7/15/2010

சி.ஐ.ஏ யின் பிடியிலிருந்த ஈரான் விஞ்ஞானி வா'pங்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தஞ்சம்

அமெரிக்கர்களை விடுவிக்க வேண்டுமென தெஹ்ரானிடம் ஹிலாரி கிளின்டன் கோரிக்கை

சவூதி அரேபியாவுக்கு புனித ஹஜ்ஜுக் கடமைக்காகச் சென்றவேளை கடத்தப்பட்டதாகக் கருதப்பட்ட ஈரான் அணு விஞ்சானி ஷெஹ்ராம் அமிரி அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதர கத்தில் பாதுகாப்பாகத் தஞ்சமடைந்துள்ளார். முப்பது வயதான ஷெஹ்ராம் அமிரி ஈரானின் காம் என்ற இடத்தில் அமைக்கப்படும் அணு உலையின் முக்கிய நிர்வாகி.
இவர் தெஹீரான் பல்கலைக்கழகத்தில் பெளதீகவியல் துறை வரிவுரையாளராகவும் கடமையாற்றுபவர். சென்ற ஆண்டு புனித ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியா சென்ற போது காணாமல் போனார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு இவரைக் கடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியது.
இதை அமெரிக்கா மறுத்து வந்ததுடன் இது தொடர்பாக எக்கருத்தையும் வெளியிடவில்லை. நேற்று முன்தினம் ஷெஹ்ராம் அமிரி அமெரிக்க உளவுப் பிரிவினரின் பிடியிலிருந்து தப்பி வாஷிங்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சி.ஐ.ஏ. யிடமிருந்து தப்பிய இவர் எவரது கண்ணிலும் படாமல் வேஜினியா மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வந்துள்ளார். இதையடுத்தே அமெரிக்கா முதற்தடரையாக ஈரான் விஞ்ஞானி பற்றி வாய்திறந்தது.
இவரைத் தாம் கடத்தவில்லையென்றும் சுயவிருப்பத்தின்படியே அமெரிக்க உளவுப்படையினருக்கு ஈரான் குறித்த தகவல்களை வழங்கியதாக அமெரிக்கா கூறியது. ஆனால் ஜுன் மாதம் வெளியான இவரது ஒளிநாடாவில் தான் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார்.
இவர் அமெரிக்காவுக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டார் என்ற விபரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை. அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் ஷெஹ்ரான் அமிரி இங்கு (அமெரிக்கா) போகவும் வரவும் சுதந்திரமளிக்கப்பட்டுள்ளார்.
இதை அவரே தீர்மானிக்க வேண்டுமென்றார். ஆனால் ஈரான் தடுத்து வைத்துள்ள மூன்று அமெரிக்கர்களையும் உடன் விடுதலை செய்ய வேண்டும். இதை ஈரான் செய்யும் எனத் தாம் நம்புவதாகவும் கிளிண்டன் குறிப்பிட்டார்.
வாஷிங்டனிலிருந்து ஈரானுக்கு விஞ்ஞானி ஷெஹ்ராம் அமீரியை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் சில வேலைகள் பூர்த்தி யடைமாமையால் விமானத்தைப் பெற முடியவில்லை.
இது தொடர்பாக ஈரான் விஞ்ஞானி கூறியதாவது, தம்மை விரைவாக தாய்நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் இல்லாவிட்டால் மீண்டும் கடத்தப்படக் கூடுமெனத் தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment