மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் இன்று காலைமுதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
காத்தான்குடி நகரசபை தங்களது எல்லைக்குரிய நிலங்களை ஆக்கிமிப்புச்செய்து வருவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக உண்ணாவிரதமிருப்போர் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி நகரசபை தமது பிரதேசஇ செயலக எல்லையை நிர்ணயம் செய்து தமது பகுதிக்குரி;ய சவ நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று சுமார் 5மணியளவில் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், நடைபெற்றுக் கொண்டிருந்த ஆர்பாட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவந்தார். அதாவது ஆரையம்பதி பரதேச சபைத் தவிசாளர் திருமதி மேரி கிருஜ்ணா தலைமையில் இடம் பெற்ற மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் முதலமைச்சர் பேசி ஓர் முடிவிற்கு வந்ததனையடுத்து அப் போராட்டம் கைவிடப்பட்டது. முதலமைச்சர் அவர்களே நீராகாரம் வழங்கி அதனை நிறைவு செய்து வைத்தார். இதன் போது முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் ஆகியோரிடம் மகஜர் ஒன்றும் கையளித்தார்கள். அம் மகஜரில் பின்வருகின்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
01. மண்முனை பிரதேச சபைக்குரிய வடக்கு எல்லையினுள் காத்தான்குடி நகர சபை அத்து மீறி நிருவாகம் செய்வது உடன் நிறுத்தப்பட வேண்டும்.
02. மண்முனைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியியில் நீதி மன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டதன்படி அரச காணிகளிலுள்ள காத்தான்குடி முஸ்லிம்களும் வேறு பிரதேச முஸ்லிம்களும் உடன் வெளியேற்றப்படவேண்டும். மேலும் இவ்வாறான குடிNயுற்றங்கள் இனிமேலும் இடம்பெறக்கூடாது.
03. கோயில்குளம் பகுதியில் நீர் வினியோகத்திட்டம் அமுல்படுத்தப்படுவதால் பிரதேசத்தில் நீர் வற்றும் நிலை ஏற்படும் இதனால் எமது ஜீவனோபாயமான பயிர்ச்செய்கை அழிவுறும் என்பதால் இச் செயற்றிட்டம் உடனே நிறுத்தப்படவேண்டும்.
04. காங்கேயன் ஓடை வீட்டுத்திட்டம் காங்கேயனோடை மக்களுக்கு அவரவர் வளவினுள்ளேயே கட்டிக்கொடுக்க வேண்டும். பள்ளிவாயல் காணி என்ற பேரில் மாவிலங்குதுறையில் இடம்பெறும் குடிNயுற்றம் உடன் நிறுத்தப்படவேண்டும்.
05. திண்மக்கழிவு சேகரிப்பு இடம் ஒன்று காத்தான்குடி நகரசபையால் எமது பிரதேசத்தில் ஆரம்பிக்க ஏற்பாடாகி வருகின்றது அது உடன் நிறுத்தப்படவேண்டும்.
06. மாவிலங்குதுறையில் பள்ளிவாயல் காணி என்ற பேரில் பரம்பரையாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
07. தமிழர்களின் பூர்வீக பிரதேசமான ஆரையம்பதியில் கடற்கரைப்பிரதேசத்தினுள் ஆட்சி உறுதிகளையும் போலியான ஆவணங்களையும் வைத்து குடியிருப்புக்களை ஏற்படுத்துவது நிறுத்தப்படவேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் இது தொடர்பில் விரைவாக ஓர் குழு அமைத்து வருகின்ற 10நாட்களுக்குள் தீர்வு பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார். அதன் பின்பே போராட்ம் முடிவுக்கு வந்தது. இது தொடர்பான விசேட கூட்டம் ஒன்று நாளை 3மணியளவில் முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்த்தலத்தில் இடம்பெறும் எனவும் அவரது ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இதில் விடேமான காத்தான்குயினைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் பிரமுகார்கள் மற்றும் முக்கியஸ்த்தார்கள் அதேபோல் ஆரையம்பாதி பரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஊர் முக்கியஸ்த்தர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
0 commentaires :
Post a Comment