7/20/2010

அ.இ. காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி _

 
 
  அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தியே தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இந்த ஆண்டு இறுதியில் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அச்சமயம், காங்கிரஸ் கட்சி தொடங்கி 125 ஆண்டு நிறைவு கொண்டாட்டமும் இடம்பெறவுள்ளது.

அதன்போது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலும் நடத்தப்பட இருக்கிறது. அதில் சோனியாகாந்தி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட இருக்கிறார்.

இதன் மூலம் சோனியா காங்கிரஸ் கட்சியில் அதிக காலம் தலைவராக இருந்தவர் என்ற சாதனையையும் படைப்பார்.

சோனியா 1998ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவரானார். அதிலிருந்து 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார்.

சோனியா தலைவரான பிறகு காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.

0 commentaires :

Post a Comment