7/19/2010

கல்வியினால் உலகில் எதனையும் சாதிக்க முடியும் - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்


  வாழைச்சேனை பட்டமுன்படிப்பு வர்த்தக மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மாணவர் பாராட்டு கௌரவிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மாணவர்கள் தற்போதைய சூழ்நிலையில் பாடசாலையின் நேர வரையறைக்குள் கற்கின்ற பாடங்கள் மாத்திரம் வைத்துக்கொண்டு பரீட்சைக்கு தயாராக முடியாது. முழுமையாக ஒரு பரீட்சைக்கு தோற்ற வேண்டுமானால் குறித்த பாடங்கள் தொடர்பான தேடல்கள் அவனுக்கு அவசியமாகின்றது. அத்தோடு மேலதிகமாகவும் மிளக்கற்பதற்காகவும் தனியார் கல்வி நிலையங்களை நாடவேண்டிய நிலை ஏற்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு சில தனியார் கல்வி நிலையங்கள்  சமுகத்தின் தேவை உணர்ந்தும் கல்வியின் சிறப்பினை உணர்ந்தும் தரமாக சில சேவைகளை ஆற்றி வருகின்றது. இவ்வாறான கல்வி நிலையங்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருப்பதனை நாம் கண்கூடாக காணமுடிகின்றது. அதற்கு சிறந்த உதாரணம் இன்று நடைபெறுகின்ற இந்நிகழ்வாகும்.
மாணவர்கள் மீளக் கற்றல் செயற்பாடகளுக்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். அதாவது எந்த ஒரு மனிதனும் தாம் கற்கின்ற  அனைத்து விடயங்களை மீளக்கற்பதன் ஊடாக அதில் ஓர் தன்னிறைவினை அடைகின்றான் குறிப்பாக மாணவர்கள் மீளக் கற்றல் செயற்பாடுகளுக்கு பெற்றோர்கள் பங்களிப்பானது மிக மிக அவசியமாகின்றது. பாடசாலையில் தாம் கற்ற பாடங்களைவ வீட்டிற்கு வந்தபோது மீளக்கற்பதன் ஊடாக தாம் அப்பாடம் சார்ந்த அறிவினை அதிகம் நிலை நிறுத்திக் கொள்வதற்கான வாய்ப்பினை பெறுகின்றான் எனவும் குறிப்பிட்டார்.
நிலையற்ற பொருட்களிடையே வாழ்கின்ற எமக்கு என்றும் அழியாத ஆழ்ந்த உண்மையை எடுத்துரைப்பது கல்வி என முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்கள் தமது பொன்மொழியில் குறிப்பிடுகின்றார். இதே போன்று பல்வேறு அறிஞர்கள் ஞனிகள் சித்தர்கள் உலகிலே தோன்றி மறைந்த அனைத்து பெரியவர்களும் கல்வியின் மகத்துவத்தினன பாறைசாற்றியிருக்கின்றார்கள் எனவே அனைவருக்கும் கல்வி என்பது அவசியமான ஒரு தேவைப்பாடாக இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
எமது கிழக்கு மாகாணத்தை பொறுத்தவகையில்  கல்வி பொருளாதாரம் இவை இரண்டுமே பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. எனவே கல்வியோடு இணைந்தவகையில் பொருளாதாரத்தினையும் ஈட்டுபவதற்கான வழிவகையினை நாம் ஈட்டவேண்டும்.
கல்வியினை நாம் சரியான முறையில் கற்கின்றபோது நாம் எதிர்பார்க்கின்ற ஏனைய அனைத்து துறைகளிலும் குறித்தளவிலான அபிவிருத்தியினை எட்டமுடியும் ஆகவே கல்வி என்பது எமது வாழ்வில் நிறைந்திருக்க வேண்டிய ஒரு சொத்தாகும் ஒரு மாணவனுக்கு பாராட்டு, கௌரவிப்பு என்பது தனது துறையில் தான் மேல்நோக்கி செல்வதற்கு பக்க பலமாக அமையும். ஆகவே திறமையான மாணவர்கள் பாராட்டப்படுகின்ற பட்சத்தில் ஏனைய மாணவர்களும் பாராட்டுகளை பெறுவதற்கு உந்தப்படுகின்றார்கள் இதனூடாக ஆரோக்கியமான ஓர் கல்விச் சமூகம் உருவாக வாய்ப்பு ஏறங்படுகின்றது என தமது உரையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் திறமை மிக்க மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு. அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு வலையக்கல்வி பணிப்பாள் திருமதி சுபாச்சக்கரவர்த்தி, கோரளைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி திரு எல்.தங்கராஜா, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், புத்தியீவிகள், கல்விமான்கள், ஆசிரியர்கள் பெற்றோர், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment