7/04/2010
| 0 commentaires |
நேபாளத்தில் அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி
நேபாளத்தில் தேசிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.அரசு அமைப்பது தொடர்பாக காத்மாண்டுவில் சனிக்கிழமை நடைபெற்ற முக்கிய அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் எவ்வித உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.÷ஜூலை 7-ம் தேதிக்குள் நேபாளத்தில் புதிய அரசை அமைக்க வேண்டுமென்று அந்நாட்டு அதிபர் ராம் பரன் யாதவ் கெடு விதித்துள்ளார்.÷தேசிய அரசுக்கு யார் தலைமை வகிப்பது என்பதே இப்போது அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முக்கியப் பிரச்னையாக உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள நேபாள மாவோயிஸ்ட் கட்சியினர், நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் சனிக்கிழமை பேச்சு நடத்தினர்.÷அதிபர் விதித்துள்ள காலக்கெடுவுக்குள் புதிய அரசு அமைக்கப்பட்டுவிடும் என்று நேபாள காங்கிரஸ் துணைத் தலைவர் ராம் சந்திரா கூறியுள்ளார்.÷நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் கட்சிதான் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. எனவே எங்கள் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டுமென்று அக்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.÷முன்னதாக மாவோயிஸ்டுகள் தொடர்ந்து கொடுத்து வந்த நெருக்கடி காரணமாக நேபாள பிரதமராக இருந்த மாதவ் குமார் நேபாள், ஜூன் 30-ம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
0 commentaires :
Post a Comment