமொழி என்பது பழைய மொழிகளை தொகுத்து முன்றுறையார் என்பவர் பாடியதாகும். ஏனைய நூல்கள் தனித்தனிப் புலவர்களால் பாடியவை, எனினும் ஒருவரைப் பார்த்து ஒருவர் போட்டியிட்டு சிறந்த கருத்துக்களை அறிவிப்பதில் முந்திக்கொள்ள முயன்றனர்.
மருத்துவன் உடம்புக்கு நல்லது இது. உடம்புக்கு ஆகாதது இது என விதித்தும் விலக்கியும் கூறியது போல எழுதப்பட்ட இலக்கியங்களும் காணப்படுகின்றன. இனியவை நாற்பது, இன்னா நாற்பது என்பன ஒன்றைப் பார்த்து மற்றொன்று அமைந்தது போல காணப்படுகின்றன.
சொல்வதை அளவாக சொல்ல வேண்டுமென்ற கட்டுப்பாட்டோடு எழுதியவர்களும் உள்ளனர். அதிகமாக வற்புறுத்தினால் நீதிகளும் கசந்துவிடும். பிரசார நெடி மிகுந்த இலக்கியங்களை மக்கள் விரும்பிப் படிக்க மாட்டார்கள். ஈரடிகள் கொண்டு விளக்குவது திருக்குறள், நாலடிகளில் இயற்றப்பட்டது நாலடியார். ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியும் இதனாலேயே எழுந்தது. நாலடியார் வாழ்க்கையின் நிலையாமை தத்துவத்தை அதிகம் கூறுவதாக உள்ளது. திருக்குறளைப் பின்பற்றி காமத்துப்பாலும் இதிலுள்ளது. சமண சமயப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நூலாக நாலடியார் கருதப்படுகிறது.
சிந்தாமணியை எழுதிய திருத்தக்கதேவர் வாழ்க்கையில் நேர்த்தியான கொள்கை உடையவர். துறவியாக வாழ்ந்தவர். வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர். பிரமச்சாரியாக வாழ்ந்தார். சமண சமயத்தவராகக் காணப்பட்டார். இதுவே அவர் காவியத்தின் நெறியாகவும் திகழ்கிறது. சிந்தாமணி என்ற இலக்கியத்தின் நாயகனான சீவகன் எட்டு திருமணங்கள் செய்தவன். வாழவின் நிலையாமையைக் கண்டு அவ்வாழ்வை வெறுத்தொதுக்கி விட்டதால் அமைதி கண்டான். கன்னியர் எண்மரைக் காதல் மணம் புரிந்தான்.
அதன் காரணமாக எதிர்த்த மன்னர்கள் பலரை புறமுதுகிடும்படி போரில் வென்றான். காதலும் வீரமும் காவிய உணர்வுகளாக காட்டப்பட தீவினை தோற்றலும் அறம் வெல்லலும் கதையின் முடிவாக அமைகிறது. சூழ்ச்சி மிகக் கட்டியங்காரன் இறுதியில் தோற்க நன்மை வெல்வதை இங்கே திருத்தக்கதேவர் எடுத்துக்காட்டியுள்ளார்.
இத்தகைய போரட்டக் கதையை எழுதியதோடு இடையிடையே சமண சமய கருத்துக்களையும் இவர் புகுத்தியுள்ளார்.
வளையாபதி, குண்டலகேசி ஆகிய காவியங்கள் கிடைக்கப்பெறவில்லை. இவற்றின் ஒரு சில பாடல்களே கிடைத்தன. வளையாபதி சமண சமய கருத்துக்களை உள்வாங்கி எழுதப்பட்டது. குண்டலகேசி பெளத்த சார்புடைய நூலென்று அறிய முடிகின்றது. நிலகேசி எனும் நூல் சமண நூலாக கருதப்படுகின்றது. உதயணன் கதையைக் கூறுவது உதயணகுமார காவியம், யசோதர காவியமென்பதும் சமண நூலாகும். இது உயிர்க்கொலையின் தீமையைப் பற்றியும் ஒழுக்க உயர்வைப் பற்றியும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
சங்கமருவிய காலத்தில் தோற்றம் பெற்ற சமண பெளத்த இலக்கியங்களுக்கு பிற்பட்டதாகவே நாயன்மார்களால் பாடப்பெற்ற தேவார பிரபந்தங்களும் சேக்கிழார் பெருமானால் பாடப்பெற்ற பெரிய புராணமும் காணப்படுகிறது. எனவே சைவ வைணவ அறிஞர்களுக்கு முன்னராகவே சமண பெளத்த அறிஞர்கள் தமிழிலே சிறந்த இலக்கியங்களை எழுதியுள்ளனர் என்பதை வரலாற்றிலிருந்து அறிய முடிகின்றது. சமண பெளத்த இலக்கியங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக அமைந்துள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
»»  (மேலும்)

நேபாளத்தில் ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமா?

நேபாள அரசியலில் தோன்றிய இக்கட்டு நிலை தீர்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மூன்று மாதங்களாகப் பிரதமர் ஒருவர் இல்லாதிருக்கும் நிலை இன்னும் தொடரும் போல் தெரிகின்றது.
நேபாளத்தின் இன்றைய பாராளுமன்றம் அரசியலமைப்பொன்றை வரையும் விசேட நோக்கத்துக்காக 2008ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டது. நீண்ட காலமாகக் கெரில்லா போரில் ஈடுபட்டிருந்த மாவோவாதிகளை ஜனநாயக நீரோட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே இப் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இப் பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாகச் செயற்பட்டு இரண்டு வருடங்களுக்குள் அரசியலமைப்பை வரைந்து ஏற்றுக்கொள்வதெனவும் அதன் பின் அரசியலமைப்புக்கு அமைவாகப் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது எனவும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற மாவோவாத அமைப்புக்கும் ஜனநாயகக் கட்சிகளுக்குமிடையே உடன்பாடு காணப்பட்டது. புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் வரை இடைக்கால அரசியலமைப்பொன்று நடைமுறையில் இருக்கும்.
ஜனநாயகக் கட்சிகள் எதிர்பாராத வகையில், தேர்தலில் மாவோவாதிகள் தனிக்கட்சியாகக் கூடுதலான ஆசனங்களை வென்றனர். மொத்தம் 575 பேரைக் கொண்ட சபையில் அவர்களுக்கு 220 ஆசனங்கள் கிடைத்தன. நேபாள காங் கிரஸ் 110 இடங்களையும் நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி (ஒன்றிணைந்த மாக்சிஸ்ட்- லெனினிஸ்ட- UML ) 103 இடங்களையும் சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும் 142 இடங்களையும் பெற்றன.
பிரசண்ட
மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹால் (பிரசண்ட்) பிரதமராகப் பதவியேற்றார். இராணுவத் தளபதியுடனான முரண்பாடு காரணமாக அவர் இராஜினாமா செய்ததும் UMLி கம்யூனிஸ்ட் கட்சியின் மாதவ் குமார் நேபால் பிரதமராகப் பொறுப்பேற்றார். மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாகச் செயற்பட்டது.
பாராளுமன்றத்தின் இரண்டு வருட ஆயுட்காலம் 2010 மே 28ந் திகதியுடன் முடிவடைந்தது. அக்காலத்துக்குள் அரசியலமைப்பு வரைவு இடம்பெறாததால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு இல்லாமல் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாது.
மாதவ் குமார் நேபால் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தால் தான் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க முடியும் என்று மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனை விதித்தது. மாதவ் குமார் நேபால் மே மாத இறுதியில் இராஜினாமா செய்தார். பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 2011 மே 28ந் திகதி வரை நீடிக்கப்பட்டது. இத்திகதிக்கு முன் அரசியலமைப்பை வரைவதற்கான முன்தேவையாகப் பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் மாவோவாத தலைவர் பிரசண்டவும் நேபாள காங்கிரஸின் ராம் சந்திர பவ்டெலும் களத்தில் நிற்கின்றனர். பிரதமரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஜுன் மாதத்திலிருந்து இதுவரை ஐந்து தடவைகள் நடைபெற்ற போதிலும் ஒருவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆறாவது வாக்கெடுப்பு செப்ரெம்பர் 5ந் திகதி நடைபெறவிருக்கின்றது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (UML ) எடுத்திருக்கும் முடிவே இந்த இக்கட்டு நிலைக்குக் காரணம். வாக்கெடுப்பு மூலமாகவன்றி எல்லாக் கட்சிகளும் கூடிப் பேசிக் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் பிரதமரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று இக்கட்சி கூறுகின்றது. பிரசண்டவும் பவ்டெலும் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று இக்கட்சி வேண்டுகோள் விடுக்கின்றது.
இந்த நிலையில் நேபாள காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அறவே இல்லை. சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைப் பிரதிநிதிகள் 142 பேரும் நேபாள காங்கிரஸ் வேட்பாளர் ராம் சந்திர பவ்டெலுக்கு வாக்களித்தாலும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. அப்போதும் அவருக்கு 252 வாக்குகளே கிடைக்கும். வெற்றி பெறுவதற்குக் குறைந்தது 288 வாக்குகளைப் பெற வேண்டும்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ( UML) அதன் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதால் தனக்கு வெற்றிவாய்ப்பு அறவே இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு பவ்டெல் போட்டியிலிருந்து விலகுவது தான் நியாயமானது. ஆனால் அவரோ அவரது கட்சியோ போட்டியிலிருந்து விலகுவதற்குத் தயாராக இல்லை. அறுதிப் பெரும்பான்மைக்கு அருகேயும் செல்ல முடியாது என்பதைத் தெரிந்துகொண்டும் போட்டியிலிருந்து விலகாமலிருப்பதற்குப் பிரத்தியேகமான காரணம் இல்லாமலிருக்காது.
பவ்டெல் போட்டியிலிருந்து விலகினால் பிரசண்ட போட்டியின்றித் தெரிவாகுவார். பிரசண்ட பிரதமராகுவதைத் தடுப்பதே நேபாள காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுவதை நிராகரிக்க முடியாது.
இந்தியாவினது ஆலோசனையின் பேரிலேயே நேபாள காங்கிரஸ் இவ்வாறு செயற்படுகின்றது என்ற அபிப்பிராயம் நேபாளத்தில் பரவலாக நிலவுகின்றது. பிரசண்டவுக்கு ஆதரவாக வாக்களிப்பதிலிருந்து சிறிய கட்சிகளையும் இந்தியாவே தடுத்திருக்கின்றது என்றும் சொல்கின்றார்கள். பிரசண்ட பிரதமராகப் பதவியேற்றதும் முதலாவதாகச் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டதையிட்டு அந்த நேரத்தில் இந்தியா அதிருப்தி தெரிவித்ததையும், இந்திய மாவோயிஸ்டுகள் காங்கிரஸ் அரசாங்கத்துக்குப் பிரதான அச்சுறுத்தலாக இருப்பதையும் பின்னணியாகக் கொண்டு பார்க்கையில், நேபாளத்தில் மாவேயிஸ்டுகள் அதிகாரத்துக்கு வருவதை இந்தியா விரும்பாதென்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
எவ்வாறாயினும் நேபாள பாராளுமன்றம் இவ்வருட முடிவுக்குள் பிரதமரைத் தெரிவு செய்தால் தான் 2011 மே 28ந் திகதிக்கு முன் அரசியலமைப்பைத் தயாரித்து நிறைவேற்றுவது சாத்தியமாகும்.
பிரதமரைத் தெரிவு செய்ய முடியாமற் போனால் தோல்வியடைவது பிரசண்டவும் பவ்டெலுமல்ல. ஜனநாயகம்.
»»  (மேலும்)

8/28/2010

நெக்டெப் திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் மட்டக்களப்பு நகரின் செயற்றிட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.

நெக்டெப் திட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மெற்கொள்ளப்பட்டு வருகின்ற விசேட செயற்றிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (27.08.2010) கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக மட்டக்ளப்பு திருப்பெருந்துறையில் அமைக்கப்பட்டு வருகின்ற மிகப் பாரிய திட்டமான சுழற்சி செய்யக்கூடிய திண்மக் கழிவுகளை தரப்படுத்தும் நிலையம் அமைத்தல் தொடர்பாக பேசப்பட்டது. அத்தோடு அதனை நிருவகிப்பது எவ்வாறு என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டு பின்னர் மட்டு மாநகர சபையே அதனைப் பொறுப்பேற்று நிருவகிப்பதாக தீர்மாணிக்கப்பட்டது. அத்தோடு இதனுடணிணைந்த வகையில் கூட்டுப் பசளை தயாரிக்கும் நிலையம், குப்பை நிரப்பம் இடம் என்பன தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பாலமீன்மடுவில் அமைக்கப்பட்டிருக்கின்ற சூழல் கற்கை நிலையத்தினை ஒரு பதிவு செய்யப்பட்ட அப்பிரதேசத்தைச் சார்ந்த பொது அமைப்பிற்கு வழங்குவதாவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு கல்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டு வருகின்ற  சிறுவர்குளுக்கான பூங்கா மற்றும் நடைபாதை தொடர்பாகவும் பேசப்பட்டது. மேலும் மட்டு மாநகரின் பேருந்து தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற கடைத்தொகுதிகளை எவ்வாறு வழங்குவது அத்தோடு அதனை நிருவகிப்பது தொடர்பாகவும் ஆராயப்படட்;டது. மேலும் பாலமீன் மடுவிலிருந்து சவுக்கடிவரை அமைக்கப்பட்டு வருகின்ற கரையோரப்பாதைப் புணர்நிர்மான வேலைகள் தொடர்பாகவும் பேசப்பட்டது. அதேபோல் மட்டக்ளப்பிற்கான நுழைவாயில், தகவல் நிலையம் என்பன தொடர்பாகவும் ஆராய்ந்து பல்வேறு செயற்றிட்டங்களுக்கு பெரும்பாலும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏவ்வாறாயினும் 3000மில்லியன் ருபாய்க்கு மேல் மட்டக்களப்பில் பல்வேறு வேலைத்திட்டங்களை நெக்டெப் மேற்கொண்டு வருகின்றது. இதன் செயற்றிட்டக் காலம் நவம்பர் மாதம் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
இவ் விசேட கலந்துரையாடலில் மட்டு நாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், கிழக்கு மாகாண சபை உறுப்பின் பூ. பிரசாந்தன்,நெக்டெப் திட்டப்பணிப்பாளர் எஸ்.எம். குருஸ், பிரதிதிட்டப் பணிபாளர் எஸ். சாமித்தம்பி, பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை, ஆணையாளர் சிவநாதன் மற்றும் பல முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டார்hகள்.
img_4966
img_4970
»»  (மேலும்)

வாகன விபத்தில் மாணவி ஒருவர் தலத்திலேயே பலி - மட்டக்களப்பில் சம்பவம்.

வின்சன் உயர்தரப்பாடசாலையில் கல்வி பயிலும் முனைக்காட்டை சேர்ந்த செல்வி நற்குணம் கோகிலா எனும் மாணவியே இவ்விபத்தில் பலியானார், குடும்பத்தில் ஒரே பிள்ளையான இவர் பாடசாலையில் இடம்பெறுகின்ற பிரத்தியேக வகுப்பபுக்காக சென்றவேளையிலேயே மட்டக்களப்பு வாவிக்கரை வீதி சுற்றுவட்டத்தில் செங்கலடியில் இருந்து வந்த மண் லொறி ஒன்றில் மோதி பலியானதாக அறியமுடிகின்றது.
img_4908
img_4903
»»  (மேலும்)

அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கா மு.காங்கிரஸ்

ரவூப் ஹக்கீம்
இலங்கையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னனியின் கூட்டு கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசியல் யாப்பில் அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள இரண்டு திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
அக் கட்சியிலுள்ள ஒரு சாரார் அரசிற்கு அதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் அதேவேளை அக்கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீமிற்கும் ஜனாதிபதிக்குமிடையில் இரு தினங்களுக்கு முன்பு சந்திப்பொன்று இடம்பெற்ற நிலையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் உயர்பீடம் கொழும்பில் கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
ரவூப் ஹக்கீம்
இரண்டு பதவிக்காலங்கள் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தற்போதை யாப்பில் திருத்தம் கொண்டுவருவதற்கும், அரசியலமைப்பின் 17வது திருத்தத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கான அரசின் திட்டத்திற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
"இத் தீர்மானம் காரணமாக எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் தனது கட்சிக்குமிடையிலான உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது, அரசிற்கு தொடர்ந்தும் ஆதரவு தேவைப்பட்டால் கட்சியின் அரசியல் உயர்பீடம் அவ்வப்போது கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கும்" என்று ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குமாறு ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமது தலைவர் ஹக்கீமிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தமது கட்சியின் அரசியல் உயர்பீடம் கூடி இந்த தீர்மானத்தை எடு்த்ததாக முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகு தாவூத் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த 8 பேர் தற்போது அங்கம் வகிக்கின்றார்கள். உத்தேச அரசியல் யாப்பு திருத்தத்திற்கு அதரவு வழங்குவது என்று அக்கட்சி எடுத்துள்ள தீர்மானம் காரணமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும் என்று ஆளும் கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
»»  (மேலும்)

இந்திய வெள்ள நிவாரண உதவி: பாகிஸ்தான் தீர்மானிக்கவில்லை

பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத வெள்ளச் சேதத்திலிருந்து மக் களை மீட்க இந்தியா தரும் சுமார் 2,500 கோடி ரூபாய் உதவியை வாங்கிக் கொள்வது என்று முடிவு செய்துவிட்ட பாகிஸ்தான் அந்த உதவியை எந்த வடிவில் பெறுவது, எங்கே பெறுவது, எப்படிப் பெறுவது என்பதையெல்லாம் இன்னமும் தீர்மானிக்காமல் இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு வந்து வெள்ளச் சேத மீட்பு, நிவாரண உதவிகளைச் செய்ய விரும்பும் தன்னார்வத் தொண்டு நிறுவனங் களுக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் தாராளமாக விசா அளிக்குமாறு வெளிநாடுகளில் உள்ள தன் னுடைய தூதரகங்களுக்குத் தகவல் அனுப் பியிருக்கும் பாகிஸ்தான் அதிலும் ஒரு விஷமம் செய்திருக்கிறது. இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனி நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் விசா தர வேண்டாம் என்றும் கூறியிருக்கிறது.
இஸ்ரேலையும் இந்தியாவையும் ஒரே தட்டில் வைத்ததன் மூலம் இந்தியாவை எதிரியாகவே பாகிஸ்தான் கருதுவதைப், புரிந்துகொள்ள முடிகிறது.
இருந்தும் நெருக் கடியான இந்தத் தருணத்தில் பகைமையைப் பாராட்டக் கூடாது என்ற விவேகம் கூட பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதையே இந்த விசா உத்தரவு காட்டுகிறது.
பாகிஸ்தானில் இப்போது நேரிட்டுள்ள வெள்ளச் சேதத்தை சர்வதேச அமைப்புகள் மதிப்பிட்டு வருகின்றன; என்ன சேதம் ஏற்பட்டது, என்னென்ன தேவைப்படுகிறது என்ற பட்டியல் தயாரானதும், இந்தியாவால் எந்த வகையில் உதவ முடியும் என்று பார்த்து உதவிகள் கேட்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி அப்துல் பாசித், இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தானில் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளைவிட்டு வெளியேற நேர்ந்திருக்கிறது. சுமார் 2 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வந்த வுடனேயே பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி யைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்தியாவின் கவலையைத் தெரிவித்ததுடன், என்ன உதவிகள் தேவை என்றாலும் உடனே அளிக்கத் தயார் என்றார். உங்கள் உதவும் மனப்பான்மைக்கு நன்றி, தேவைகளைப் பிறகு சொல்கிறேன் என்று அப்போது பதில் அளித்தார் கிலானி.
அதன் பிறகு அமெரிக்கா நெருக்கிய தால்தான் இந்தியாவிடம் உதவிகளைப் பெற பாகிஸ்தான் சம்மதித்தது என்று செய்தி ஊடகங்கள் விஷமப் பிரசாரம் செய்தன. இது பாகிஸ்தான் அரசில் செல்வாக்கு பெற்றுள்ள இராணுவ, ஐ. எஸ். ஐ. வட்டாரங்களின் வேலை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். நெருக்கடியான இந்த நேரத்தில் கூட இந்தியாவிடம் பாகிஸ்தான் நெருங்கிவிடக் கூடாது என்பதில் அவை எச்சரிக்கையாக இருப்பதையே இந்தச் செய்தி திரிப்பு உணர்த்துகிறது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் மூலம் இந்தியா தனது உதவியை அளிக்கலாம் என்றே பாகிஸ்தான் கூறக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
ஆனால் பாகிஸ்தானுடன் நெருங்கிய நில எல்லை உடையதும் சாலைகள், ரயில் பாதைகள், கடல் வழி, ஆகாய வழி என்று எல்லா, வகையிலும் பாகிஸ்தானுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பது இந்தியாதான் என்பதால், இந்தியாவிடமே உதவிகளைக் கேட்டுப் பெறலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ் தானிடம் கூறுகின்றன. ஆனால் பாகிஸ்தான் தான் இன்னமும் தயக்கத்தைவிட்டு உதவிகளைப் பெற முன்வரவில்லை.
இதற்கிடையே பாகிஸ்தான் பத்திரிகைகளில் சில ஜீலம், சீனாப் ஆறுகளில் இந்தியா திடீரென தண்ணீர் திறந்துவிட்டதால்தான் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது என்று கூட அபாண்டமாக செய்திகளை வெளியிட்டன.
»»  (மேலும்)

8/27/2010

வெகுஜன போராட்டம் நடாத்தப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எச்சரிக்கை.


sahajamமர்மமான முறையில் காணாமல் போயுள்ள தமது கட்சியினர் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அவர் மூன்று தினங்களுக்குள் விடுதலை செய்யாத  பட்சத்தில் அவரை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் வெகுஜன போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மத்திய செயற்குழு சார்பாக அக்கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜாவினால் விடுக்கப்பட்டுள்ள் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கடந்த சனிக்கிழமை இரவு முதல் குறித்த உறுப்பினர் காணாமல் போன சம்பவமானது சமாதானத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதுடன் மனிதாபிமானம் அற்ற ஜனநாயக விரோத செயலாகவும் இது அமைகின்றது. அத்துடன் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காணாமல்  போயுள்ள மாநகர சபை உறுப்பினரை கடத்தியவர்கள் உடனடியாக விடுதலை செய்து மட்டக்களப்பு மாநகரின் சுமுகமான சூழ்நிலையினை பாதுகாக்க வேண்டும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

மலையகத்தில் கல்வி எங்கே போகிறது?

தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று அண்மையில் மலையகத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பாடசாலையைவிட்டு இடைவிலகும் மாணவர்களின் தொகை 10 முதல் 25 வீதமாகக் காணப்படுகிறது. ஏனைய பகுதிகளில் 7.6 வீதமாக உள்ளது. ஆரம்பப் பிரிவில் 8.4 வீதமானோர் இடை விலகுகின்றனர். ஏனைய மாவட்டங்களில் இந்தத் தொகை 1.4 வீதமாக உள்ளது.
மலையகத்திலுள்ள 830 பாடசாலைகளில் பயிலும் சுமார் இரண்டு இலட்சம் மாணவர்களில் இந்தளவு தொகை இடைவிலகி வருகின்ற அதேவேளை, இவர்களுள் 7 வீதமானோர் உயர் தரத்திற்குத் தோற்றி, அவர்களுள் ஒரு வீதமானவர்களே பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிறார்கள் என்ற வருந்தத்தக்க தகவல் ஆய்வின் மூலம் வெளிவந்திருக்கிறது.
பெற்றோரின் வறுமை நிலை, போக்குவரத்து வசதி இன்மை, பாடசாலைகளில் பெளதிக வளப்பற்றாக்குறை போன்ற காரணிகள் மாணவர்களின் கல்விக்குத் தடையாக இருக்கின்றதாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடசாலைகளில் ஒரு வகுப்பறையில் 2,3 வகுப்புகள் நடைபெறுவதுடன் மேசை, கதிரை வசதிகளின்றி மாணவர்கள் சிரமப்படுவதாகவும் தெரியவந்திருக்கிறது. மேலும் பாடசாலைகளில் மாணவர்களுக்குக் குடிநீர் வசதி, மலசலகூட வசதி இல்லாத நிலையும் காணப்படுகிறது. இந்த ஆய்வுத் தகவல் பற்றி பத்திரிகைகளில் செய்திகளும் வெளியாகியிருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர்கள் மிகக் குறைந்த பயிற்சிகளையே பெற்றிருப்பதாகவும் 50 வீதமானோர் பயிற்சியே பெறவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டாலும் கல்வி வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறப்படும் பகுதிகளிலும் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி வருவதையே காண முடிகிறது.
மலையகத்தில் போக்குவரத்து வசதியைப் பொறுத்தவரை இன்னமும் வளர்ச்சியுறாத நிலைதான் காணப்படுகிறது. ஆரம்பப் பிரிவு மாணவர்கள் இன்னமும் நான்கைந்து மைல் நடந்து பாடசாலைக்குச் சென்று வருவதை பல தோட்டப் பகுதிகளில் காண முடிகிறது. அவ்வாறு சென்றாலும் பாடசாலையில் நிம்மதியாகக் கல்வி கற்பதற்கான சூழல் இல்லை. இதனால், மாணவர்கள் இடைவிலகுவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
ஆசிரியர்களும் முன்பு நடந்து சென்றாலும் இப்போது மோட்டார் சைக்கிள்களையும், முச்சக்கர வண்டிகளையும் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், மாணவர்களின் தலையெழுத்து மாறுவதாகத் தெரியவில்லை. இதற்கு பஸ் கம்பனி நடத்தும் சங்கக்காரர்கள் மனது வைத்தால் இயலாதது எதுவுமில்லை. என்றாலும் மலையகத்தில் கல்வி நிலையைக் கை தூக்கிவிட ஆசிரியர்களால்தான் பங்களிப்புச் செய்ய முடியும். தாமும் முன்னேறி பாடசாலையையும், பிள்ளைகளையும் முன்னேற்ற பாடுபடுவர்களைப் பாராட்டி வரலாறு பதிவு செய்யும்.

»»  (மேலும்)

41 இலட்சம் மாணவர்; 9700 அரச பாடசாலைகள்: இலவச பாடப் புத்தகங்களை அச்சிட ரூ. 300 கோடி ஒதுக்கீடு

அடுத்த வருடத்துக்கான பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்காக அரசாங்கம் 300 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.
9700 அரசாங்க பாடசாலைகள், மற்றும் அரசின் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் 75, பிரிவெனாக்கள் 722 ஆகியவற்றில் கல்வி பயிலும் சுமார் 41 இலட்சம் மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
364 வகையான பாடசாலை புத்தகங்கள் அடுத்த வருடத்தில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அவற்றை பகிர்ந்தளிக்கும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் நேற்று முன் தினம் (25) ஆரம்பமாகின.
2011ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் இவ்வருடம் டிசம்பர் 6ஆம் திகதிக்கு முன் பகிர்ந்தளிக்கப்பட்டுவிடும்.
இதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சின் வெளியீடுகளுக்கு பொறுப்பான திணைக்களம் செய்துள்ளதாக அதன் செயலாளர் நாயகம் டபிள்யூ. எம். என். கே. புஷ்பகுமார கூறினார்.
கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பிரசுரங்களை எவரும் கொள்வனவு செய்வதற்கு ஏற்ற வகையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் உள்ளிட்ட பிரதான ரயில் நிலையங்கள் பலவற்றில் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட வுள்ளன.
»»  (மேலும்)

‘நாட்டுக்கு போக கேட்டபோதெல்லாம் ஆணிகள், குண்டூசிகளை உடலில் செலுத்தினர்’ சவூதியில் சித்திரவதைக்குள்ளான பெண் வாக்குமூலம்

சவூதியில் உடல் ரீதியாக மிக மோசமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பிய இலங்கைப் பணிப் பெண்ணின் உடலிலுள்ள ஆணிகள், குண்டூசிகளை அகற்றும் சத்திர சிகிச்சை இன்று நடைபெறுகிறது.
கம்புறுபிட்டிய திஹகொடையைச் சேர்ந்த எல். பி. ஆரியவத்தியின் சத்திரசிகிச்சைகள் நடைபெறுவதற்கு முன்னதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க குறித்த பெண்ணை நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
மேற்படி பெண்ணின் உடலில் 23 ஆணிகள் மற்றும் குண்டூசிகள், கம்பிகள் என்பனவும் காணப்படுவதாக எக்ஸ்ரே மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கம்புறுப்பிட்டிய போதனா வைத்தியசாலை பதில் வைத்திய அதிகாரி பிரபாத் கஜதீர தெரிவித்துள்ளார். நாடு திரும்ப வேண்டும் என தான் தெரிவித்த போதெல்லாம் உடலுக்குள் குண்டூசிகளையும், ஆணிகளையும் செலுத்தி சித்திரவதை செய்ததாக பெண் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாத்தறை கிளை அலுவலக அதிகாரிகள் நேற்று முன்தினம் (25) ஆஸ்பத்திரிக்குச் சென்று வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டனர்.
மோசமான மனித உரிமை மீறல் என்பது குறித்தும் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் பணியகம் முறைப்பாடு செய்துள்ளது. அத்துடன் சவூதி அரசுக்கும் தனது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளது என்றும் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.
»»  (மேலும்)

8/26/2010

இந்திய அரசின் உதவியுடன் வடமாகாணத்தில் 51 ஆயிரம் வீடுகள்

  இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் 51 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக 50 கோடி ரூபா செலவில் ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு செப்டெம்பர் முதல் வாரத்தில் இந்திய அரசாங்கத்தின் உயர் மட்டக்குழு இலங்கை வரவுள்ளதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டார். முற்றாக வீடுகளை இழந்த காணிகள் அற்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படவுள்ள காணியின் அளவு மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் ஊடாக இந்திய அரசாங்கத்திடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.
மன்னார் மாவட்டத்தில் 175 வீடுகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 250 வீடுகள், வவுனியா மாவட்டத்தில் 150 வீடுகள், யாழ். மாவட்டத்தில் 125 வீடுகள் என்ற அடிப்படையில் 1000 வீடுகள் இந்த முதற்கட்டத்தின் போது நிர்மாணிக்கப்படவுள்ளன.
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வீடொன்றுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா செலவு செய்யப்படவுள்ளதுடன், இரண்டு அறைகள் அடங்கிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பணிகள் மூன்று மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படவுள் ளன.
»»  (மேலும்)

ஜீ.எஸ்.பி. சலுகையை நீக்கியதால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

ஜீ. எஸ். பி. சலுகையை ஐரோப்பிய யூனியன் மீளப் பெற்றுக்கொண்டமை இலங்கைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒரு தொழிற்சாலையாவது மூடப்படவில்லை என்பதுடன் ஒரு தொழிற்சாலை ஊழியராவது வேலையை இழக்கவும் இல்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறுகிறார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஒரு சில தொழிற்சாலைகள் அண்மைக் காலத்தில் மூடப்பட்டன. அதிக சம்பள பிரச்சினை, கடுமையான தொழில் சட்டம், முகாமைத்துவத்தின் பிணக்குகள் காரணமாகவே அவை மூடப்பட்டதேயொழிய ஜீ.எஸ்.பி. சலுகை மீளப்பெறப்பட்டதன் காரணமாக அல்ல என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
முதலீட்டு சபையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் தற்போது உள்ள 7400 வேலை வாய்ப்புகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
ஜீ.எஸ்.பி. சலுகை மீளப்பெறப்பட்டதன் காரணமாக ஆடைக் கைத்தொழில் துறையில் ஈடுபட்டிருந்த சில தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக கூறப்படுவதை பிரதி அமைச்சர் நிராகரித்தார்.
ஐரோப்பிய யூனியன் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் இணங்கப்போவதில்லை என்று கூறிய பிரதி அமைச்சர், ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டின் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் தைத்த ஆடைகளில் 70 சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஜீ. எஸ். பி. சலுகை மீளப்பெறப்பட்டதால் எமது நாடு மட்டுமே பாதிக்கப்படும் என்று கூறுவது சரியல்ல. எமது உற்பத்திகளை வாங்குவோர் அவற்றுக்கான விலைகளை கொடுக்கும்போது அவர்களும் மோசமாக பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மீளப்பெறப்பட்ட ஜீ.எஸ்.பி. சலுகையை மீண்டும் பெறுவதற்கான பேச்சுவார்த் தைகளை அரசாங்கம்
»»  (மேலும்)

8/25/2010

பின்தங்கிய கிராமங்களில் போக்குவரத்து வசதியை சீர்செய்யும் முதலமைச்சரின் திட்டம்

கிழக்கு மாகாண முதலரமைச்சரிடம் அப் பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகளின் அடிப்படையில் முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சியன் காரணமாக மேற்படி போக்குவரத்துச் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்ட்டது.

  மட்டக்களப்பு வாகரை  கட்டுமுறிவு மற்றும் தொப்பிக்கல ஆகிய கிராமங்களுக்கான பஸ் சேவை முதற் தடவையாக கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
Badulla Bus Depot, Badulla Sri Lanka, Indiaகிழக்கு மாகாண கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விமலவீர திஸாநாயக்க பஸ் சேவைகளை ஆரம்பித்து வைத்தார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மற்றும் பின் தங்கிய கிராமங்களில் போக்குவரத்து வசதியை சீர்செய்யும் திட்டத்தின் கீழ் மேற்படி பஸ் சேவை ஆரம்பிக்ப்பட்டுள்ளது.
கட்டுமுறிவிலிருந்து வாழைச்சேனை வரை மற்றும் தொப்பிக்கலயிலிருந்து கிரான் ஊடாக வாழைச்சேனை வரை இரண்டு பஸ் சேவைகள் நடத்தப்படும் என கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் யுவநாதன் தெரிவித்தார்.
»»  (மேலும்)

கிழக்கு மாகாண சபை பொது மக்கள் முறைப்பாட்டுப் குழுவின் முறைப்பாட்டு பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம்.

complaintsகிழக்கு மாகாண சபை பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழுவின் முறைப்பாட்டுப் பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முறைப்பாட்டுப் பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆரம்பித்து வைக்க இருக்கனிறார். எதிhவரும் 27.08.2010 அன்று கல்லடியில் அமைந்துள்ள  மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் மகாநாட்டு மண்டபத்தில் மு.ப 10.30 மணிக்கு மேற்படி நிகழ்வு  இடம்பெறும்.
»»  (மேலும்)

கிழக்கு மாகாண சபை பொது மக்கள் முறைப்பாட்டுப் குழுவின் முறைப்பாட்டு பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம்.

கிழக்கு மாகாண சபை பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழுவின் முறைப்பாட்டுப் பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முறைப்பாட்டுப் பெட்டிகள் அங்குரார்ப்பண வைபவம் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆரம்பித்து வைக்க இருக்கனிறார். எதிhவரும் 27.08.2010 அன்று கல்லடியில் அமைந்துள்ள  மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் மகாநாட்டு மண்டபத்தில் மு.ப 10.30 மணிக்கு மேற்படி நிகழ்வு  இடம்பெறும்.
»»  (மேலும்)

21.08.2010 (சனிக்கிழமை) அன்று முதற்பக்கத்தில் வெளியாகிய செய்தி தொடர்பான மறுப்பறிக்கை (பழைய பிள்ளையானாக மாறுவேன் என்கிறார் சந்திகாந்தன்)

பிரதம ஆசிரியர்,
சுடர் ஒளி,
இல 85, ஜெயந்தமல்லிமாராய்ச்சி மாவத்தை,
கொழும்பு-14,
த.பெ. இல 2129.

21.08.2010 (சனிக்கிழமை) அன்று முதற்பக்கத்தில் வெளியாகிய செய்தி தொடர்பான மறுப்பறிக்கை (பழைய பிள்ளையானாக மாறுவேன் என்கிறார் சந்திகாந்தன்)
குறித்த தினத்தில் தங்களது பத்திரிகையின் முன் பக்கத்தில் பிரசுரமாகியிருக்கும் பழைய பிள்ளையானாக மாறுவேன் என்கிறார் சந்திகாந்தன் எனும் தலைப்பிலான செய்தியானது எவ்விதமான அடிப்படை ஆதாரங்களும் அற்ற நிலையில் பிரசுரிக்கப்பட்டிருப்பதனை தங்களின் கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகின்றேன். குறித்த தினத்தில் முதலமைச்சர் சந்திரகாந்தன் தனது பணிநிமிர்த்தம் ஆரையம்பதி கிராமத்தில் நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் மக்களுடனான சந்திப்பில் கலந்து கோண்டிருந்தார். இக் கலந்துரையாடலில் முதலமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,  ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம சேவை உத்தியேகாஸ்தர்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். இந் நிகழ்வில் குறித்த காணி எல்லைப்பிரச்சினை விடயம் தொடர்பாக ஆராயப்பட்ட போதும், முதலமைச்சர் தங்களது பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த சொற்பதங்களையோ, வசனங்களையோ பயன்படுத்தவில்லை மாறாக இது இரு கிராமங்களைத்தாண்டி இரு சமூகம் சார்ந்த பிரச்சினை என்பதனால் ஒரு பொறுப்பு மிக்க முதலமைச்சர் என்ற வகையில் நிதானமாகவும் பக்கச்சார்பில்லாமலும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். இவ்வாறான உயர் நோக்கங்களோடு நடைபெற்ற கலந்துரையாடலில் முதலமைச்சர் அவர்களின் தனிப்பட்ட கௌரவத்திற்கும் பதவிக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தாங்கள் செய்தி பிரசுரித்திருந்தானது வேதனைக்குரிய விடயம் ஆகும்.  அத்தோடு ஊடக சுதந்திரத்தை மீறும் செயலாகும் என்பதனையும் தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
அடையாளம் தெரியாத ஓரிரு நபர்கள் ஒன்றுசேர்ந்து ஓர் காகித தலைப்பில் அவதூறுசெய்தி ஒன்றை அனுப்புமிடத்து அதன் நியாயங்களையும் உண்மைத்தன்மையையும் ஆராயாமல் ஒரு பொறுப்பு மிக்க ஊடகமான தாங்கள் எவ்வாறு பிரசுரிக்க முடியும். முதலமைச்சர் தொடர்பான இவ்வாறான செய்திகள்

இடம்பெறுமிடத்து, முதலமைச்சரின் ஊடகச் செயலாளரையோ அல்லது முதலமைச்சர் சார்ந்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்

பேச்சாளரையோ தொடர்பு கொண்டு இதன் உறுதிப்பாடு குறித்தும் உண்மைத் தன்மை குறித்தும் உறுதிப்படுத்தியிருத்தல் வேண்டும். அது மட்டும் அல்லாமல் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்ற சமயம் தங்களது பத்திரிகை சார்பாக எந்தவொரு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருக்கவில்லை. முதலமைச்சருக்கு அவகீர்த்தி ஏற்படுத்த வேண்டும் என்ற தோரணையில் கூலிக்கு செயற்படுகின்ற சில இணையத்தளங்களில் வெளி வந்த செய்தியினை முற்றிலும் ஒத்ததாகவே தங்களின் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியும் அமைந்திருந்ததை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே மேற்குறித்த செய்தி தொடர்பில் தங்கள் பத்திரிகை உத்தியோக பூர்வமாக மன்னிப்புக் கோருவதுடன், குறித்த செய்தியினை வாபஸ்பெற வேண்டும் அதுவே ஊடகதர்மமாகும். இவ்வாறு மேற்கொள்ளாதவிடத்து தமது ஊடகத்திற்கெதிராக சட்டநடவடிக்கை குறித்து ஆராயப்படும் என்பதையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகின்றேன்.   



ஆ. தேவராஜ்
கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சரின்
ஊடகச் செயலாளர்.
»»  (மேலும்)

ஆரையம்பதி பொதுமக்களால் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு மகஜர்.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொது மக்கள் அங்கு இயங்கி வருகின்ற சமூக முரண்பாட்டைத் தூண்டுகின்ற சமூக அபிவிருத்தி அமைப்புக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஆரையம்பதி பிரதேச மக்கள், பொது அமைப்புக்கள் எல்லாம் ஒன்றிணைந்து கையெழுத்திட்டு மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்கள். அவ் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி பின்வருமாறு.

கௌரவ பசில் ராஜபக்ஸ,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு -01.
ஐயா,
சமூச முரண்பாட்டைத் தூண்டும் அமைப்பிற்கு நடவடிக்கை எடுத்தல்.
மண்முனைப்பற்று பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு தாங்கள் ஆற்றிவரும் சேவை மிகவும் மெச்சத்தக்கது. இதற்கு மண்முனைப்பற்று மக்கள் என்றும் கடமைப்பட்டவர்கள். ஆனால் ஆரையம்பதியில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகளுக்கு மாத்திரம் நீங்கள் பொறுப்புக் கூறுவதுடன், இங்கு நடைபெறும் அநியாயங்களையும் தீர்து;துத் தரவேண்டியது தங்களது பொறுப்பாகும்.
யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட எம் மக்கள் மீது மீண்டும் மீண்டும் இனமுறுகலை ஏற்படுத்த முற்படுவதுடன் வலுக்கட்டாயமாக எமது பிரதேச மக்கள்; மீது அடாவடித் தனங்களைப் பிரயோகிக்கும் ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்பு என்ற போர்வையில் சில அதிகாரிகள் ஆடும் ஆட்டத்தினை சீர்படுத்தித் தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இலலையேல் மீண்டும் ஒரு பயங்கரவாத செயற்பாட்டிற்கு இவர்களது நடவடிக்கை வலுசசேர்க்கும் என நாங்கள் அஞ்சுகின்றோம்.
இவர்கள் மக்களின் பணத்தில் இலஞ்சம் வாங்கும் பணக்காரர்கள். பண பலத்தின் காரணமாக சில பாதுகாப்பு அதிகாரிகளையும் சில அமைச்சர்களையும் விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு எதிராக கதைப்பவர்களை அச்சுறுத்துகின்றார்கள்.
சும்பந்தப்பட்டவர்கள் விபரம்:
1.ரி. துஸாகரன்;   -மதுவரித் திணைக்கள அதிகாரி.
2.பத்மநாதன்     -ஆசிரியர் -மட் கொத்தியாவல பாடசாலை.
3.எஸ்.ஏ. சுரேஸ்  - கிராம சேவையாளர்- ஆரையம்பதி-01.
4.மகேந்திரலிங்கம் - முன்னாள் ஆசிரியர்- ஆரையம்பதி.
5.டாக்டர்.சுரேஸ்   - வைத்தியர்- ஆரையம்பதி வைத்தியசாலை.
6.மாணிக்கராஜா   - உரிமையாளர்-எரிபொருள் நிரப்பு நிலையம்- ஆரையம்பதி.
                          -நன்றி-
நடவடிக்கைக்காக:
1.கௌரவ கோத்தாபய ராஜபக்ஸ- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.
2.கௌரவ ஜோன் செனவரெட்ண – பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்.
3.கௌரவ சி. சந்திரகாந்தன் - கிழக்கு மாகாண முதலமைச்சர்.
4.இலங்கை பொலிஸ்மா அதிபர்.
இவ்வண்ணம் தங்களின் நியாயமான தீர்வினை எதிர்பார்க்கும் மக்கள்( கையொப்ப பிரதிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.)
»»  (மேலும்)

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பலனாக மன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரம் ஏக்கரில் இம்முறை நெற் செய்கை வவுனியாவில் 900 ஏக்கர் தயார் நிலையில்


       வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அதிக நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படுவது எதிர்வரும் பெரும் போகத்தின் போதேயாகும், என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மக்களின் பொருளாதார, வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடம் இருந்து கிடைத்த 6500 மில்லியன் ரூபா நிதி விவசாயத்தை ஊக்குவிக்கவே பயன்படுத்தப்பட்டது. இதன்படி இப்போது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நெற் செய்கைக்கான காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மேற்படி 5 மாவட்டங்களிலும் சிறிய நீர்ப்பாசன வசதிகள் திருத்தப்பட் டுள்ளன.
மன்னார் மாவட்டத்தின் 13 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இம்முறை நெற் செய்கைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் 900 ஏக்கர் நெற் செய்கைக்கு தயார் நிலையில் உள்ளது.
 
»»  (மேலும்)

சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையரை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை

ஓகஸ்ட் மாத முற்பகுதியில் சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பனாமா நாட்டுக்கொடி யுடனான கப்பலிலுள்ள இலங்கை கப்பல் பணியாளர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கென்யாவிலுள்ள இலங்கைத் தூதுக் குழுவினரே இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
இலங்கை கப்பல் பணியாளர்களுடன் கடத்தப்பட்ட மேற்படி கப்பல் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் கென்யா மற்றும் வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதுரகங்களிடம் கோரப்பட்டுள்ளன.
சோமாலியாவில் இலங்கைத் தூதரகம் இல்லையென்பதால் மேற்படி கப்பலிலுள்ள இலங்கை கப்பல் பணியாளர்களை விடுவிப்பதற்காக சோமாலிய கடற்கொள்ளையர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்துமாறு கென்னியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் கோரப்ப ட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
 

»»  (மேலும்)

8/24/2010

மட்டக்களப்பு இந்து மாமன்றக் கட்டடம் முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் புனர்நிர்மானம்.

img_4511
மட்டக்களப்பில் அமைந்திருக்கின்ற மிகப்பழமை வாய்ந்து தூர்ந்து போன நிலையில் காணப்பட்ட இந்து மாமன்ற கட்டடத்தொகுதியினை புணர்நிர்மானம் செய்வதற்காக முதற்க்கட்டமாக 40 இலட்சம் ருபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் புனர்நிர்மானப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பார்வையிடும் காட்சி இது-
img_4514

»»  (மேலும்)

கறுப்புப் பணம் தொடர்பான விபரங்களை வழங்க சுவிஸ் வங்கி நிபந்தனையுடன் இணக்கம்


இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடு களைச் சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக தங்களிடம் சேர்த்து வைத்துள்ள கறுப்புப் பணம் பற்றிய விவரங்களை, சில நிபந்த னைகளுக்கு உட்பட்டு அளிக்க சுவிட்சர் லாந்து வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளன.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடு களைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக தங்கள் பணத்தை, சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில் கறுப்புப் பணமாக போட்டு வைத்துள்ளனர்.
யார் யார் எவ்வளவு பணம் போட்டுள் ளனர் என்று தெரிந்துகொள் வதற்காக பல நாடுகளும் சுவிஸ் வங்கி களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. அமெரிக்காவினர் வைத்திருக்கும் பணம் பற்றிய விவரங்களைத் தர சுவிஸ் வங்கி கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளன. ஜெர்மனி உள்ளிட்ட முன்னணி நாடுகள் இதில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவும் அந்த விவரங்களைப் பெறும் ஆரம்பகட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சுவிஸ் வங்கிகள், தெள்ளத் தெளிவாக கேட்டதும் பட்டியலைத் தர முடியாது என்று கூறி சில சட்ட நுணுக்கங்களுடன் கூடிய தகவல்களைக் கேட்டன.
இந்நிலையில், சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பான, “சுவிஸ் வங்கிகள் அசோசியேஷன்” (எஸ். பி.ஏ), வெளியிட் டுள்ள இந்த ஆண்டுக்கான அறிக்கையில், தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள, நான்கு நிபந்தனைகளை விதித்துள்ளது. நாடுகள் சந்தேகப்படும் நபர்களைப் பற்றிய விவரங்கள், அவர்கள் செய்த முறைகேடுகள் பற்றிய விவரங்கள், ஏன் அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்பது பற்றிய ஆதார விவரங்கள், எந்தெந்த வங்கிகளில் அவர்கள் பணம் போட்டிருக்கின்றனர் என்ற தகவல்களைத் தரும்படி கேட்டிருக்கிறது.
இது குறித்து அந்தந்த நாட்டு வருமான வரித்துறையினர் சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்புக்கு விண்ணப்பம் அளிக்கவேண்டும். இதுவரை தங்கள் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களைத் தரமாட்டோம் என்று ஒரே குரலில் கூறிய நிலையில் இருந்து, சுவிஸ் வங்கிகள் சற்று கீழிறங்கியுள்ளன.
»»  (மேலும்)

உயர்மட்டக் குழு இந்தியா பயணம் இராஜதந்திர உறவை வலுப்படுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் இந்தியாவுக்குமி டையிலான ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அரசாங்க உயர் மட்டத்தூதுக்குழுவொன்று இன்று (24 ஆம் திகதி) இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
இத் தூதுக்குழுவானது இரு நாடுகளினதும் பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது பற்றி குறிப்பிட்ட அமைச்சர்; மேற்படி தூதுக்குழு இன்று காலை இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளுமெனவும் இத் தூதுக்குழுவில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகி யோர் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் தூதுக்குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், அவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அத் தூதுக்குழு தொடர்பான விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாகக் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 வது வருடாந்த மாநாடு தொடர்பில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடொன்று நேற்று கட்சியின் தலை மைப் பணியகத்தில் நடைபெற்றது. அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் கலந்து கொண்ட இம் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவிக்கையில்:-
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நெருக்கமான ராஜதந்திர உறவுகள் நிலவுகின்றன. இரு நாடுகளின் தூதுக் குழுக்களும் இதனை மென் மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே நாடுகளுக்கிடையிலான விஜயங்களை மேற்கொள்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அண்மைய இந்திய விஜயமானது இலங்கைக்குப் பெரும் பிரதி பலனைப் பெற்றுத் தந்துள்ளது.
125 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
வடக்கில் 5,000 மில்லியன் செலவில் ரயில் பாதைகளைப் புனரமைக்கும் திட்டம் மற்றும் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கான நிதியினையும் வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்திருந்தது.
இந்த வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான ராஜதந்திர உறவுகள் வலுப்பெற்றுள்ளன. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒருவர் அங்கு உள்ளார். அவரது செயற்பாடுகளும் இதற்கு உறுதுணையாகின்றன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் ; அரசின் நடவடிக்கைக்கு பேராயர் பாராட்டு

அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் சிறப்பானவை. வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் மக்களை மீளக்குடியமர்த்த எடுத்த துரித நடவடிக்கையானது பாராட்டுக்குரியது என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளார். பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட மத குருமார் நேற்று முன்தினம் (22) அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோதே பேராயர் மேற்கண்டவாறு கூறினார். யாழ். ஆயர் தோமஸ் செளந்தர நாயகம் மேற்படி செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கும் அனைத்து அமைச்சுக்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். நிலக்கண்ணிவெடி அகற்றல் மிகவும் கவனமாக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கை என்பதால் மீள் குடியேற்றம் எளிதான செயற்பாடு அல்ல என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் கலந்துகொள்ள திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை இதே கருத்தை கூறினார். ஜீவனோபாய மார்க்கங்களுக்கு உதவுவது பற்றியும் அவர் கூறினார்.
மீன்பிடி கைத்தொழிலுக்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள், குடிநீர் ஆகியவற்றை விநியோகிக்க உலக உணவு அமைப்பின் கீழ் நிதி உதவி அவசியப்படுவதாகவும் கத்தோலிக்க குருமார் இங்கு சுட்டிக்காட்டினர்.
பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டிருந்த பெரும்பாலான இடங்கள் இப்போது அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் இடங்களுக்கு மாற்aடாக வேறு இடங்களை பெற்றுக்கொடுக்க அல்லது நஷ்டஈடு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படு வதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின்போது பிரதமர் தி.மு. ஜயரட்ன, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, மீன்பிடி கைத்தொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோர் உடனிருந்தனர்.
»»  (மேலும்)

8/23/2010

புலிகளுக்கு சப்பைக்கட்டு கட்டிய சம்பந்த(னுக்கு)ம் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்? —-எஸ்.எம்.எம்.பஷீர்

