ஆலோசனைக் குழுவை அமைப்பதற்கு பான் கி மூன் எடுத்த தான்தோன்றித் தனமான தீர்மானத்தை முழுமையாக எதிர்ப்பதாக ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் வெளிநாட்டுச் சக்திகள் இவ்வாறு இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கு மீண்டும் அனுமதிக்க வேண்டாம் எனவும் அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச எம்.பி. இந்த வேண்டுகோளை நேற்று விடுத்தார்.
ஆலோசனைக் குழு அமைக்கும் விடயத்தில் ஐ. நா. செயலாளர் நாயகம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
இதன் மூலம் அவர் ஐ. நா. வில் அங்கம் வகிக்கும் அனைத்து அங்கத்துவ நாடுகளையும் கொச்சைப்படுத்தியுள்ளார்.
ஆலோசனைக் குழுவை அமைப்பதன் ஊடாக ஐ. நா. வின் சாசனத்தையும் பான் கி மூன் மீறியுள்ளார். மற்றுமொரு நாடு தெம்பாக இவ்வாறான ஒரு நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைப்பதாயின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அனுமதியை அவர் பெற்றிருக்கவில்லை என்றும் ஐ. நா. சாசனத்தை மேற்கோள்காட்டி சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment