கிழக்கிலங்கையில் மிகப் பிரசித்தி பெற்ற தாந்தா முருகன் ஆலயத்தின் உற்சபம் தற்போது நடை பெற்று வருகின்றது. இன்று இவ் ஆலயத்திற்குச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கு நடைபெற்ற அன்னதான நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அன்னதான நிகழ்வில் கலந்து சிறப்பித்ததோடு, ஆலயத்தின் தீர்த்தக் கேணி புணர்நிர்மாணம் தொடர்பாகவும் ஆலயப் பரிபாலன சபையோடு கலந்துரையாடினார். அது மாத்திரமன்றி குடிநீர்ப் பரச்சினை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. எதிர்வருகின்ற உற்சப காலங்களில் முற்று முழுதாக இப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment