_ | |||
இலங்கை தமிழர் நலன் தொடர்பாக கடந்த 17ஆம் திகதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்அமைச்சர் கலைஞர் கருணாநிதி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
இந்தக் கடிதத்தில்உண்மையை நிலையைக் கண்டறிவதற்காக விசேட தூதுவர் ஒருவரை அனுப்புமாறு இந்தியப் பிரதமரை தமிழக முதல்வர் கருணாநிதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான பதில் கடிதத்தில் "இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு காட்டி வரும் ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவும், இதில் இந்தியா காட்டி வரும் ஆர்வத்தின் காரணமாகவும், இலங்கைக்கு இந்திய வெளிவிவகாரத் துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளேன்.
அவர், இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் இலங்கை அதிகாரிகளை சந்தித்து இப்பிரச்சினை பற்றி விவாதிப்பார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்வாழ்வுப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு திரும்புவார்."
என பிரதமர் மன்மோகன்சிங் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. _
0 commentaires :
Post a Comment