புலம்பெயர்ந்துள்ள எமது மக்கள் உதவிகளை வழங்கினால் ஒரு வருடத்துக்குள் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க முடியும். எனவே அவர்கள் உதவ முன்வர வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் புலம்பெயர்ந்த மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களும் புலம்பெயர்ந்துள்ள எமது மக்களை வரவழைத்து அவர்களது உதவியைப் பெற்றுக் கொள்வதற்கும் முன்வரவேண்டுமென தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.
மீள்குடியேற்ற அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதி அமைச்சர் கருணா அம்மான் இந்த வேண்டுகோள்களை விடுத்தார்.
கருணா அம்மான் தொடர்ந்தும் உரையாற்று கையில் :-
வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அங்கு நடைபெறும் மீள்குடியேற்றம் தொடர்பாக பார்வையிட்டதுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் மாற்று திட்டங்கள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளோம்.
மீள்குடியேற்றம் என்பதை எழுந்தமானத்தில் வெறுமனே செய்துவிட முடியாது. கல்வி, சுகாதாரம் என அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தியபடியே மீள் குடியேற்றத்தை செய்து வருகின்றோம்.
அத்துடன் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் குறைவான திட்டங்களை மட்டுமே மேற்கொண்டு அதிக வருவாயை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனேயே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றம் செய்யும் போது சகலவற்றையும் விமர்சனத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
புலம்பெயர்ந்துள்ள எமது மக்கள் உதவிகளை வழங்கினால் வன்னியி லுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு வருடத்தில் வீடுகளை கட்டிக் கொடு க்கலாம். இதுபற்றி அந்த மக்கள் சிந் திக்க வேண்டும்.
அதேபோன்று புலம் பெயர்ந்த எமது மக்களையும் இங்கு வரவழை த்து இந்த நடவடிக்கைக்கு பங்காளி களாக ஆக்குவதற்கு தமிழ் கூட்ட மைப்பினர் முன்வர வேண்டும் என கூட்டமைப்பினருக்கும் வேண்டு கோளை முன்வைக்கிறேன்.
0 commentaires :
Post a Comment