முடிவில் நாங்கள் எங்களின் எதிரிகளின் வார்த்தைகளை அல்லாது எங்களின் நண்பர்களின் மெளனத்தை ஞாபகத்தில் கொள்வோம்” -மார்டின் லூதர் கிங்
(“In the end, we will remember not the words of our enemies, but the silence of our friends.”Martin Luther King Jr.)  
இருபது வருடங்களுக்கு முன்பு காத்தான்குடி பள்ளிவாசல்களில் வணக்கதில் ஈடுபட்டுக் கொன்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் பொது மக்களை ( சிறுவர்கள் உட்பட ) புலிகள் கொன்றனர் என்பதை ஐயத்திற்கிடமின்றி தமக்கும் தெரிந்தும், இருபது வருடத்திற்கு பின்னர் “இன்று புதிதாய் பிறந்து ” அறிந்தோம் என்பதுபோல் ஒரு வேடிக்கையான செய்தியினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸால் ” தமிழ் பேசும் மக்களின் தலைமகன் ” என விருது வழங்கப்பட்ட தமிழரசுக் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன “திருவாய்” மல(ர்)ந்திருக்கிறார்.
புலிகள் இருபது வருடத்திற்கு முன்பிருந்தே தமது மதவிரோத செயற்பாட்டின் தொடராக முஸ்லிம்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் வட கிழக்கில் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் மே 14 ம் திகதி 1985ல் அனுராதபுர ஸ்ரீ மஹாபோதி விகாரை அனுராதாபுர பேரூந்து தரிப்பு நிலையம் ஆகியவற்றில் சிங்கள அப்பாவி மக்கள் வழிபாட்டில் ஈடுபடிருந்த புத்த பிக்குகள் பிக்குனிகள் உட்பட 146 பேரை கொன்றது தொடக்கம் தமது அந்திம காலத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் வரை மாத்தறை அகுரஸ்ஸை கொடபிட்டிய எனுமிடத்தில் போர்வை முஸ்லிம் ஜூம்ஆப் பள்ளிவாசல் தாக்குதல் வரை (10.03.2009) ஏன் அதற்கு சற்று முன்னரான, வாகரை கோவில் பூசாரி வரை எண்ணற்ற கொலைகளை மிலேச்சத்தனமாக செய்துள்ளனர். அது தவிர ஆயிரக்கனக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் பொது மக்களை, அரசியல் வாதிகளை, கல்விமான்களை அரச அலுவலகர்களை என்று ஆயிரக்கணக்கனோரை ஈவிரக்கமின்றி கொன்று குவித்துள்ளனர். அப்போதெல்லாம் புலிகளின் கொடூரங்களை தமிழர் தலைமகன் கன்டு கொள்ளவேயில்லை.
புலிகளின் மறைவுக்கு பின்னர் இப்போதுதான் முதன்முதலில் சுதந்திரமாக புலிகள் தன்னை கொல்ல முடியாது என்ற நிலை உருவான பின்னர் தான் இந்த தமிழ் மக்களின் கோழைத் தலைவன் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் பற்றி தனது புலியுடனான விசுவாசத்தினை மீன்டும் உறுதி செய்து புலிகள் ” பள்ளிவாசல் படுகொலைகளுக்காக மன்னிப்பு கோரவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன்” (I have to regret that the Tamil Tigers did not apologise for the mosque massacre. That was a mistake, but we have no hesitation whatsoever in apologizing to our Muslim brethren for what happened 20 years ago ) என்று கூறுவது மட்டுமல்ல ஒரு படி மேலே சென்று இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் நித்தியமாக நினைவுகூரப்படும் ஒரு மிலேச்சத்தனமான செயலை தமிழர் தலைமகன் ‘தவறு’ என்று மிக சாதாரனமாக குறிப்பிட்டமையுடன் வட மாகான முஸ்லிம்களினை புலிகள் வெளியேற்றியது பற்றி அன்டன் பாலசிங்கம் ஒரு “துன்பியல் சம்பவம் ” என்று குறிப்பிட்டதை பதப் பிரயோகம் அதன் தாற்பரியம் பற்றி நோக்கினால் அன்டன் சம்பந்தனைவிட ஒரு படி மேலே சென்று சம்பவத்தின் விளைவுகளை தகுதிப்படுத்துகின்ற ஒரு சொல்லை (துன்பத்தை ) பயன்படுத்தியுள்ளார் என்றே எனக்கு தோன்றுகிறது.
ஆனால் சம்பந்தன தவறு என்று குறிப்பிட்டது மட்டுமல்ல “ஆனால் நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு நடந்ததற்காக எந்தவிதத்திலும் மன்னிப்பு கோர தயங்க மாட்டோம் .” என்று 20 வருடங்கள் தயங்கிய சம்பந்தன் கூறுவதை இது நாள் வரை ஏன் தயங்கினார் என்று யாரும் அவரை கேட்கவில்லை. கேட்டாலும் அவருக்கு அவர் அது குறித்து நிதானமாக பதில் சொல்லுவதை விடுத்து வழ்க்கம்போல் கர்சித்திருப்பார். ஒரு வேலை வயசுக் கோளாறாலும் ஒரு சமூகத்தின் தலைவர் தானே என்ற அதிகார மமதையாலும் கர்சிப்பதை வழ்க்கமாக கொன்டிருக்கலாம்..
தான் ஒரு பழுத்த சட்டத்தரணி (உண்மைகளை பொய்யாக்கி, பொய்களை உண்மையாக்கும்) என்பதையும் நிரூபணம் செய்யும் விதத்தில் அக்கொலைகள் ஏன் நடைபெற்றன என்று வேறு நாசூக்காக வழக்கம்போல் தமிழ் தேசியவாத புலி சட்டத்தரணிகளின் பாசையில் (மொழியில்) “அக்கொலைகளுக்கு சாக்கு கூறமுடியாவிடினும் அப்போது நிலவிய பதற்ற சூழ் நிலையின் பிண்ணனியிலேயே அவை பார்க்கப்பட வேண்டும். ((Mr. Sambanthan points out that while there is no excuse for the killings, they have to be seen in the context of the tense situation at that time.) என்றும் கூறியுள்ளார்.புலிகள் செய்தது பிழைதான் என்றாலும் அதற்கான சூழலையும் பார்க்க வேன்டும் என்று குறிப்பிட்டு புலிகளின் ஈனச்செயலை தனது தொழில் தேர்ச்சி திறைமையை காட்டி நியாயப்படுத்தி உள்ளார். புலிகள் மீது புலிகளை விடவும் சம்பந்தனுக்கு அக்கறை அதிகம். எனது முன்னைய கட்டுரையில் தமிழ் செல்வனே இது குறித்து தனிப்பட்ட முறையிலேனும் தம்மை சந்தித்த சிரான் (SIHRN) குழு முஸ்லிம் உறுப்பினர்களிடம் எதோ ஒரு சாக்கை சொல்லி (தமது கிழக்கு தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாக) அக்கொலைகளுக்கு வருத்தம் தெரிவித்திருந்தாலும் புலிகளுக்கு சாமரம் வீசிய தமிழ் தீவிர இனவாதியான சம்பந்தனுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இல்லை என்பதையே இது கோடிட்டு காட்டுகிறது.
மிக ஆழமாக நோக்கினால் இந்தக் கொலைகளினை மட்டும் ஒப்புக்கொன்டு புலிகளுக்காக சம்பந்தன் மன்னிப்பு கேட்டாலும் இக்கொலை நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் ஏராவூரில் கர்ப்பிணிப் பெண்னின் வயிற்றை கிழித்து சிசுவை கூட கொன்று நூற்றுக்கனக்கான முஸ்லிம்களை புலிகள் கொன்றது பற்றி பலர் பேசாதிருக்கிறார்கள். பீ.பீ சீ உட்பட அனைத்து ஊடகங்களும் அது பற்றி புலிகளை சந்தேகத்துக்குரியவர்கள் என்று கூட குறிப்பிட்டதில்லை.
ஏறாவூர் மக்கள் மீதான புலிகளின் 1990 ஆகஸ்து படுகொலைகள் நடந்தபோது முன்னாள் ஒரு தமிழ் இயக்கத்தின் உறுப்பினராகவும் பின்னர் தமது தவறை உணர்ந்து அதிலிருந்து விலகி ஏறாவூர் கிராமத்தின் பாதுகாப்பு குறித்து அதீத அக்கறையுயுடன் செயற்பட்ட வாலிபனான ஜலால்தீன் 12 ம் திகதி அதிகாலையில் தனது இயக்க அனுபவத்தினால் நடப்பதை உணர்ந்துகொன்டு கால்நடையாக காட்டுவழியாக ஓடி களுவங்கேணி இரானுவ முகாமுக்கு சென்று அங்கிருந்து இராணுவத்தை அழைத்து வந்தவர். இவர் சில வருடங்களின் பின்னர் அரவம் தீண்டி அகால மரனமடைந்தார். எனக்கு நேரில் அறிமுகமான அந்த துடிப்பும் துனிவும் கொன்ட வாலிபன் மறைந்த (ஜலால்தீனுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணமாகும்)
ஏறாவூர் சம்பவத்தில் கொல்லப்பட்ட பலரில் பேராதனை பல்கலைக்கழ்க சிரேஷ்ட விரிவுரையாளரான ஜனப் அமீர்தீன் என்பவரின் குடும்பத்தினரும் அடங்குவர். இதில் முரன் நகை என்னவென்றால் இவரது சகோதரரும் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் ஆனால் இவரது சொந்த குடும்பமும் புலிகளால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இவ்வாறான பின்னணியில் சம்பந்தன் வகையறாக்களின் வாய் சவடால்கள் கபடத்தனங்கள் குறித்து முஸ்லிம்கள் மிகவும் அவதானமாகவும் இருக்கவேன்டும். இவர் தற்புகழ்சியாக கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமகன் விருது வழங்கியபோது சம்பந்தன் கூறியவற்றுக்கு எதிரிடையான அர்த்தமே பொருத்தமானதாகவிருக்கும். “கல்முனை மண்ணில் இன்று எனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம் எனக்குரியதல்ல. தமிழ் முஸ்லிம் உறவை எதிர்பார்த்து நிற்கும் அனைவருக்கும் உரியதாகும். அரசியலில் நேர்மை. உண்மை என்பவற்றைக் கொண்ட பாரம்பரியத்துடன் நான் கடந்து வந்த பாதைக்குக் கிடைத்த கௌரவம் என்றே இதனைக் கருதுகின்றேன்.”
இன்று புலிகள் போனபின் தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்கள் மீது அன்பு காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்று புலிகளின் எழுச்சிகளுக்கு முன்னர் முழங்கியவர்கள் தேவையானால் முஸ்லிம்கள் பிரிந்தும் போகலாம் என்று அரசியல் மேடைகளை அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அலங்கரித்த தமிழ் தலைமைகள் மெதுவாக முஸ்லிம்களும் தமிழர்கள் என்றபோதும், இஸ்லாமிய தமிழர்கள் என்றபோதும், மௌனம காத்த சந்தர்பங்கள் அநேகம். சரி போகட்டும் என்றால் கடந்த அரசு சமாதான யுத்த நிறுத்த காலத்தில் மூதூர் பகுதியில் காணப்பட்ட தமிழ் முஸ்லிம் முறுகல் நிலைக்கு காரணமாக ஒரு புறம் ஹக்கீம் சமாதானத்துக்கு எதிரான முஸ்லீம்கள் சிலர் தான் காரணம் என்று கண்டுபிடித்துக் கூற அதனை தமிழ் நெட் (Tamilnet)எனும் புலி ஊடகம் கனதியுடன் காவ, சமாதான ஒப்பந்தத்தின் நடுபகுதியில் மூதூர் இன முறுகலுக்கு என்றுமே காரணமான புலிகளை பாதுகாத்து அரசியல் நாணயமற்ற சம்பந்தன் ஒசாமா குரூப் தான் காரணம் என்று புலிகளின் நிதர்சன இணயத்தின் பரப்புரைக்கு மெருகூட்டியவர். இவருக்கு முன்னர் ஜோசப் பரராஜசிங்கம் கணிசமான அளவு முஸ்லிகள் குறித்து தனது புலி அரசியல் சார்ந்த முஸ்லிம் எதிர்ப்பு வாதத்தை மனித உரிமை சாயத்துடன் உலக பரப்புரை செய்தவர்.
எப்போதோ முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் மருதூர் கனி கூட்டணியினரை ” வெற்றிலை பாக்கு வைத்து” அழைத்த போது அலட்சியப்படுத்திய கூட்டணியினர்தான் இன்று தம்பி தவறிப்போனபின் “சம்பந்தம் கலக்க” முனைப்புடன் செயற்படுகிறார்கள். (”தமிழ் முஸ்லிம் கட்சிகள் தங்களது தனித்துவத்தை பாதுகாப்பினை பிரதேச உரிமைகளை பரஸ்பரம் அங்கீகரித்து ஒன்று சேர்ந்து ஒரே குரலில் குரல் கொடுக்காத வரைக்கும் வட கிழ்க்கு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. தமிழ் கட்சிகள் முஸ்லிம்களின் உரிமைகளை அங்கீகரிக்க விரும்பவில்லை.”
( ஆதாரம்: தமிழ் டைம்ஸ் ((Tamil Times )- மருதூர் கனி -மார்ச் 1993)
2004 ம் ஆண்டு தமிழ் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபணத்தை வெளியிடுவதற்கு சம்பந்தன் தலைமையில் சு.ப தமிழ் செல்வனை கிளிநொச்சியிலுள்ள புலிகளின் நடுவப்பணியகத்தில் சந்தித்து அவர்களின் அறிவுறுத்தலின் அங்கீகாரத்தின் பின்னரே உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது. சம்பந்தன் புலிகளின் நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளாக எவ்வித மறுப்புமின்றி தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டவர்கள் எப்படி தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தியிருக்கமுடியும். எப்படி அப்பாவி மக்களின் உயிர்க்களை காவு கொண்ட புலிக்கொடூரங்களை கண்டித்திருக்க முடியும். அதே காலகட்டத்தில்தான் புலிகளின் மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளர் கெளவ்சல்யனை கொக்கட்டிச்சோலையில் சந்தித்து பேசிய மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி வேட்பாளர் ஜோசெப் பரராஜசிங்கம் புலிகளை ” 1977 ஆம் ஆண்டில் பெற்ற பொதுத் தேர்தல் எவ்வாறு தமிழ் ஈழம் என்ற ஆணைக்கு சர்வஜன வாக்கெடுப்பு போன்று அமைந்ததோ அதே போன்று விடுதலை புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற கூற்றுக்கு ஆணைஏறும் ஓர் சர்வஜன வாக்கெடுப்புப் போன்று இத்தேர்தல் அமைய வேண்டும்” என்று போற்றிப் புகழ்ந்தார் என்பதனை மீட்டுப்பார்த்தால் கூட்டணியே புலிகளின் குரலாக இருந்து பொது நியாயங்களை, பிற சமூக மனித உரிமைகளை, தமது சொந்த சமூக மாற்றுக் கருத்தாளர்களை மறுதலித்துள்ளனர். “ அவரை (பரராஜசிங்கத்தை ) வெட்டி விலத்தியதன் மூலம் தமிழ் மக்களை வெட்டி விலத்தியதாக அவர்கள் நினைத்தார்கள்; என்னுடைய தந்தை எப்பொதுமே புலிகளின் குரலாகவும் தமிழ் மக்களின் குரலாகவும் இருந்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கத்தின் மகன் டேவிட் பரராஜசிங்கம் இலண்டனிலே தனது தந்தையின் இரங்கலுரையில் குறிப்பிட்டது புலிகள் குரலாக பராரஜசிங்கம் செயற்பட்டதற்கு பகிரங்க ஒப்புதலாகும்
1995 மேயில் நடந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொன்ட அன்றய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம் “இன்றைய அரசியல் சூழ்னிலையில் நான் யாழ் போவது முடியாதுதான் ஆனால் அப்படி செல்வதென்றால் முதலில் அங்கிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் அங்கு சென்று குடியமரவேன்டும்” என்று குறிப்பிட்டு முஸ்லிம் காங்கிரஸ் பேராளர்களை வானதிர கரகோசமிட செய்து மகிழ்வித்தவர். ஆனாலும் பளுத்த தனது அரசியல் சட்டத்துறை அனுபவ அஸ்திரத்தை கொன்டு நாசூக்காக முஸ்லிகள் பலவந்தமாக பிடுங்கி எறியப்பட்டதை சொல்லால் மறைத்து எதோ முஸ்லிம்கள் தாங்களாக வெளியேறியது போல் ” வெளியேறிய” என்று குறிப்பிட்டதை அங்கிருந்த இன உணர்வலையில் திழைத்திருந்த முஸ்லிம் பெருமக்களும் தலைவர்களும் கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறான சொல்லாடல்களையும் சொற்சிலம்பங்களையும் செய்துதானே சிறுபான்மை இனவாத கட்சிகளும் தமது தொண்டர்களை துவண்டு விடாமல் தூக்கி பிடித்துக் கொன்டிருக்கிறார்கள். ஆனால் அவர் கூட வட மாகாண முஸ்லிகளை வெளியெற்றிய புலிகளை நோகவில்லை. மாறாக பிரபாகரனை புகழ்ந்தவராகவே அவரும் யாழ்ப்பாணம் போகாமலே இந்த மண்ணை விட்டும் போய்விட்டார்.
சென்ற ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தனும் அவரது பரிவாரங்களும் பொன்சேகாவை ஆதரிக்கவேன்டும் என்று தீவிர முயற்சி செய்தவர் ரவுப் ஹக்கீம் என்பதுடன் பொன்சேகா சிறுபான்மையினருக்கு ஒரு புடவையை போலவென்றும் அவரை(பொன்சேகாவை) தலைப்பாகையாக அணியாமல் (மானத்தை-மர்மஸ்தானத்தை- மறைக்கும்) கோவணமாக அனிந்துகொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக வேன்டுகோளும் விடுத்தவர். பொன்சேகாவை போர்த்தி தமிழரின் மானத்தை காத்த மாவீரர் சம்பந்தன் தனியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைக் “கழட்டிவிட்டு” ஜனாதிபதியை சந்தித்தது; இந்தியா சென்றது, வட கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு என்று பிரச்சாரம் பண்ணியது என்று இபபோது இரு தரப்பினரும் குடும்பிச்சண்டை பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழர் தலைமகன் என்று பட்டம் சூட்டியதை பறித்துவிடலாமோ என்று வேறு வெம்புகிறார்கள்.
நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனுமற்ற இந்த கூட்டணி பிருகிருதிகள் பற்றி நூற்றுக்கனக்கான சம்பவங்களில் சாம்பிலுக்கு தனிப்பட்ட அனுபவத்தினூடான சம்பவமொன்றையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகவிருக்கும். சில வருடங்களுக்கு முன்பு இலண்டனிலே ஒரு சந்திப்பொன்றில் கலந்துகொன்ட தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதியான சுரேஷ் பிரேமசந்திரனுடனான கலந்துரையாடலின் போது அக்கால கட்டத்தில் கொழும்பில் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை தாக்குதல் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது சம்பந்தமாக கூட்டமைப்பு சக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேனும் ஏன் ஒரு அனுதாபமோ கண்டனமோ தெரிவிக்கவில்லை என்று நான் கேட்டபோது சுரேஸ் பிரேமசந்திரன் தமது கட்சித்த்லைவர் (சம்பந்தன்) வெளிநாடொன்றில் இருப்பதாகவும் அவர் திரும்பியதும் அது பற்றி தீர்மானிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அவ்வளவுதான் “நேர்மையும் உண்மையும்” கொண்ட சம்பந்தனோ அவரின் சகபாடிகளோ இன்று வரை அதுபற்றி வாயே திறக்கவில்லை. ஏனெனில் எபபோதுமே புலிகள் செய்தால் அதற்கு காரணம் காண்பதில் சமர்த்தர்கள் இவர்கள். இப்போதான் சற்று மெதுவாக வாயை திறந்து பிளையை நொந்து கொள்வதுபோல் புலிகளை அன்புடன் கண்டிக்கிறார்கள். ஆனால் எங்கள் முதுகு மீது இனிச் சவாரி செய்யமுடியாது ஆனால் ஹக்கீம் வகையறாக்கள் உங்களுக்கு அந்த வாய்ப்பை தரலாம். இபபோதெல்லாம் எதிர் கூட்டணிக்கு எதிர்ப்பதை தவிர வேறு சமாச்சாரமே இல்லை
இந்த சந்தர்ப்பத்தில் சம்பந்தன் பற்றி நாடாளுமன்ற பதிவேட்டில் சாட்சியாக பதிவாகியுள்ள சான்றுகளும் எமது கவனத்துக்கு உரியது. முன்னாள் எம்.பீ யும் அமைச்சருமான அன்வர் இஸ்மாயில் தான் மரணிக்கமுன்னர் நாடாளுமன்றத்தில் சம்பந்தனை விழித்து ஆற்றிய உரையையும் இங்கு ஒரு பகுதியையும் இங்கு பதிவிலிடவேன்டியுள்ளது.
“சம்பந்தன் அவர்களே.!
இவ்வாறு தமிழீழத்தின் கோஷத்தை முன்னெடுத்துச் சென்ற தலைவருக்கு (அஷ்ரபுக்கு) தங்களால் உருவாக்கப்பட்ட ஆயுதக்குழுக்கள் வழங்கிய பரிசு என்ன தெரியுமா? கல்முனையில் அம்மன் கோயில் வீதியில் இருந்த அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டு கிழக்கின் முதலாவது முஸ்லிம் அகதி எனும் பட்டத்தை சூட்டி தலைவருக்கு அனுப்பி வைத்தவர்கள் அல்லவா நீங்கள்.
தமிழீழத்துக்காக பேசிய மர்ஹம் அஷ்ரபுக்கு வழங்கிய தண்டனை அல்ல. அந்த தண்டனை ஒட்டுமொத்தமாக வடக்கு – கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகும். அப்போது உங்களால் உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுக்களின் அதிகார மேலீட்டால் நீங்கள் சூழ்நிலைக் கைதியாக மாறிய வரலாற்றினை நாங்கள் மறக்கவில்லை. இந்த பாராளுமன்றத்தில் கடந்த 05 ஆண்டுகளாக முஸ்லிம்கள் தொடர்பில் பேசி வருகின்றேன். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் பேசும் மக்கள் என்ற வார்த்தை ஜாலத்துக்குள் முஸ்லிம்களை உள்ளடக்கி அலங்காரமாக பேசுவதையிட்டு நான் வெட்கப்படுகின்றேன்.
இன்று இந்த சபையில் வாகரை மக்களுக்காக அல்லல்படும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த 1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் பற்றி பேசத் தயங்குவதன் மர்மம் என்ன?ஏனெனில் இந்த நாட்டின் இனப்பிரச்சினையில் முஸ்லிம்களை கோமாளிகளாக பார்க்கின்ற காலம் மலையேறி விட்டது. இன்று இந்த சபையில் பேசிய சம்பந்தன் ஐயா உட்பட இதர உறுப்பினர்கள் வடக்கு கிழக்கின் இணைவு குறித்து வலியுறுத்தியுள்ளனர். நாங்கள் உத்தரவாதம் அளிக்கின்றோம் உங்களது உரிமைகளுக்காக என்று சபையிலே பேசுகின்றீர்கள். அன்று ஆயுதம் தாங்கிய அமைப்புக்களும் முஸ்லிம்களுக்கு எதிராக இனச்சுத்திகரிப்பிலும், இன வெறியாட்டத்திலும் ஈடுபட்டபோது அவர்களின் நிர்ப்பந்தம் காரணமாக இருந்த உங்களின் மௌனத்தையும் முஸ்லிம்கள் பட்ட அவலத்தினையும் துன்ப துயரங்களையும் அனுபவித்த கொடுமைகளையும் பற்றி பேசுவதற்காக அல்ல. தந்தை செல்வாவும், அண்ணன் அமிர்தலிங்கமும் முஸ்லிம்கள் தொடர்பாக பேசிய கோட்பாட்டுக்காக சமதரப்பு என்ற அந்தஸ்தை முஸ்லிம்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பாராளுமன்றத்தில் மசோதா சமர்ப்பித்து ஈற்றிலே வாக்கெடுப்பு நடந்தபோது இன்று உங்களால் இனத்துவேசிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஜே.வி.பி.யினரும் ஐ.தே.க.வினரும் ஸ்ரீ.ல.சு.க. கட்சியினரும் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் தனித்தரப்புக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழர் விடுதலை கூட்டணியினரான தாங்கள் மாத்திரம் ஆதரவளிக்காமல் இருந்ததை எமது முஸ்லிம் சுயாட்சியில் வாழப்போகின்ற யாரும் மறக்க மாட்டார்கள். ஆனால் தமிழர் கூட்டமைப்பினரான உங்களின் மனசாட்சிகள் முஸ்லிம்களின் சமதரப்பு கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளும் என்பதை நாங்கள் அறியாமல் இல்லை. சம்பந்தன் ஐயா அவர்களே அதேநேரம் இதற்கான அங்கீகாரம் வன்னியிலுள்ள வன்னித்தம்பியிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதையும் தாங்கள் அறியாமல் இல்லை. இன்றிலிருந்து தமிழ் பேசும் மக்கள் என்று பேசுகின்ற வார்த்தை ஜாலத்துக்குள் முஸ்லிம்களை உள்ளடக்கி தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டுகின்ற முக்காளத்துக்கும் அரசியலை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்.”( அன்வர் இஸ்மாயில்)
sbazeer@yahoo.co.uk
»»  (மேலும்)