ஹிலாரி கிளிண்டன், பான் கி மூன் வருகை : காபுல் முழுவதும் படை குவிப்பு
ஆப்கானிஸ்தானில் நாளை (20) நடைபெறவுள்ள சர்வதேச உதவி வழங்கும் மாநாட்டை முன்னிட்டு தலைநகர் காபுலில் கடுமையான பாதுகாப்பு நடை முறைகள் அமுலுக்கு வந்துள்ளன. ஆயிரத் துக்கும் அதிகமான மேலதிக இராணுவம் காபுலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை யுத்தம் நடைபெறும் மாகாணங்களில் நேரடிச் சமரில் ஈடுபட்ட துருப்புக்களாகும்.
இன்னும் மேலதிக பொலிஸார், உளவுப் படை அதிகாரிகளும் காபுலுக்கு வந்துள்ளனர். நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்த விசேட இராணுவ வாகனங்கள், ஹெலிகொப்டர்களும் காபுலைச் சுற்றி வலம் வருவதுடன் மாநாடு நடைபெறும் பகுதிகளிலுள்ள வீதிகளில் படையினர் 24 மணி நேர ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
மாநாட்டை இணைக்கும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் மிக நவீன கெமராக்களும் முக்கிய சந்திகளில் பொருத்தப்பட்டுள்ளன. காபுல் பொலிஸ் அலுவலகத்தில் ஏற்கனவே பதிவுசெய்ய ப்பட்டுள்ள இலக்கங்களையுடைய வாகனங்களே மாநாட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜூன் மாதம் காபுலில் நடந்த ஜிர்கா மாநாடு (பழங் குடியினர்) மீது தலிபான்கள் இரண்டு ரொக்கட் தாக்குதல்களை நடத்தினர். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நாளைய மாநாட்டில் இடம்பெற வாய்ப்பில்லையென இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்புக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளோம்.
எனினும் நூறு வீத உத்தரவாதத்தை வழங்குவதென்பது கடினமாக காரியம் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். நாளை 20ம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டில் எழுபது நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவற்றில் 40 பேர் வெளிநாட்டமைச்சர் களாவர். ஐ.நா. செயலாளர் பான் கி மூன், அமெ ரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளிண் டனும் காபுல் வரவுள்ளனர். ஊழலை ஒழித்தமை, அதிகார துஷ் பிரயோகத்தை ஒழித்தமை, முன்னர் வழங்கிய வெளிநாட்டு உதவிகளைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைகள் தொடர்பான அறிக்கைகளை ஆப்கான் அரசாங்கம் நாளைய மாநாட்டில் சமர்ப் பிக்க வேண்டும்.
இதன் பின்னரே புதிய உதவிகளைப் பெறக்கூடியதாக இருக்குமென அவதானிகள் தெரிவித்துள் ளனர். இம்முறை 13 பில்லியன் டொலர் உதவியை ஆப்கான் அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாக எதிர்பார்க்கின்றது. ஆனால் எவ்வளவு தொகை வழங்கப்படுமென்பது தெரியாமலுள்ளது.
0 commentaires :
Post a Comment