முத்தமிழ் வித்தகர் சுவாமிவிபுலானந்த அடிகளாரின் நினைவாக கொண்டாடப்படுகின்ற தமிழ் செம்மொழி விழாவிலே கலந்து கொள்வதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஒரு வித்தக மாமுனியின் நினைவு தினத்தில் தமிழ் அறிஞர்கள் வீற்றிருக்கும் அவையில் சிறப்புரை ஆற்ற வாய்ப்பு கிடைத்தமையை என் வாழ்நாள் பாக்கியமாகவே என்ணுகின்றேன்.
இவ்வாறானதொரு பெறுமதிமிக்க காலத்தின் தேவை உணர்ந்த நிகழ்வொன்றினை அரங்கேற்றம் செய்திருக்கின்ற கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கும், ஏற்பாட்டு குழுவினருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உரித்தாகட்டும். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நினைவு நிகழ்வினை தமிழ் செம்மொழி எனும் பெயரில் அவர் பிறந்த மண்ணில் நடாத்துவது சாலப் பொருத்தமானதொன்றாகும்.
உலகில் தோன்றிய ஒவ்வொரு கலாச்சாரங்களும் ஒவ்வொரு நாகரிகமும் அது சார்ந்த மொழியை அடிப்படையாக கொண்டே தோற்றம் பெற்றிருக்கின்றன. ஒரு சமூகத்தின் அடையாள கட்டுமானங்களாக திகழ்கின்ற கலை, கலாச்சார பண்பாடுகள், சமூகவியல் நடவடிக்கைகள் என்பன அக்கலாச்சாரத்திற்குரிய மொழியை அடிப்படையாக கொண்டே தோற்றம் பெறுகின்றன. எனவேதான் மொழி என்பது ஒரு சமூகத்தின் உயிர் நாடியாக போற்றப்படுகின்றது. எனவேதான் உலகில் தோன்றிய பல நாகரீகங்களில் மொழியை பாதுகாப்பதற்காக பல போராட்டங்கள,; பல தியாகங்கள், பல அற்பணிப்புகள் அரங்கேறின. அவ்வகையில் உலகில் தோன்றிய மொழிகளில் தமிழ் மொழிக்கு தனித்துவமான தனியான இடமுண்டு.
உலகில் முதலில் தோன்றியதாக நிருபிக்கப்பட்டிருக்கின்ற குமரிக் கண்டத்தில்; வாழ்ந்த ஆரியர்களிடமிருந்து தமிழ் மொழி உதயம் பெற்றதென்பது சான்றோர்களினால் நிருபிக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய மொழிகளைவிட தமிழ் மொழி மிக நீண்ட காலம் செழிப்புடன் வாழ்வதற்கு அதன் பல தனித்தவமான இயல்புகள் காரணமாக இருந்திருக்கின்றன. தமிழ் மொழி ஏனைய நாகரீகங்களின் தாக்கத்தினால் சவால்களை எதிர்கொண்ட சமயங்களில் தமிழ் மொழியின் தனித்துவத்தினையும் அதன் மகத்துவத்தினையும் உலகெங்கும் எடுத்துச்சென்று தமிழ் மொழியை தலைநிமிரச் செய்வதில் சுவாமி விபுலானந்தரின் பங்கு இமயம்போன்றது.
தமிழ் மொழி, வாழ்வியல் மேம்பாடு குறித்த குறிக்கோளையே மையமாக கொண்டு மக்களை ஒருமுகப்படுத்தும் செழுமையான இலக்கண இலக்கியங்களையும் 2000 அண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே தன்னகத்தே கொண்டு விழங்குகின்றது. இவ்வழியில் பண்டைத்தமிழ் இலக்கியங்களையும், தமிழின் வாழ்வியல் பண்பாட்டினையும் ஆராய்ந்து நூல் வடிவாக்கியோர் பலர் உளர். அவ்வகையில் இயல,; இசை, நாடகம் என்ற முத்தமிழையும் ஆராய்ந்து அவ் ஆய்வினை தமிழர் வாழ்விலும், பண்பாட்டிலும் மேலோங்கச் செய்வதில் சுவாமி விபுலாநந்தரின் பங்களிப்பு அளப்பெரியது. அன்னார் பிறந்த கிழக்கு மண்ணிலே நாமும் வாழ்கின்றோம் என்பதைவிட வேறென்ன பெருமை வேண்டும் நமக்கு.
அன்பார்ந்த அவையோர்களே! சுவாமி விபுலானந்தர் தான் சார்ந்த சமயத்திற்கு மாத்திரமின்றி மொழிக்கும் தன்னையே அற்பணித்த ஓர் உத்தமர். அவரது வாழ்வியல் போதனைகள் ஒரு சமயத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதன்று. உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது என்பதன் மூலம் எல்லா சமயங்களும் எதிர்பார்க்கின்ற உள்ளத்தில் இருந்து பிறக்கின்ற பக்கிதான் ஈடேற்றத்திற்கான வழி என்பதை அருமையாக கூறிச் சென்றுள்ளார். அது மாத்திரமன்றி சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்றைய சமூகத்தின் எதிர்காலத்தினை எதிர்வு கூறிய தீர்க்கதரிசி அவர். உங்களுக்குள் பிரிவுபட்டால் நீங்கள் அடிமைப்படுவீர்கள் என்பதனை அன்றே அவர் கூறுயிருந்தார்.
இன்று எமது நாட்டில் தமிழ் மொழியும் தமிழ் பேசும் மக்களும் பல்வேறுபட்ட சவால்களை சந்திக்கின்ற வேளையில், சுவாமி விபுலானந்தரின் அருள் உரைகளும் அவற்றின் உட்பொருளும் முழுமையாக புரிந்து கொண்டு செயலுருவம் பெறுமாக இருந்தால் அதுவே இச்சவால்களை வெல்வதற்கான சிறந்த உபாயமாக இருப்பது என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.
கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்றும், தாய்த்தமிழ் மொழி என்றும், கன்னித்தமிழ் என்றும,; தித்திக்கும் முத்தமிழ் என்றும் பற்பல பெயர்களால் போற்றப்படுகின்ற தமிழ் மொழியானது உலக மொழிகளிலேயே மூத்தமொழியாக கருதப்படுகின்றது. தமிழ் மொழியின் பாதிப்பும் தாக்கமும் பல்வேறு மொழிக்குடும்பங்களில் காணப்படகின்றமை அதன் தொன்மையையும் பழமையும் பறைசாற்றுகின்றது. இருந்தபோதிலும், நாகரீகங்களின் வளர்ச்சி என்ற போர்வையில் வேற்று மொழிகளின் ஆதிக்கமானது தொன்மையான தமிழ் மொழிக்கும் பெரும் சவாலாக அமைந்துவிடுவதை நாம் நிராகரிக்க முடியாது.
தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் அதிகமாக உள்ள இந்நியாவில் 2004ம் ஆண்டுதான் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்து கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அண்மையில் தமிழ் நாட்டின் கோவை மாநகரில் தமிழ் செம்மொழி மாநாடு தமிழ் மொழியின் சிறப்பையும் வீரியத்தையும் இன்னும் உலகறியச் செய்திருக்கின்றது. அதன் தொடர்தேற்சியாக நாமும் தமிழ் மொழியின் காவலராக விளங்கிய கிழக்கின் மகன் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினத்தினை தமிழ் செம்மொழியாக கொண்டாடுவது சிறப்புமிக்க ஒன்று. தொன்மை மிக்க வரலாற்று பாரம்பரியம்மிக்க தமிழ் மொழியினை இன்றைய நவீன கலாச்சார நாகரீக சவால்களுக்கு முகம் கொடுத்து பேணிப்பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட அனைவருக்கும் உண்டு. இப்பணியில் மத குல பேதம் தடையாக இருக்க முடியாது. சமயங்களால் பிரிந்திருப்பினும் தாய் மொழியால் ஒன்றுபட்டவர்கள் நாங்கள் எனவே அந்த தாய் மொழியை காக்க வேண்டிய பொறுப்பு அனைவரக்கும் உண்டு.
தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் அதிகமாக உள்ள இந்நியாவில் 2004ம் ஆண்டுதான் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்து கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அண்மையில் தமிழ் நாட்டின் கோவை மாநகரில் தமிழ் செம்மொழி மாநாடு தமிழ் மொழியின் சிறப்பையும் வீரியத்தையும் இன்னும் உலகறியச் செய்திருக்கின்றது. அதன் தொடர்தேற்சியாக நாமும் தமிழ் மொழியின் காவலராக விளங்கிய கிழக்கின் மகன் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினத்தினை தமிழ் செம்மொழியாக கொண்டாடுவது சிறப்புமிக்க ஒன்று. தொன்மை மிக்க வரலாற்று பாரம்பரியம்மிக்க தமிழ் மொழியினை இன்றைய நவீன கலாச்சார நாகரீக சவால்களுக்கு முகம் கொடுத்து பேணிப்பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட அனைவருக்கும் உண்டு. இப்பணியில் மத குல பேதம் தடையாக இருக்க முடியாது. சமயங்களால் பிரிந்திருப்பினும் தாய் மொழியால் ஒன்றுபட்டவர்கள் நாங்கள் எனவே அந்த தாய் மொழியை காக்க வேண்டிய பொறுப்பு அனைவரக்கும் உண்டு.
அவ்வகையில் தமிழ் மொழியின் சிறப்பு குறித்தும், அதன் பாரம்பரியங்கள் குறித்தும், அதற்காக பாடுபடும் தமிழ் அறிஞர்கள் குறித்தும் ஆவணங்கள் நூலுருவில் எமது இன்றைய சமூகத்திற்கு கிடைக்கச் செய்யவேண்டும். அதற்காக மேற்கொள்ளப்படுகின்ற அனைத்த முயற்சிக்கும் கிழக்கு மாகாண சபை பக்கபலமாக இருக்கும் என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன். அதே போன்று இவ்வாறான முத்தமிழ் விழாக்கள் கிழக்கு மண்ணில் தொடர்;சியாக இடம்பெறுவதற்கு மாகாண கல்வி திணைக்களத்தை ஊக்கப்படுத்தவதோடு. இவ் அரிய விழாவில் கலந்து கொண்டுள்ள அறிஞர்கள்,கல்வி மான்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன். என நன்றி கூறி நிறைவு செய்தார்.
0 commentaires :
Post a Comment