கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உகண கணிஸ்ட்ட வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்தார். பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சரை வரவேற்றதோடு தங்களது பாடசாலையின் நிலவுகின்ற குறைபாடுகளையும் முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டினர். விசேடமாக தங்களது பாடசாலையின் உடனடி தேவைகளாக இருக்கின்ற நூலக கட்டிடம் மற்றும் ஒன்றுகூடல் மண்டபம் ஆகியன தொடர்பாக முதலமைச்சரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தார்கள், திடீரென அப்பாடசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களை அப்பாடசாலையின் சின்னஞ்சிறிய மாணவர்கள் வரவேற்றதோடு, பல கலை நிகழ்வுகளையும் ஏற்படுத்தி முதலமைச்சரை மகிழ்வுபடுத்தினர். இப்பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் வருகின்ற ஆண்டில் தமது நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலைக்கு உடனடியாக தேவையாயிருக்கின்ற ஒன்று கூடல் மண்டபம் மற்றும் நூலக கட்டிடம் போன்றவற்றுக்கான நிதியினை ஒதுக்கித்தருவதாக உறுதியளித்ததோடு இப்பாடசாலையில் காணப்படுகின்ற பாடசாலையின் அடிப்படை தேவைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேசித் தீர்த்துத் தருவதாக தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment