7/27/2010

வெனிசூலா மீதான அச்சுறுத்தல் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகம் துண்டிக்கப்படும் - ஜனாதிபதி சாவெஸ்

வெனிசூலாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகத்தை துண்டிப்போம். இதனால் நாங்கள் கல்லைச்சாப்பிடக் கூடிய நிலையேற்பட்டாலும் அதை எதிர்கொள்ளத்தயாரென வெனிசூலா ஜனாதிபதி ஹுசோ சாவெஸ் தெரிவித்தார். கொலம்பியாவுடனான இராஜதந்திர உறவுகளை கடந்த வாரம் துண்டித்துக் கொண்ட பின்னர் சாவெஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதை அறிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு எச்சரிக்கையை அமெரிக்காவுக்கெதிராக வெனிசூலா ஒருபோதும் விடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொலம்பியாவின் பதவி விலகிச் செல்லும் ஜனாதிபதி அல்வரோயுரைப் அண்மையில் வெனிசூலாவைக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். கொலம்பியாவின் பார்க் போராளிகளை வெனிசூலா வளர்ப்பதாகவும் கொலம்பியாவுக்கெதிராக வன்முறைகளைத் தூண்டுவதாகவும் அல்வரோயுரைப் குற்றம் சாட்டினார்.
இதை நிராகரித்த வெனிசூலா ஜனாதிபதி சாவெஸ், அமெரிக்காவே இவ்வாறான வீண் சந்தேகங்களை பிராந்திய நாடுகளுக்கிடையில் உண்டு பண்ணுகின்றது. வெனிசூலாவு க்கெதிரான தாக்குதல்கள், சமூகப் புரட்சிகள்.
கொலம்பியாவிலோ அல்லது உலகின் எந்த மூலையிலுமோ நடந்தாலும் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகம் துண்டிக்கப்படுமென்றும் வெனிசூலா ஜனாதிபதி சொன்னார்.

0 commentaires :

Post a Comment