7/09/2010

இப்படியும் மக்களை ஏமாற்றுகிறார்கள்*முதலமைச்சர் இந்த விடயத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்

மக்களுக்காக சேவை செய்யவேண்டிய சில உயர் அதிகாரிகள் தாம் உழைத்தால் மட்டும் போதும். என்ற நிலையில் இருப்பதுபோன்று தெரிகிறது. சில அதிகாரிகளோ மேல் மட்டங்களில் இருந்து மக்களுக்கு வருகின்ற உதவிகளையும் உரியவர்களை சென்றடைய தாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாது விடுகின்றனர்.

மட்டக்களப்பு களுதாவளை  கிராமத்திலே இருந்த பழைய நூலகம் உடைக்கப்பட்டு புதிய கட்டடம்  அமைக்கப் பட்டது.  பழைய கட்டடத்திலே இருந்த மரங்கள், கூரைத்தகடுகள் என்பவற்றை களுதாவளைக் கிராமத்திலே இருக்கின்ற ஒரு ஆலயத்துக்கு வழங்கும்படி கிழக்கு மாகாண முதலமைச்சர் களுதாவளை பிரதேச சபைக்கு  இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

ஆனால் இதுவரை அந்த பொருட்கள் ஆலயத்துக்கு கொடுக்கப்படவில்லை. ஆலய நிர்வாக சபையினர் பல தடவை பிரதேச சபை அதிகாரிகளை சந்தித்தும் எந்த பதிலும் இல்லை என்று சொல்கின்றனர்.

இந்த பொருட்களை ஆலயத்துக்கு வழங்குவதிலே சிக்கல் இருப்பதாக தெரியவில்லை. முதலமைச்சரே கடிதம் வழங்கியிருக்கின்றார்.  எதற்காக இன்னும் வழங்கப்படவில்லை என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

முன்னர் இந்த பிரதேச சபைக்கு சொந்தமான  பொருட்கள் மாயமாக மறைந்த நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறு இந்த பொருட்களும் மாயமாக மறையுமா?

இன்னும் பொருட்கள் ஆலயத்துக்கு வழங்கப் படாமை தொடர்பாக ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான் முதலமைச்சருக்கு தெரியப் படுத்தியதாக ஆலய நிர்வாகத்தினர் கூறினர் . முதலமைச்சர் இந்த விடயத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆலய நிர்வாகத்தினர் கூறினர்       **santhru.blogspot.com

0 commentaires :

Post a Comment