7/14/2010

அழிவடைந்த எமது சமூகம் அனைத்து துறைகளிலும் கட்டியெழுப்புவதில் அடித்தளமாக அமைவது கல்வியே.-கிழக்கு மாகாண முதலமைச்சர்.

img_8473
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடியில் இயங்கிவரும் கல்வி அபிவிருத்தி சங்கத்தில் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு சங்கத்தின் நிர்வாகி திரு தேவசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைக்கப்பட்டிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் இருக்கின்ற வறிய மாணவர்களை இனங்கண்டு எவ்வாறு கல்வி வளர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கில் இக்கல்வி அபிவிருத்தி சங்கம் செயற்படுகின்றமை பாராட்டுக்குரியது. சுமார் 18ஆண்டுகளாக இச்சேவையினை ஆற்றிவருகின்ற இக்கல்வி அபிவிருத்திச்சங்கத்தில் இணைந்து கொண்டு கல்வி நடவடிக்கையினை மேற்கொள்கின்ற மாணவர்கள் பொதுவாக கல்வி நடவடிக்கை மாத்திரமின்றி ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தனது திறமையினை இனங்காட்டி பல சாதனைகளை படைத்திருக்கின்றார்கள். இவ்வாறு சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் உரையாற்றுகையில் எமது தமிழ் சமூகம் கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலுமே பின்நோக்கியே சென்றிருக்கின்றது. ஆனால் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற இந்தசாதனை சூழலை பயன்படுத்திகொண்டு நாம் எந்தத்துறையிலும் வீழ்ச்சி கண்டிருக்கின்றோமோ. அவ் அனைத்து துறைகளும் நாம் தன்னிறைவு அடைய வேண்டுமாயின் அதற்கு அடித்தளமாய் அமைவது கல்வியே ஆகும், கல்வி இல்லாத ஒரு சமூகத்தினை நாம் கனவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. எந்த ஒரு செயற்பாட்டினையும் நாம் சீராக மேற்கொள்ள வேண்டுமானால் அதற்கு கல்வியே உறுதுணையாக இருக்கின்றது. எனவே பாடசாலையில் கல்வியை கற்கின்ற அனைத்து மாணவர்களும் எதிர்காலத்தில் ஒரு முக்கிய இலக்கினை அடைவதில் இருந்து அதன் வழியே செல்லவேண்டும் அப்போதுதான் நலிவடைந்த எமது சமூகம் நிலையாக நிற்பதற்கும் தூரநோக்கு சிந்தனையுடன் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் உறுதுணையாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment