7/28/2010

ஐரோப்பிய யூனியனில் துருக்கியை சேர்ப்பதிலுள்ள தடைகளைக் களைவோம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரோன்

துருக்கியை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பதிலுள்ள தடைகளை களைய பிரிட்டன் கடுமையாகப் போராடும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரோன் உறுதியளித்தார். துருக்கிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் டேவிட் கெமரோன் அந்நாட்டு ஜனாதிபதி தையிப் எடோர்கன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்தார்.
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் துருக்கியின் பொருளாதாரச் செல்வாக்கு காஸா இஸ்ரேல் முரண்பாடுகளைக் களைவதில் துருக்கிக்கு உள்ள அக்கறைகளையும் டேவிட் கெமரோன் பாராட்டினார். ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் உள்ளன. இதில் 28வது நாடாக துருக்கியைச் சேர்த்துகொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் அவை தோல்வியில் முடிந்தன.
இதனால் இவ்விடயத்தில் துருக்கி மெதுவான போக்கைக் கடைப்பிடிக்கின்றது. பிரான்ஸ் துருக்கியை ஐரோப்பிய யூனியனில் இணைப்பதை எதிர்க்கின்றது. இவ்வாறான நிலையிலே பிரிட்டன் பிரதமர் இக்கருத்தை வெளியிட்டார். அரசியல் பொருளாதார ரீதியாக துருக்கி ஐரோப்பிய யூனியனுக்கு உதவ முடியும்.
அன்காராவிலிருந்து புருஸெஸ்வரை உறவுப் பாதையை ஏற்படுத்த வேண்டும் இதற்காக பிரிட்டன் இடையறாது பாடுபடும் என்றும் பிரதமர் டேவிட் கெமரோன் குறிப்பிட்டார். ஐரோப்பா நேட்டோ படைகளின் பாதுகாப்புக்கு துருக்கி எதைச் செய்தது? எங்களை விடுத்து (ஐ.யூனியன்) ஆப்கானிஸ்தானில் துருக்கி என்ன செய்கின்றது? இவற்றை எண்ணினால் என்னை ஆத்திரம் கொள்ள வைக்கின்றது. இந்நிலைப்பாட்டில் துருக்கி ஐரோப்பிய யூனியனில் இணைந்தால் அது ஆபத்தை ஏற்படுத்துமென்றார் கெமரோன்.


0 commentaires :

Post a Comment