நாவிதன்வெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட காணியில் அமைக்கப்பட இருக்கின்ற கலாச்சார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் த.கலையரசன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது விசேட உரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்
கிழக்கு மாகாணம் கல்வி வளர்ச்சியில் பின்நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது. இதிலும் விசேடமாக பின்தங்கிய பிரதேசங்களை அன்டிய அதாவது கிராமப்புற மக்களினது கல்வி பல்வேறு வகைகளில் பாதிப்படைந்து செல்கின்றது. அதிலும் மிகவும் விசேடமான காரணம் இக்கிராமங்களில் அதிகமாக காணப்படுகின்ற மதுபாவனையும், அளவுக்கதிகமான சாராயக்கடைகளுமே. மிகவும் கஸ்டப்பட்டு கூலிவேலை செய்து உழைக்கின்ற குடும்பத்தினது தேவைக்கோ, பிள்ளையினது கல்விக்கோ பயன்படுத்தாது தனது உடலை சீரளிக்கின்ற மதுவிற்கே அதிகமான பெற்றோர்கள் செலவளிக்கின்றார்கள். இவ்வாறு மதுவினை அருந்திவிட்டு வீட்டில் தகராரில் ஈடுபடுகின்ற போது பிள்ளை கல்வியினை கற்பதற்கான சூழல் இல்லாது போகின்றது. இதனபல் அப்பிள்ளையின் கல்வி சீரழிக்கப்படுகின்றது.
இவ் நாவிதன்வெளி பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் சிறந்த உதாரணமாக அமையும். இப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 7000 பேருக்கு ஒரு சாராயக்கடை அமைந்திருக்கின்றது. 20 கிராம சேவையாளர் பிரிவினைக் கொண்ட இப்பிரதேசத்தில் சுமார் 3 சாசாயக்கடைகள் காணப்படுகிள்றன. இவ்வாறு வளர்ச்சியடையாத பிரதேசங்களில் இந்நிலமை காணப்படுமேயானால் நாம் எவ்வாறு எமது சமுகத்தைமுன் கொணர்வது. எனவே நான் முதலமைச்சர் என்ற வகையில் குறிப்பிடுகிறேன். இது போன்ற சமூகத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற செயற்பாடுகளுக்கு யாரும் உடந்தையாக இருக்கக் கூடாது. எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ குறிப்பிட்டிருக்கின்றார், புதிதாக எந்தவொரு மதுபாண சாலைக்கும் அனுமதிப்பத்திரம் வழங்கக்கூடாது என்று. எனவே எமது நாட்டின் ஜனாதிபதியே எமக்கு பலம் தந்துள்ளார். எனவே இது போன்ற நடவடிக்கைகளுக்கு யாராவது அரசியல் வாதிகளால் அல்லது அதிகாரிகள், ஊர் முக்கியஸ்த்தர்கள் உடந்தையாக இருந்தால் அவர்களுக்கு எதிராக மக்கள் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது. இப்பிரச்சனை நேரடியாக மக்களாகிய உங்களையே தாக்குகின்றது. எனவே நீங்கள்தான் இதில் அதிக அக்கறை கொண்டு செயற்படவேண்டும். இது தொடர்பில் உடனடியாக உரிய அதிகாரிகள் அரசியல்வாதிக்கு தெரியப்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்திலே மதுபாவனை அதிகம் இடம்பெறுகின்ற மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment