7/06/2010

மட்டு., திருமலை வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 3500 மில்லியன் ரூபாய் நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கி உள்ளது. இதனைக் கொண்டு பல வீதிகள் விரைவில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் 54 கிலோ மீற்றர் நீளமான 12 வீதிகளை அமைப்பதற்கு உலக வங்கி இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை வழங்கி உள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பு, நிர்மாண அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கடந்த 03ம் திகதி காலை திருகோணமலை ஊடக இல்லத்தில் நடைபெற்றது. அதன்போது மாகாண அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா அலஸ்தோட்டம் வீதி 3.2 கி. மீ., காக்காமுனை முனைச் சேனை வீதி 1.90 கி.மீ., எல்.பி. நான்காம் வாய்க்கால் வீதி 16 கி. மீ., கிவுலகடவெல திரியாய் வீதி 37 கி. மீ., குச்சவெளி கல்லம் பத்தை வீதி 9.7 கி. மீ. என்பன 1190 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ளன

0 commentaires :

Post a Comment