கியூபாவின் உல்லாச ஹோட்ட லைத் தாக்கிய குற்றவாளி சென்ற வாரம் வெனிசூலா விமான நிலைய த்தில் கைது செய்யப்பட்டார். அபர்கா என்ற இந்த நபர் சல்வடோர் நாட்டைச் சேர்ந்தவர். 1997ம் ஆண்டு கியூபாவிலுள்ள ஆடம்பர ஹோட்டலைத் தாக்கி யதாக இவர்மீது குற்றம்சாட்டப் பட்டது. அன்று முதல் இவரை கியுபா அரசாங்கம் தேடிவருகின்றது. வெனிசூலாவில் கைதான இந்த நபரை கியூபாவுக்கு அனுப்பிவைக்க வெனிசூலா தயாராக உள்ளதென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்து ள்ளது. இது தொடர்பாக வெனி சூலா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, கைதான அபர்கா கம்யூனிஸ நாடுகளுக்கு எதிரானவர். கியூபா வின் முன்னாள் ஆட்சியாளர் லுயிஸ்பொஸாடாவின் அனு சரணையில் அமெரிக்க சி.ஐ.ஏ. யி னால் பயிற்றுவிக்கப்பட்டவர். இவர் பல்வேறு பயங்கரவாதக் குற்றச் செயல்களுக்காக கியூபா, வெனி சூலா அரசுகளால் தேடப்பட்டு வந்தவர். இவரைக் கைதுசெய்து தடு த்து வைத்துள்ளோம். சர்வதேச பொலிஸான இண்டர்போல் பிடி யாணையின் கீழ் அபர்கா கைதாகியுள்ளார். இவரிடம் போலி குவாதமாலா பாஸ்போட் இருந்தது விசாரணைக்காக இவர் கியூபா விடம் ஒப்படைக்கப்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டது. |
7/08/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment