எகிப்தின் துறைமுகத்தை நோக்கி இக்கப்பல்கள் செல்வதாகவும் காஸாவை நோக்கியே இந்நிவாரணக் கப்பல்கள் புறப்பட்டள்ளதாகவும் இரண்டு வகையாக அறிவிக்க்பபட்டுள்ளது. லிபிய ஜனாதிபதியின் இரண்டாவது மகன் இந்நிவாரணப் பொருட்களை ஏற்பாடு செய்து கப்பல்களை அனுப்பியுள்ளார். காஸாவை நோக்கி கப்பல்கள் செல்வதாக கடாபியின் மகன் அறிவித்துள்ள போதும் எகிப்தின் துறைமுகத்துக்கே கப்பல்கள் புறப்பட்டுள்ளதாக கிரேக்க அரசாங்கம் அறிவித்தது. இது முற்றிலும் மனிதாபிமான நோக்கத்தைக் கொண்டது. ஆத்திரத்தைத் தூண்டும் நோக்கம் இதில் இல்லையென வும் கப்பலை அனுப்பிய அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாயிரம் தொன் எடையுள்ள பொருட்கள் இக் கப்பலிலுள்ளன. காஸாவை நெருங்கும் போது எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாமல் இருக்கவேண்டும். அரசியல், மனிதாபிமான முக்கியத்துவங்கள் இஸ்ரேலின் காஸா மீதான முற்றுகையை உடைக்கும் என இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எம்.பியொருவர் அழுத்தமாகக் குறிப்ப்ட்டார். காஸாவுக்கு நிவாரணப்பொருட்கள் புறப்பட்டிருப்பது தொடர்பாக இஸ்ரேல் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிந் துகொள்ள கிரேக்க அரசாங்கம் தொடர்புகளை மேற்கொண்டது. மொரோக்கோ, கிரேக்க அரசாங்கங் களுடன் இது தொடர்பாக எங்களது (இஸ்ரேலின்) நிலைப்பாட்டை விளக்கினோம். காஸா முற்றுகையை உடைத்துக்கொண்டு கப்பல்கள் செல்லாமல் பாதுகாப்பது அந்நாடுகளின் பொறுப்பு என தாங்கள் கூறியதாக இஸரேல் வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டார். அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகள் உட்பட முழு உலகமும் நிவா ரணக் கப்பல்கள் காஸா நோக்கிச் சென்று கொண்டிருப்பதை ஆர்வத்துடன் அவதானித்தவண்ணமுள்ளன. மே 31ம் திகதி இவ்வாறு நிவாரணக் கப்பல்கள் வந்தபோது இஸ்ரேல் இராணுவம் கப்பல்களைத் தாக்கியது. இதில் துருக்கியைச் சேர்ந்த 09 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் இத்தாக்குதலை உலக நாடுகள் வன்மையாகக் கண்டித்தன. | |
7/12/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment